ஆக சூனியன் என்கின்ற உருவகம் மனித மூளையின் சிந்தனைப் பகுதியுடன் தொடர்புடையது. அப்படி அந்த சிந்தனையை தன் கட்டுக்குள் முழுவதுமாக கொண்டு வந்து விடக் கூடிய திறமை படைத்த சூனியன் ஏன் மனிதர்களின் மூளையில் இருக்கின்ற கடவுள் என்கின்ற பகுதியை மட்டும் ஒரேயடியாக அழித்து விடக்கூடாது? அதை செய்யாமல் இது என்ன தலையை சுற்றி மூக்கை தொடும் வேலை? ஆனால் ஒட்டு மொத்த நீல நகரத்தையும் தன்கட்டுப்பாட்டில் கொண்டுவர அவன்...
கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 14)
சூனியர்களுக்கு பெயர் இல்லை என் கையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கதையில் வந்தால் எப்படி நினைவில் வைத்திருப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நல்லவேளை ‘வாசகர்களை குழப்புவதற்காக பாரா செய்த சதி’ அது என்பதை சூனியன் வெளிப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி. உடலும் மனமும் உணர்வும் இல்லாத சூனியனைக் கூட இந்த நீல நகரம் உணர்ச்ச மயமாக்கி விடுகின்றது என்றால் பூமியில் இருந்து வந்த மனிதர்கள் எம்மாத்திரம்...
கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 13)
கண்ணெதிரே தெரிகின்ற அனைத்து அசாத்தியங்களையும் மீறி அதீத தன்னம்பிக்கையுடன் தன் மனைவியை சமாதானப்படுத்த கோவிந்தசாமி எடுக்கின்ற பிரயத்தனங்களை வாசித்தால் எரிச்சல் தான் வருகிறது. எதற்கு இத்தனை பரிதவிப்பு? சில மனிதர்களின் அசட்டுப் பிடிவாதங்களை நீல நகரத்தின் சுதந்திரம் கூட மாற்ற முடியாது போலும். ( சரி, இருக்கட்டும். கதை நகர வேண்டுமே?). ஆனால் அவனுக்கு முகக்கொட்டகையில் கிடைக்கின்ற தெரிவுகள் பூமியில்...
கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 12)
நீல நகரத்தில் எல்லாவிதமான அபத்தங்களும் உண்டு. அவை வெறும் அபத்தங்கள் அல்ல. பகுத்து அறியும் தகுதி கொண்ட மூளையும் தர்க்கபூர்வமாக சிந்திக்கத் தெரிந்த மனமும் வாய்த்த போதிலும் கூட அவை இரண்டையும் சோம்பேறித்தனத்தாலும் அல்லது அலட்சியத்தாலும் மழுங்கடித்து விட்டு மேலெழுந்தவாரியாக கும்பலோடு கோவிந்தா என்று உளறிக் கொட்டும் நீல நகரவாசிகளை இதை விடச் சிறப்பாக விவரித்து விட முடியாது. பெண்கள் சார்ந்த நையாண்டிகள்...
கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 11)
ஆக இதற்கு முந்தைய அத்தியாயத்தில் நாள் ஊகித்தது தவறு என்று புரிந்து விட்டது. இன்னும் எனக்கு கதை சரிவர பிடிபடவில்லை போலும். ஆனால் சுவாரசியம் மட்டும் குன்றவில்லை. சூனியனுடைய 20 லட்சம் பேரை அழிப்பது என்கின்ற இலக்கு மக்களைக் கொல்வது அல்ல. அவர்களுக்கு இருக்கும் கடவுள் பக்தியை கொள்வது தான். அப்படி இருக்கையில் பிரபல்யமான அரசியை பார்த்து மக்கள் அதிக கிளர்ச்சியும் பதற்றமும் அடைவார்கள் என்கின்ற சூரியனுடைய...
கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 10)
Fake ID, கபட வேடதாரி இரண்டுக்கும் இடையில் இந்த நாவலுக்கு வேறு ஒரு பெயர் வைக்க எண்ணி நண்பர்களுடன் கலந்தாலோசித்ததைப்பற்றி பாரா முன்பொரு முறை எழுதி இருந்தார். என்னால் அப்போது இரண்டு பெயர்களை அனுமானிக்க முடிந்த போதிலும் அவற்றுள் ஒன்றை உறுதிப்படுத்த முடியவில்லை. ஒன்பது அத்தியாயங்கள் வாசிக்கும் வரை சூனியன் தான் கபட வேடதாரி ஆக இருக்குமோ என்றும் அவருக்கும் நான் யோசித்து வைத்திருந்தவருக்கும் எந்தத்...