கோவிந்தசாமி என்னதான் சாகரிகாவை ஆத்மார்த்தமாகக் காதலித்தாலும், சாகரிகாவைப் பொருத்தவரை கோவிந்தசாமி ஒரு மூடன் அவர்களின் காதல் வெறும் குப்பை. இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது- பெண்கள் ஒன்றை வேண்டாமென்று வெறுத்து விட்டார்களென்றால் அவர்களுக்கு அது வேண்டாம். அது ஓர் இரகசியமற்ற நகரம். இரகசியமற்ற மக்கள் வாழுமிடம். அங்கு எவர் வீட்டில் என்ன நடந்தாலும் அதனை வெண்பலகையில் எழுதிவிட வேண்டும். அதை மற்றவர்கள்...
கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 6)
இங்கே நீல நகரத்தின் அமைப்பை ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு நடுவில் மூன்றே சாலைகளால் இணைக்கப்பட்டுருக்கும் நகரம். அனைத்து வீடுகளும் ஒன்றுபோல் அமைக்கப்பட்டிருந்தன. நிச்சயமாக அது பூமியோ அதன் பகுதியோ இல்லை. ஆனால் சூனிய உலகத்திலோ வீடுகள் வித்தியாசமானது. யாளிகள் டிராகன்கள் எலும்புகளால் சுவரை அலங்கரிக்க வேண்டுமானால் எவ்வளவு பெரிதாக வீட்டைக் கட்ட வேண்டும்.. ஆனால் சிறை மட்டும்...
கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 7)
ரகசியம்! நம் வாழ்வை சுவாரஸ்யமாக வைத்துக்கொள்ள தூண்டுகிறது தானே. ஒருவர் நம்மிடம் ஒரு விஷயத்தை சொல்லவந்து, அதை தொடங்கிய நொடியில், அப்புறம் சொல்கிறேன் என சொல்லிவிட்டு சென்றால், நாம் மண்டையை பிய்த்துக்கொண்டு அவரை பின்தொடர்கிறோம் தானே. ரகசியங்கள் நிறைந்த நம் உலகில் சில உப்புசப்பில்லாத வாழ்வுகூட இனிகிறதல்லவா. ஆனால் பாராவின் நீலநகரம் அவ்வாறில்லை. அதில் அனைவரின் வாழ்வை அனைவரும் அறிவர். இதுவே இந்த...
கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 5)
கோவிந்தசாமியின் தலையில் இறங்கிய சூனியன், அவன் வம்சத்தின் அருமை பெருமைகளையும், அவனது இல்லற வாழ்வின் இனிமையையும் விவரிப்பது தான் இந்த அத்தியாயத்தின் சுருக்கம். அத்தியாயத்தின் இறுதியில் கோவிந்தசாமி அவன் மனைவியுடன் இணைய சூனியன் உதவி செய்கிறார். சோறு காணாதவன் கையில் பிரியாணிப்பொதி கிடைத்தால் அது தான் கோவிந்தசாமியின் காதலும் அவன் மனைவி சாகரிகாவும். பெண்ணுக்குரிய இலக்கணத்தையெல்லாம் மீறியது சாகரிகாவின்...
கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 4)
எதிர்பார்க்கவே முடியாத திருப்பம். சூனியனைச் சுற்றி தான் கதை நகரும் என்று என்ணியிருந்த எனக்கு, இவ்வத்தியாயத்தின் இறுதி வாக்கியமெல்லாம் எதிர்பார்க்கவே முடியாததாய் இருந்தது. ஆனால் ஒன்று, அந்த நீல நகரம் பூமியின் ஒரு பகுதி தான். அது எப்படி புவியிலிருந்து பிரிந்து அண்ட வெளியில் அதிலிருக்கும் மனிதர்களுக்கு பாதகமில்லாமல் பயணிக்கிறது என்பதை சென்ற பதிவிலேயே கேட்டிருந்தோம். சரி, இந்த அத்தியாயத்தைப்...
கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 3)
சென்ற அத்தியாயத்தில் நாயகனைக் காப்பாற்றவே அவனை மரண தண்டனைக்கு அழைத்துச் செல்லும் கப்பலைத் தகர்க்கும் வண்ணம் எங்கிருந்தோ கிளம்பியது ஒரு நீல நகரம். தோராயமாக அது பூமியைச் சேர்ந்ததாக இருக்கலாம். பூமியிலிருந்து பெயர்ந்த நகரம் தட்ப வெப்பம், கதிர்வீச்சு, ஈர்ப்புவிசை, வளிமண்டலம் அனைத்தையும் தாண்டி விண்வெளியில் எங்ஙனம் பிரவேசிக்க இயலும்? அதிலிருக்கும் மனிதர்களின் உடல் வெடித்துசிதறாமல் எப்படி இருக்க...