ArchiveJune 2008

சில சந்தேகங்கள், சில விளக்கங்கள்

[1] கடந்த சில தினங்களாக என்னுடைய தளத்துக்குள்ளே வருகிற சிலர் ‘காமக் கதைகள்’ என்றும் சித்ரா மாமி என்றும் சரோஜா தேவி என்றும் சிலுக்கு என்றும் குறிச்சொற்கள் இட்டுத் தேடுகிறார்கள். எங்கோ தவறு நடந்திருக்கிறது. பா. ராகவன் பலான எழுத்தாளர் என்று யாரோ நல்லவர்கள் இவர்களுக்குச் சொல்லியிருக்கலாம். எம்பெருமான் அவர்களை மன்னிப்பாராக. கூகுளில் காமக்கதைகள் என்று தேடியும் என்னுடைய தளத்துக்குச் சிலர்...

எனக்கொரு விருது

இதைவிட சந்தோஷமாக எப்போதும் நான் உணர்ந்ததில்லை. முதல் முதலாக என்னுடைய மாணவன் ஒருவனின் புத்தகத்துக்கு ஒரு விருது கிடைத்திருக்கிறது. ஆர். முத்துக்குமார் எழுதி கிழக்கு கடந்த ஆண்டு வெளியிட்ட ‘அன்புள்ள ஜீவா’ என்கிற ப. ஜீவானந்தம் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு பதிப்புச் செம்மல் மெய்யப்பன் நினைவு விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது மணிவாசகர் பதிப்பகம் ஆண்டுதோறும் வழங்கும் விருது. கே.ஜி. ராதாமணாளன்...

ஞான் அவிடெ…

ஐ.எஸ்.ஆர்.ஓ. நம்பி நாராயணன் விவகாரம் உச்சத்தில் இருந்தபோது சென்றதுதான் கடைசி. பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் திருவனந்தபுரத்துக்குத் திரும்பச் செல்கிறேன். அதே குறைந்தபட்ச டிராஃபிக். அதே அழகான சூழ்நிலை. அதைவிட அழகான பெண்கள். செடிகள் காற்றில் அசைந்தாடுவதுபோல் அனைத்துப் பெண்களின் கூந்தலும் காற்றில் அலைபாய்கிறது. யாரும் பின்னல் போடுவதில்லை. இன்னும் உண்டு ரசிப்பதற்கு. ஆட்டோவில் குறைந்தபட்சக்...

தசாவதாரம் குருவி-2

உங்களில் எத்தனை பேர் விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த குருவி படத்தைப் பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது. கமல்ஹாசனின் தசாவதாரம் தொடக்கம் முதலே எனக்கு ஏனோ குருவியை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது. அதில் விஜய் சிங்கப்பூரிலிருந்து ஒரு வைரக்கல்லைத் தூக்கிக்கொண்டும் பிறகு துரத்திக்கொண்டும் இந்தியா வருகிறார். இதில் கமல் அமெரிக்காவிலிருந்து ஆந்திராக்ஸ் போன்ற ஏதோ ஒரு நாசகார ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டும்...

நடந்த கதை

நீண்டநாள் விருப்பம் ஒன்று இன்றைக்கு நிறைவேறியது. சென்னை மெரினா கடற்கரையில் காலை நடைப்பயிற்சி செய்யவேண்டும் என்று எட்டு மாதங்களாக – எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நாள் தொடங்கி ஆசைப்பட்டேன். நான் வசிக்கும் பேட்டையிலிருந்து மெரினாவுக்கு வந்து சேரச் சாதாரணமாக ஒன்றே முக்கால் மணி நேரம் ஆகும். சாலை காலியாக இருந்தால் ஐம்பத்தைந்து நிமிஷம். எனவே இது முடியாதிருந்தது. நேற்றைக்குத் திட்டமிட்டு...

கிழக்கு ப்ளஸ் – 10

இந்தச் சிறு தொடரை எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை வந்துகொண்டிருக்கும் மின்னஞ்சல்கள்மூலம் கிழக்கின் வளர்ச்சியின்பால் வாசகர்களுக்கு உள்ள அக்கறையும் ஆர்வமும் தெரிகிறது. அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது பேசிய சில விஷயங்களை நான் முன்பே பேசியிருந்தால் பல மனக்கசப்புகளை – இணையத்தில் தவிர்த்திருக்கலாமே என்று சில நண்பர்கள் கேட்டார்கள். என் பதில் இதுதான். பேசுவது என்...

கிழக்கு ப்ளஸ் – 9

அந்தப் புத்தகக் கண்காட்சியை மறக்கமுடியாது. கிழக்கு ஆரம்பிப்பதற்கு முந்தைய வருட சென்னை புத்தகக் கண்காட்சி. நானும் பத்ரியும் கூட்டத்தில் நீந்தியபடி ஒவ்வொரு கடையாக நகர்ந்துகொண்டே இருக்கிறோம். புத்தி முழுக்க விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புதிய புத்தகங்களின் மீதுதான். என்னென்ன வகைகள், என்னென்ன விதங்கள், யார் யார் எழுத்தாளர்கள், லே அவுட் எப்படி, பேகேஜிங் எப்படி, எப்படி விற்கிறது, எதை எடுக்கிறார்கள்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி