இந்த அத்தியாயத்தில் பாரா அவர்கள் கடந்தகால அரசியலை தொடர்பு படுத்தி எழுதியுள்ளார். பாரா எந்தளவுக்கு வரலாறும், தத்துவமும் நேர்த்தியாக பேசுகிறாரோ, அதே அளவுக்கு அவருக்கு பகடித்தன்மையும் கைக்கூடிவரும். இந்த அத்தியாயத்திலும் அவர் மேற்கொண்டிருக்கும் சில நையாண்டித்தனம் அலாதியானவை. //என்ன பெரிய உண்மை, என்ன பெரிய யதார்த்தம்! உண்மைகளுக்கு நிறம் இருப்பதில்லை. ருசி இருப்பதில்லை. உண்மையுடன் கூடிய ஒரு வாழ்வில்...
கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 9)
கபடவேடதாரியில் நீலநகரம் ஒன்று உருவானதிலிருந்தே சிரிப்புக்கு பஞ்சமில்லை. குறிப்பாக இந்த அத்தியாயத்தின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை வாசிப்பவர்களை சலிப்படையாது சிரிக்க வைத்தே கூட்டி செல்கிறார் பாரா. அதிலும் அந்த கிரைப் வாட்டர் அல்டிமேட். கோவிந்தசாமியின் மடத்தனத்தை ஒவ்வொரு அத்தியாயம் நகர நகர மிகுதியாக புரிந்துக் கொள்ளமுடிகிறது. இப்பிடி பட்டவனை சாகரிகா வெறுக்காமல் என்ன செய்வாள். அவள் அந்த அளவிற்கு...
கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 8)
பாரா அவர்கள் அழுத்தமான நல்ல அரசியல் பேசியிருக்கிறார் இந்த அத்தியாயத்தில். சங்களின் பல அம்சங்களையும் கோவிந்தசாமியின் கதாப்பாத்திரத்தில் நேர்த்தியாக அமர வைத்திருப்பது தெள்ளத்தெளிவாக இந்த அத்தியாயத்தில் வெட்ட வெளிச்சம் ஆகிறது. இந்திய தலைநகரிலிருந்து புறப்பட்டு வந்து மாநாட்டில் பேசிய அந்த தலைவரின் ஹிந்தி மொழி புரியாத போதிலும், கோவிந்தசாமி உணர்ச்சிவசப்பட்ட இடம் மடத்தனமாக இருந்தது. அதுவே அவனை முழுமையாக...
கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 7)
ரகசியம்! நம் வாழ்வை சுவாரஸ்யமாக வைத்துக்கொள்ள தூண்டுகிறது தானே. ஒருவர் நம்மிடம் ஒரு விஷயத்தை சொல்லவந்து, அதை தொடங்கிய நொடியில், அப்புறம் சொல்கிறேன் என சொல்லிவிட்டு சென்றால், நாம் மண்டையை பிய்த்துக்கொண்டு அவரை பின்தொடர்கிறோம் தானே. ரகசியங்கள் நிறைந்த நம் உலகில் சில உப்புசப்பில்லாத வாழ்வுகூட இனிகிறதல்லவா. ஆனால் பாராவின் நீலநகரம் அவ்வாறில்லை. அதில் அனைவரின் வாழ்வை அனைவரும் அறிவர். இதுவே இந்த...
கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 6)
மீண்டும் மாய உலகினை நோக்கி பயணிக்கிறது கபடவேடதாரி. வித்தியாசமாக சித்தரிக்கபட்டிருக்கும் நீலநிறவாசிகளின் தோற்றங்கள் மேலும் ஆர்வமாக கதையை வாசிக்க வைக்கிறது. அந்த தோற்ற சித்தரிப்பு கொடுரமாக இருப்பினும், வேறு மாதிரியான ஓர் உலகினில் பயணிப்பது அருமையாக இருக்கிறது. சூனியனை போலவே கோவிந்தசாமியை போலவே நானும் அதிர்ச்சியில் தான் இருக்கிறேன் அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை. ஒருவேளை கோவிந்தசாமியின் தோற்றமும்...
கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 5)
ஏன் தனக்கு கோவிந்தசாமியை பிடித்துப்போனது என்பதற்கு சூனியன் சொல்லிய காரணம் மிகவும் பிடித்திருந்தது. மூடனாக இருப்பது தவறல்ல. ஆனால் அவ்வாறு இருந்துக்கொண்டு அதை உணராது செய்யும் மேட்டிமைத்தனங்களை கண்டால் யாருக்கும் எரிச்சலாக இருக்குமல்லவா. இங்கு கோவிந்தசாமி அவ்வாறு இல்லை. அவனை மூடனாகவே ஆசிரியர் கதையில் சித்தரித்திருக்கிறார். அதை அவன் உணரவும் செய்கிறான். ஆனால் மாற்றிக்கொள்வதில்லை. அவ்வளவுதான். அந்த...