Categoryதிரைப்படம்

கள்ளன்

ஊருக்கெல்லாம் அவன் ஒரு கொள்ளைக்காரன், கொலைகாரன். அதிபயங்கரவாதி. அவன்மீது ஏகப்பட்ட வழக்குகள். எது ஒன்றையும் தீர்க்க முடியாமல் காவல் துறை தடுமாறிக்கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து நடக்கும் கடத்தல், கொள்ளைச் சம்பவங்களுக்கும் அவனே காரணம் என்று முடிவு கட்டுகிறது. என்ன செய்து அவனைப் பிடிப்பது? தெரியவில்லை. ஊரில் வசிக்கும் பணக்காரப் பெரிய மனிதரின் மகள் ஒருத்தி கடத்தப்படுகிறாள். கடத்தியது யார்? அவன் தானா...

தம்பி வெட்டோத்தி சுந்தரம்

‘நான் ஒரு பெரிய மேக்கர் சார்! முதல் படம் சரியா அமையாததுக்குப் பல காரணங்கள். இப்ப என்னை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு. நீங்க எழுதுங்க. நான் எப்படி எடுக்கறேன்னு பாருங்க.’ அவருடைய தன்னம்பிக்கைதான் முதலில் என்னைக் கவர்ந்தது. நெற்றி நிறைய குங்குமம், விபூதி, சந்தனம், மணிக்கட்டில் கனமாக, மந்திரித்த சிவப்புக் கயிறு, மூச்சுக்கு மூச்சு சிவநாமம். சினிமாவைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டால் மட்டும்...

படம் காட்டுதல் 1

கனகவேல் காக்க திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் பாங்காக்கில் நடந்து முடிந்திருக்கிறது. சும்மா சில புகைப்படங்கள். படம் ஜூன் முதல் வாரத்தில் திரைக்கு வரும் என்று நினைக்கிறேன்.

உலகை வென்ற இசை

பாடல்கள் பிரமாதம். பின்னணி இசை பிரமாதம். தமிழ் ரசிகர்கள் இதற்குமுன் இப்படியொரு இசையைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. நன்றாக இருக்கிறது என்பது இரண்டாவது. இளைஞனே, உன்னுடைய இசை மிகவும் புதிதாக இருக்கிறது. நீ பேசப்படுவாய். சரி, ஆடியோ ரெடியாகிவிட்டது. அட்டை டிசைன் தான் மிச்சம். சொல். ரசிகர்களுக்கு நீ என்ன பெயரில் அறிமுகமாகப் போகிறாய்? மணி ரத்னம் காத்திருந்தார். ரோஜா அவருக்கு ஒரு முக்கியமான படம்...

நான் கடவுள்

தவறாகப் புரிந்துகொள்ளப்படும் ஆன்மிகம், சரியாகப் புரிந்துகொள்ளப்படும் தீவிரவாதத்தைக் காட்டிலும் அபாயகரமானது. பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். வியப்பும் ஏமாற்றமும் ஒருங்கே தோன்றியது. வியப்பு, அவரது செய்நேர்த்தி பற்றியது. படத்தின் ஒரு ஃப்ரேமைக் கூட அலங்கரிக்காமல் விடவில்லை. ஒரு கதாபாத்திரம் கூட வெறுமனே வந்துபோகவில்லை. ஒரு காட்சிகூட வீணாக்கப்படவில்லை. ஒரு துண்டு வசனம் கூட, அது...

எழுதாத நாள்கள்

வாசகர்கள் மன்னிக்க வேண்டும். சுகம் பிரம்மாஸ்மி ஆரம்பித்த வேளை சரியில்லை. சிவல்புரி சிங்காரத்திடம் கேட்டுவிட்டுத் தொடங்கியிருக்கலாம். உட்கார்ந்து எழுதவே முடியவில்லை. தவிர்க்கவே முடியாத ரிப்போர்ட்டர் தொடர் தவிர வேறு எதுவுமே இந்நாள்களில் எழுதுவதில்லை. கால், கால்வாசிதான் குணமாகியிருக்கிறது. இப்போது எழுந்து நிற்க முடிகிறது. ஒரு சில நிமிடங்கள். ஆனால் நடக்க முடியவில்லை. இந்த வயதில் நடைவண்டி வாங்கிப்...

சினிமாவும் நானும்

ஐகாரஸ் பிரகாஷ் கேட்டுக்கொண்டபடி அவர் தொடுத்த வினாக்களும் என் விடைகளும் இங்கே. 1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்? வயது ஐந்து அல்லது ஆறு இருக்கலாம். கோவூரில் அப்போது குடியிருந்தோம். ஊருக்கே புதிதாக பக்கத்து வீட்டில் டிவி பெட்டி வர, அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் பத்து பைசா வசூலித்துக்கொண்டு பார்க்க அனுமதித்தார்கள். படம் ஆட்டுக்கார...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version