பூவுலகிலிலிருந்து மாய நீலநகரம் பயணித்த கோவிந்தசாமிக்கு இப்போதைக்கு சூனியன் கடவுள் மாதிரி தான் தெரிந்திருப்பான். கோவிந்தசாமியின் குணம் புதிய விஷயங்களை கவனிக்கவோ ஆச்சரிக்கவோ செய்யாமல் சாகரிகாவை மட்டுமே இலக்காக கொண்டு தன் நிழலை சூனியனுடன் அனுப்பி உள்ளான். கோவித்தசாமியின் நிழல் சற்று பரவாயில்லை. கொஞ்சம் ஆச்சரியப்படுகிறது நீலநகரின் மனிதர்களை பார்த்து! ஆனால் சூனியன் அனைத்து விஷயங்களையும் கவனிக்கிறான்...
கபடவேடதாரி – எஸ். சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 5)
“சாமி” யை தன் பெயரிலிருந்து கூட விலக்க மனம் வராத கோவிந்தசாமி “சங்கி”என்ற வார்த்தையை ஏசும் வார்த்தையாக ஏற்க மறுத்தது வியப்பேதும் இல்லை. லஷ்மணசாமியில் ஆரம்பித்த சாமி கோவிந்தசாமியுடன் முடிந்து விடுமா? மூடன் என்றாலும் ஏன் சாகரிகா காதலித்து மணம் புரிந்தான்? பரிதாப உணர்வில் வந்த காதலா? எதுவாகிலும் சாகரிகாவை விட கோவிந்தசாமியின் காதல் மேலோங்கி இருக்கிறது. தன் கோபத்தை கூட...
கபடவேடதாரி – எஸ். சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 4)
சூனியன் தப்பி விட்டான் என்ற பதட்டத்தை விட, சூனியன் ஒருவர் தலையிலேறி உள்நுழைந்தது ஒரு பதட்டம். அதை விட பதட்டம் அந்த நினைவிடுக்குகளில் புதைந்திருக்கும் சேதிகள். அம்மனிதன் பூமியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களை போல் ஒருவனே,.. ஆனால்…. கோவிந்தசாமி என்ற அம்மனிதன் பிறப்பில் இருந்து அவன் திருமணம் வாரை வேகமான அறிமுகத்தை காண்கையில் கதை வேறு ஏதோ ஒரு திசையில் பயணிக்கும் என தோன்றுகிறது. சென்னையில் (என...
கபடவேடதாரி – எஸ். சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 3)
சாகசமின்றி தப்பித்தல் இயலாது. தப்பிக்கும் முயற்சியில் உயிர் பிரிதலும் ஒரு வித தப்பித்தலே. ஆயுதம் தந்த வலியும் வார்த்தை தந்த வேதனையும் , அவமானம் தந்த ஆக்ரோஷமும் பெற்ற சூனியன் தப்பிக்க தன்னையே ஆயுதமாக்கிக்கொள்வது வேறுவழியற்ற வாய்ப்பு. பிசாசுகடைத்த பூகம்பச்சங்கு தாங்கி, நீலநகரத்தின் மீது மோத ஒப்புக்கொள்வது தப்ப வாய்ப்புள்ள ஒரே முயற்சி. சுயநலமென்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, சூனியர்களுக்கும்...
கபடவேடதாரி – எஸ். சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 2)
மனிதன் செயல்களை செய்யவே படைக்கப்பட்டிருப்பவன். அவனளவில் அவன் செயல்கள் சரியானதே என நினைத்திருப்பவன். அவன் செயல்களால் சிலசமயம் யாராகிலும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். ஆனால் மனிதமனம் தன் செய்கையால் தான் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என ஏற்க மறுக்கும். மனிதனுக்கே இப்படி எனில் பாதிப்பை தருவதையே கடமையாக கொண்ட சூனியனின் செயலில் குற்றம் கூறினால்,..? சூனியனின் உள்ளக்கொதிப்பை விளக்கும் ஆசிரியர்...
கபடவேடதாரி – எஸ். சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 1)
கபடவேடதாரி எனும் தலைப்பை அறிவிக்கையில் Mr.சம்பத், நான் அவனில்லை போல் ஏமாற்றுக்காரனின் கதையாயிருக்கும் என நினைத்தேன். ஏமாந்து போனேன். சூனியனிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. அதுவே ஒரு வித்தியாசமெனில், சூனியனுக்கு விசாரணை, தண்டனை என நினைத்தற்கரிய கோணத்தில் கதை ஆரம்பத்திலேயே வேகமெடுக்கிறது. ஆங்கில திரைப்படங்களில், கதைகளில் Parallel universe என்ற concept சுவாரசியமாக இருக்கும். அது போன்ற புது உலகை நம்...