கோவிந்தசாமியும் கோவிந்தசாமியின் நிழலும் மீண்டும் மது விடுதியில் சந்தித்துக் கொள்கின்றனர். இருவரின் சோகமும் ஒன்று தானெனக் கோவிந்தசாமி நிழல் சொல்கிறது, அது உண்மை தான், ஆனால், கோவிந்தசாமிக்கு உண்மைகள் கசக்க செய்கிறது. இருவரும் சற்று நேரம் புலம்பி விட்டு மது அருந்த அமர்கின்றனர். பியர் சிந்துவெளி நகரத்தின் எச்சம் என்றும் அது திராவிட பானம் என்றும் நிழல் கூறுவது அதகளம். கோவிந்தசாமி நிழல் ஒரு செல்பி...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 43)
இந்த அத்தியாயம், நம் சூனியனே நம்மிடம் கதை சொல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. வெகுநாட்களுக்குப் பிறகு நாம் சூனியனின் பார்வையில் கதை கேட்கிறோம். விறுவிறுப்பு குறையாமல் நகர்கிறது. அவனது யோக நித்திரையில் தொடங்குகிறது அத்தியாயம். அவன் ஆயிரமாயிரம் பிரதி பிம்பங்களைப் படைக்கிறான். அவனுக்காகப் போரிட போகின்றனர் எனவும் கூறுகிறான். அறிஞர்கள், அழகிகள், கவிஞர்கள், அரசியல்வாதிகள், சாதாரணர்கள், மல்லர்கள்...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 42)
“சாகரிகா ரசிகர் வட்டம்” என்ற பெயரில் சமஸ்தானம் கட்டும் வேலைகளை ஆரம்பிக்க ஆயத்தமாகிறாள் சாகரிகா. கோவிந்தசாமியின் நிழலின் பெயரில் சமஸ்தானத்தின் பெயரைப் பதிவு செய்கிறாள். வேலைகள் மும்முரமாக நடக்கிறது. தன்னை துதிப்பதற்குத் தானே கட்டிக் கொண்ட சமஸ்தானம் எனபதில் சிறு சங்கடம் கொள்கிறாள் சாகரிகா. எழுத்தாளர் நற்குணசீலனின் செயல்பாடுகளைத் தனக்கு முன் மாதிரியாக எடுத்துக் கொள்கிறாள் சாகரிகா. அவள்...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 41)
செம்மொழிப்ரியா பிரிந்து சென்றதில், நிழல் சற்று நேரம் புலம்பலுக்கு ஆளாகிறது. ஒரு நாள் காதல் என்றாலும் அந்தக் காதலின் வலிக்குச் சாராயத்தை நாடுகிறது நிழல். அங்கே நம் கோவிந்தசாமியும் தன் புண்பட்ட நெஞ்சை ஆல்கஹால் ஊற்றி ஆற்றி கொண்டிருக்கிறான். இருவருமாய் தங்கள் கஷ்டங்களை மிக்சரோடு பகிர்ந்து கொள்கின்றனர். இதற்கிடையில் வெண்பலகையில் ஒரு பெண், மனுஷின் கவிதைகளைத் தொட்டு கொண்டு குடிப்பதாக வந்த அறிக்கையைப்...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 40)
கோவிந்தசாமியின் நிழல் காதலில் திளைத்துக் கொண்டிருப்பதில் துடங்குகிறது இந்த அத்தியாயம். புது காதல் வந்ததும் இயல்பாகவே பழைய காதலை தூக்கி போடுகிறது நிழல். தனது புதிய காதலியான “காதலி”க்காகக் காத்திருக்கிறது. செம்மொழிப்பிரியா (காதலி) அவனைப் பேசி மயக்கி, சாகரிகாவிற்கு எதிராய் வெண்பலகையில் ஒரு அறிவிப்பு செய்யுமாறு தூண்டுகிறது. புது காதலில் கட்டுண்ட நிழலும் சொன்னவாறே நிழல் தான் ஒரு சுதந்திர...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 39)
சூனியன் – கோவிந்தசாமி சந்திப்புக்கு வெகுநாட்களாகக் காத்திருந்தேன். இந்த அத்தியாயத்தில் அது நிறைவேறியது. சூனியன் நீல நகரத்தில் நுழையும்போது, கோவிந்தசாமிக்கு உதவுவதாக வாக்களித்திருந்தான். நாட்கள் நகர நகர சூனியனே கோவிந்தசாமிக்கு எதிராய் வேலைகள் செய்ததேன் எனக் குழம்பியிருந்தேன். இந்த அத்தியாயத்தில், சூனியனே அதற்கான காரணங்களை விளக்குகிறான். முதற் காரணம்: கோவிந்தசாமியிடம், சூனியன் தான் திரும்பி...