CategoryJDivakar_Kabadavedathari_review

கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 19)

சென்ற அத்தியாயத்தில் திராவிடத்தை உயர்த்தினார் என்று மகிழ்ந்திருக்கும் வேளையிலே ஒரே போடாக போட்டுத் தாக்கி விட்டார் இந்த அத்தியாயத்தில். ஆனால் அங்கு பேசியது பா.ரா. இங்கு பழித்தது சூனியன். கண்ணதாசன் குறிப்பிடும் அந்த பகுத்தறிவாளர் யாரென்று ஊகிக்க முடிகிறது. ஆனால், செம்மொழிபிரியா??? அடுத்ததாக ஜிங்கோ பிலோபா மரம். உண்மையில் அப்படியொரு மரம் இருக்கிறதா? Google செய்து பார்க்க வேண்டும். இந்த மனிதருக்கு...

கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 18)

சாகரிகாவின் மூளைக்குள் பா.ரா.! அவரின் நிறைய புத்தகங்களைப் படித்திருப்பாளோ என்று நினைத்தேன். இல்லை. இது வேறு என்று புரிகிறது. அப்போ பா.ரா.வும் சூனியனும் ஒரே ஆள் அல்ல. Confirm. இன்று காலை தற்சார்பு பொருளாதாரம் பற்றி ஒரு கிரீஸ் டப்பாவின் பதிவினை முகநூலில் படிக்க நேர்ந்தது. அதில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள். இங்கும் அப்படித்தான் பா.ரா. குறிப்பிடுகிறார். “எனக்கு ஒற்றுப் பிழை இல்லாமல் எழுத வராது...

கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 17)

கோவிந்தசாமியின் நிழல் கோபித்துக் கொண்டு அவனை விட்டு பிரிந்ததை விடவும் தனது கவிதையை அது மொக்கை என்று கூறியது தான் அவனுக்கு பெரும் அவமானமாகிப் போகிறது. காதலர் தினத்திற்கு எப்போதும் போல் அவன் சார்ந்த கட்சியின் வடக்கத்தி தலைவர் ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்க அது குறித்து அவன் ஒரு கவிதை எழுத முனைவதே இந்த அத்தியாயம். இடையில் கிருஷ்ணனை ஒரு காட்டு காட்டி விடுகிறார் பா.ரா. இவருக்கு ஏன் கிருஷ்ணனின் மீது...

கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 16)

நாம் பிறந்து தவழத் தொடங்கியது முதல் வெயிலிலும், விளக்கொளியிலும் கூட நம்மைப் பிரியாது உடனிருக்கும் நம் நிழலுக்கு நமக்கு இருப்பதைப் போன்றே ஏதேனும் ஆசைகள் இருக்குமாவென இதுவரை தோன்றியதே இல்லை. இன்று இந்த அத்தியாயம் வாசித்ததும் தான் நம் நிழல் நம்மை எப்போதெல்லாம் திட்டியிருக்கும் என எண்ணினேன். கரசேவை முடித்தவுடன் வெற்றிக் களிப்புடன் திரும்பிய கோவிந்தசாமிக்கு மறுநாள் தன் முகத்தைக் கண்டவுடன் அது...

கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 15)

சூனியனே சாகரிகாவை அடைய எண்ணுகிறானோ என கடந்த அத்தியாயங்களில் கோவிந்தசாமிக்கு ஏற்பட்ட அதே சந்தேகமே தற்போது நமக்கும் ஏற்படுகிறது. மனிதர்கள் சறுக்கும் இடங்களாக மூன்றினை இங்கே சூனியன் குறிப்பிடுகிறான். தாய்ப்பாசம், உடலுறவு, மரணம். ஏறத்தாழ இதே காரணங்களை தான் யதியில் வரும் விமல் முதலான மற்றவர்களும் ஆங்காங்கே குறிப்பிடுகிறார்கள். பா.ரா. இதனாலெல்லாம் ரொம்பவே வலிகளை அனுபவித்து இருப்பாராவென தெரியவில்லை...

கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 14)

கதையில் யார் சொல்வதைக் கேட்பது அல்லது நம்புவது அல்லது பின்பற்றிச் செல்வது? சூனியனையா அல்லது எழுத்தாளர் பா.ரா.வையா? கோவிந்தசாமியின் நிழலைப் போல் இன்னும் 120 பேரின் நிழல்களை உருவாக்கி விட்டான் சூனியன். அதாவது Fake id’s. கோவிந்தசாமி வெண்பலகையில் எழுதியுள்ள கவிதை. கவிதையா அது? உவ்வே…. இதில் இறுதியில் ஜெய் ஸ்ரீராம் வேறு இரங்கல் செய்திக்குக் கூட படித்துப் பார்க்காமல் ஹார்டின் விடும் நம்மூர்...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds