மாயாஜால உலகிலிருந்து நழுவி எதார்த்த உலகிற்கு பயணிக்க தொடங்கியிருக்கிறது. பிரமாண்டமாக பயணித்த முந்தைய அத்தியாயங்களில் இருந்து சற்று ஆசுவாசமாக இந்த அத்தியாயம் சிரிக்க வைத்து பார்க்கிறது. அதிலும் அந்த கடைசி வரி. கோவிந்தசாமிக்கு எதிர்மறையான சாகரிகா. எதிலும் அவளுக்கு இவன் பொருத்தமில்லை. இது எப்பிடி பயணிக்கும் எனும் ஆவல் எனக்குள் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. மாய உலகில் பயணிக்கும் அத்தியாயங்களில்...
கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 3)
பெரும்பாலும் வாய்ப்பை நோக்கியே நாம் நகர்ந்து கொண்டிருப்போம் அல்லது வெறுமனே அத்தக்க சமயத்துக்காக காத்திருப்போம். ஆனால் சிலரே வாய்ப்பை ஏற்படுத்தி கொள்வார்கள். அப்பிடிதான் இக்கதையில் அந்த சூனியனும் தனக்காக வாய்ப்பை தானே ஏற்படுத்தி கொள்கிறான். அவன் நல்லவனா கெட்டவனா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்த மனோதிடம் எனக்கு பிடித்திருந்தது. இறக்கும் தருவாயிலும் தைரியமாக பதில் சொல்லும் அந்த தோரணை...
கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 2)
மானிடர்களின் உலகிலிருந்து சூனியர்களின் உலகம் முற்றிலும் வேறுபட்டதாக இருப்பினும், மனிதர்களுக்கு உண்டான அந்த பழி வாங்கும் குணம் சூனியர்களிடம் மேலோங்கி நிற்கிறது. ஆனால் சூனியர்களின் பலிவாங்கும் குணம் நியாயத்தின் போர்வையில் பதுங்கி இருப்பதாய் தான் படுகிறது. மனிதர்களிடத்தில் இறுதியாய் எஞ்சியிருக்கும் எலும்பினை சூனிய உலகில் பெரும் மதிப்பாய் கருதுவாய் பாரா அவர்கள் எழுதியிருக்கிறார். தனது மனைவிக்காக...
கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 1)
சூனியனிடம் இருந்து தொடங்குகிறது இத்தொடரின் முதல் அத்தியாயம். சூனியனை சாத்தானிடமிருந்தும் கெட்ட சக்தியிடமிருந்தும் வேறுபடுத்தி கூறும் அந்த வரிகள் வாசிப்பதற்கு வியப்பாக இருந்தது. சாத்தான்களின் சிறைக்கூடமென்பது ராட்சச வேர்க்கடலையின் ஓட்டுக்குள் சிறை வைத்து ஒரு பெரிய அடுப்பில் வைத்திருப்பது போல மிகவும் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருந்தார் பாரா. சூனியர்களின் மரணத்தை மனிதர்களின் மரணத்திலிருந்து...