முன்னொரு காலத்தில் நான் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் பள்ளி வருடாந்திர விளையாட்டு தினத்தில் ஸ்லோ சைக்கிள் ரேஸ் என்றொரு பந்தயம் இருக்கும். நூறு மீட்டர் தொலைவை சைக்கிளில் கடக்கவேண்டும். யார் கட்டக்கடைசியாக வருகிறாரோ அவரே ஜெயித்தவர் என்பது விதி. ஒரு மிதி அழுத்திப் போட்டால் போச்சு. பெடலைப் பெண் மாதிரி தொடவேண்டும். அழுத்தாமல் வருடவேண்டும். அங்குல அங்குலமாக நகர்த்தவேண்டும்...
நீரில் மிதக்கும் தேசம்
நிகழும் விக்ருதி வருஷம் ஆவணி மாதம் சுக்லபட்சம் நாளது தேதி வரைக்கும் இந்தப் பூவுலகில் நிகழ்ந்த மாபெரும் இயற்கைப் பேரழிவுகளில் ஒரு நாலஞ்சாவது நமக்கு உடனே உடனே நினைவுக்கு வரக்கூடியவை. ஒண்ணுமே தோன்றாவிட்டாலும் பல்ராம் நாயுடுவை நினைவுகூர்ந்து, அந்த சுனாமியைச் சட்டுபுட்டெனச் சொல்லிவிடுவோம். கொஞ்சம் யோசித்து குஜராத் பூகம்பம் என்போம். பரந்த அல்லது பறந்த அனுபவஸ்தர்கள் அமெரிக்க மண்ணிலே, சப்பானிய யென்னிலே...
இன்னொரு கந்தசாமியின் கதை
வீதியின் இருபுறமும் குழிகள் தோண்டி, சவுக்குக் கட்டைகள் நட்டார்கள். எங்கிருந்தோ பிடுங்கிவரப்பட்ட தென்னை ஓலைகள் சரசரவென்று பின்னப்பட்டுக் கூரை ஏறின. உபயதாரர் பெயர் எழுதப்பட்ட குழல் விளக்குகள், பொதுவில் உருவப்பட்ட மின்சாரத்தில் மினுங்கி எரியத் தொடங்கின. லவுட் ஸ்பீக்கரில் எல்.ஆர். ஈஸ்வரி உயிர் பெற்றதும் என் வீட்டு வாசலில் ஆடி மாதம் பிறந்தது. நம் நாட்டில் கேள்வி கேட்க முடியாத விஷயங்களுள் இதுவுமொன்று...
இட்லி உப்புமா 1
எனக்கு இட்லி உப்புமா ரொம்பப் பிடிக்கும். வெறும் இட்லி, வெறும் உப்புமாவில் ரசிக்கத்தக்க நூதனங்கள் ஏதும் கிடையாது. தொட்டுக்கொள்ளும் ஐட்டம் சரியாக இல்லாவிட்டால் எந்த மனுஷகுமாரனும் தின்னமாட்டான். ஒரு புதினா சட்னியோ, தக்காளி சட்னியோ, சாம்பாரோ, வேறு ஏதாவதோ இல்லாமல் இரண்டு வஸ்துக்களையும் வாயில் வைக்க முடியாது. இதுவே இட்லியை உதிர்த்துப் போட்டு உப்புமாவாக்கிப் பாருங்கள். வெந்த சமாசாரத்தை வாணலியில் இட்டு...
செம்மொழி மாநாடு 2010
ஆரவாரமான எதிர்ப்புகள், ஆயிரம் குற்றங்குறைகள், ஏற்பாட்டுக் குளறுபடிகள், கூட்டம், நெரிசல், தள்ளுமுள்ளு, குழப்படி இன்னபிற. இவ்வரிசையில் பட்டியலிட இன்னும் பல நூறு இருந்தாலும் செம்மொழி மாநாடு சிறப்பாகவே நடந்து முடிந்திருக்கிறது. கணக்கற்ற கோடிகள் செலவில் எதற்காக இப்படியொரு மாநாடு என்று ஆரம்பித்து, இதனால் சாதித்தது என்ன என்பது வரை ஒரு புத்தகமே வெளியிடக்கூடிய அளவுக்குக் கேள்விகள் இருந்தாலும், உலகம்...
நாயகி
1 ஒரு ரயில்வே ஸ்டேஷனுக்குரிய எந்த இலட்சணமும் அந்த ஸ்டேஷனுக்கு இல்லை. மிக நீண்டதொரு தூக்குமேடை போல் காட்சியளித்தது. ஆளற்ற வெறுமையும் எரியும் வெயிலும் அலைபுரளும் கானல் கோட்டு வெளியும் கண்ணில் தென்படாமல் குலைத்து அடங்கும் நாய்க்குரலும் சற்று அச்சமூட்டுவதாயிருந்தது. மிஞ்சிப் போனால் நூறு குடும்பங்கள் கூட அங்கிருக்காது எனப்பட்டது. ஜமீன், தன் சொந்தச் செலவில் கட்டிக் கொண்ட ஸ்டேஷனுக்கு அரசு ரயில்கள்...
ஒரு முக்கிய அறிவிப்பு
//அன்புள்ள பாரா! உங்களின் சில கட்டுரைகள் வாசித்தது, யூடுயூபில் நீங்கள் பேசியதன் தொடர்ச்சியாக கிழக்குக்கு புத்தகம் எழுத விருப்பம் தெரிவித்துச் ஓரிரு மாதம் முன்னால் உங்களுக்கு மின்னஞ்சல் எழுதியிருந்தேன். என்னைப்போலவே பலர் புத்தகம் எழுதுவது பற்றின அடிப்படைகளைக் கேட்டிருப்பதால் பின்னர் விளக்குவதாக சொன்னீர்கள். மீண்டும் நினைவுப் படுத்தியபோது, கடிதமாக எழுதுவதைவிட நேரில் பேசுவது பலனளிக்கும் என்று...
பக்தன்
எப்போதும்போல் ஒழுங்காக இணையத்தில் எழுத முடியாத சூழல். கொல்லும் பணிகள். எனவே அவ்வப்போது ஆவதுபோல் அவ்வப்போது மட்டுமே இப்பக்கம் வர முடிகிறது. இடையே, ஏன் எழுதவில்லை, என்ன ஆயிற்று என்று அக்கறையுடன் தனி அஞ்சலில் விசாரிக்கும் நண்பர்களுக்கு ஒரு சொல்: வேலை அதிகம், வேறொன்றுமில்லை. இதுவும் எப்போதும் போலவே. இடையே வெகுநாள்களுக்குப் பிறகு ஒரு சிறுகதை எழுதினேன். இன்று தினகரன் வசந்தத்தில் அது பிரசுரமாகி உள்ளது...