Categoryதொலைக்காட்சி

ஒரு நெடும்பயணம்

இன்று அதிகாலை இரண்டு மணிக்கு வாணி ராணியின் இறுதிக் காட்சிகளை எழுதி முடித்தேன். விரைவில் தொடர் நிறைவு பெறுகிறது. சீசன் மாறுதல்கள் இல்லாமல் ஒரே கதையாக ஆறு ஆண்டுகள் (23.1.2013 முதல்), 1750 எபிசோடுகள் தொடர்ச்சியாக வெளியான ஒரே தொலைக்காட்சித் தொடர் இதுதான். இதில் ஒரு எபிசோட்கூட இன்னொருவர் இடையில் புகாமல் முழுக்க நானேதான் எழுதியிருக்கிறேன். [வாணிராணியின் திரைக்கதை ஆசிரியர் குமரேசன். அவரும் முதல்...

மனெ தேவுரு

இன்னொரு மொழி சீரியலுக்கு நான் வசனம் எழுதுவேன் என்று எண்ணிப் பார்த்ததில்லை. விரைவில் உதயா டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘மனெ தேவுரு’ [குல தெய்வம்] தொடருக்கு என்னை எழுத எம்பெருமான் பணித்தான். நேற்று பெங்களூரில் அதற்கான பூஜை, முதல் நாள் படப்பிடிப்பு. கலந்துகொண்டு திரும்பினேன்.

மூணு

ஓடியே விட்டது ஒரு வருடம். சென்ற ஆண்டு ஜூலையில்தான் இனி முழுநேரமும் எழுத்து என்று முடிவு செய்தேன். குடும்பத்தினரின் அச்சம், நண்பர்களின் கவலை, நண்பர்கள்போல் இருந்தவர்களின் நமுட்டுச் சிரிப்பு அனைத்தையும் பதில் கருத்தின்றி வாங்கி வைத்துக்கொண்டு என் முடிவு இதுதான் என்று என் மனைவியிடம் சொன்னேன். சரி என்பதற்கு மேல் அவள் வேறேதும் சொல்லவில்லை. நான் சினிமாவில் கவனம் செலுத்துவேன் என்று அவள் நினைத்தாள்...

கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு

சாப்பிடுகிற விஷயத்திலும், அதைப் பற்றி எழுதுகிற விஷயத்திலும் எனக்கு எத்தனைக் கொலைவெறி ஆர்வம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். பத்திரிகைகளில் நான் இதுநாள் வரை எழுதிய அத்தனை தொடர்களிலும் பார்க்க, எனக்கு மிகவும் பிடித்தமானது உணவின் வரலாறுதான். ரசித்து ரசித்துத் தகவல் திரட்டி, ருசித்து ருசித்து எழுதிய தொடர் அது. இன்றும் கடிதம் எழுதும், போன் செய்து பேசும் பெரும்பாலான வாசகர்கள் ‘உ’வைக் குறிப்பிடாமல்...

என்னைப்பார், இட்லி இறங்கும்!

அவளை என்னால் ஐந்து நிமிடங்களுக்குமேல் ரசிக்க முடிந்ததில்லை. ஆனால் என் குழந்தை உள்பட எனக்குத் தெரிந்த எல்லா குழந்தைகளுக்கும் அவள் ஒரு ரோல் மாடலாக இருக்கிறாள். அவள் முகம் அச்சிட்ட கைக்குட்டைக்கு மவுசு இருக்கிறது. அவள் படம் போட்ட தம்ளரில் பால் கொடுத்தால் உடனே உள்ளே இறங்குகிறது. துணிக்கடைக்குச் சென்றால் குழந்தைகள் கேட்கும் முதல் கேள்வி, டோரா போட்ட கவுன் இருக்கா? டோரா போட்ட ஃப்ராக் இருக்கா...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version