முதல் அத்தியாயத்தில் இருந்த புதிர் இரண்டாம் அத்தியாயத்தில் அவிழும் என்று நினைத்தால் புதிர்கள் நீண்டு கொண்டே செல்கிறது. நம் ஊரில் முதல்மரியாதை செய்ய மாலை அணிவிப்பது வழக்கம். சில பல அரசியல்வாதிகள் தற்போது கமெர்ஷியலாக வேல் ஏந்துவதைப் போல, சூனியர்கள் உலகில் எலும்புக்கூடுகளுக்கு மதிப்பு அதிகம். ஏனெனில் இறைவன் படப்பில் இறுதியில் எஞ்சுவது அது மட்டும் தானே. எலும்புக்கூடுகளை கடவுளின் தோல்விச் சின்னமாக...
கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 1)
சூனியர்கள், அமீஷின் நாகர்கள், டேன் ப்ரவுனின் மேஷன்கள் போலவே பாராவின் புனை மாந்தர் தாம் அவர்கள். ஒரு இனக்குழு தனக்குள்ளேயே அடித்துக் கொண்டு அழிவதற்கு ஆவன செய்பவர்கள் சூனியர்கள். கடவுளை அழிக்க இயலாத காரணத்தால் கடவுளது முதன்மைப் படைப்பான மனித குலத்தை அழிந்து தங்களின் கடவுள் வெறுப்பை ஆற்றுப்படுத்திக்கொள்ள முயல்பவர்கள் தாம் சூனியர்கள். அவ்வினத்துள் ஒருவன் தன் இன சூனியர்களாலேயே இனத்துரோகி எனக் குற்றம்...