ArchiveJuly 2008

ஒரு வேதாளம் சாத்துக்குடி மரம் ஏறுகிறது

சரியாக ஒரு மண்டல காலம். என்னுடைய டயட் பயிற்சிகளை நிறுத்திவைத்திருந்தேன். தொண்ணூறிலிருந்து எழுபத்திமூன்று கிலோவுக்கு வந்து சேர்ந்ததைக் கொண்டாடலாம் என்று தேவதையோ சாத்தானோ காதோரம் வந்து சொன்னது. அது நடந்தது ஜூன் 13. சில உண்மைக் காரணங்களும் உண்டு. முதலாவது, சோர்வு. இந்தப் பக்கங்களில் முன்னரே எழுதியிருக்கிறேன். டயட் இருப்பது என்பது ஒரு வேலை. பிற வேலைகள் மிகும்போது இந்த வேலை அடிபடும். அலுவலகப் பணிகள்...

கருத்துக்களம் திறக்கப்படுகிறது.

நண்பர்களுக்கு வணக்கம். இந்த வலைத்தளத்தின் வாசகர் கருத்துக் களம் [Comments Section] இன்றுமுதல் திறக்கப்படுகிறது. இத்தளத்தில் நான் எழுதத் தொடங்கிய நாளாக இதில் வாசகர் கருத்துகளைப் பதிவு செய்வதற்கான இடம் ஏன் இல்லை என்பது ஒரு குற்றச்சாட்டாகவும் ஆதங்கமாகவும் கோரிக்கையாகவும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. நண்பர் வெங்கட் இதனை மிகத் தீவிரமாகக் கண்டித்துத் தம் பதிவு ஒன்றில் குறிப்பிட [என்ன...

ஈரோடு புத்தகக் கண்காட்சி 2008

01.08.2008 நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை முதல், மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. வழக்கம்போல் கிழக்கு, ப்ராடிஜி அரங்குகள் இடம்பெறுகின்றன. 09, 10 இரு தினங்களும் [அடுத்த சனி, ஞாயிறு] நான் ஈரோடு நகரத்தில் இருப்பேன். நெய்வேலியில் நிகழ்ந்தது போலவே ஈரோடிலும் ப்ராடிஜி சார்பில் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பரிசளிப்பு விழா ஒன்பதாம் தேதி காலை பத்து...

கோட்டை விடப்பட்ட கோப்பை

[கல்கியில் வெளியான அந்த கிரிக்கெட் கட்டுரை இதுதான். ஏதோ ஓர் உலகக்கோப்பை சமயம் எழுதியிருக்கிறேன். வருஷம் நினைவில்லை. போட்டியின் இறுதியில் கேப்டன் கங்குலி வீட்டில் ரசிகர்கள் கல்லெறிந்த காலம்.] இந்தவாட்டி வேர்ல்டு கப் இந்தியர்களைப் பொறுத்த அளவில் “ஹைலைட்ஸ் பார்க்கக் கூட லாயக்கில்லாத”  சங்கதியாகிவிட்டதை துரதிருஷ்டம் என்றெல்லாம் அநாவசியத்துக்கு வருணிப்பது தப்பு. ஒரே சொல் தான் – ...

பாதி வித்வான்

[முந்தைய கட்டுரையில் எனது கிரிக்கெட் – வீணை அனுபவங்கள் குறித்து எழுதிய கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். சில நண்பர்கள் அந்தக் கட்டுரைகளை இங்கே தரக் கேட்டார்கள். வீணை வாசிப்பு அனுபவம் குறித்த கட்டுரையை இப்போது தருகிறேன். கிரிக்கெட் கட்டுரை நாளைக்கு. சிறு நினைவுத் தடுமாற்றத்தால் இரண்டு கட்டுரைகளும் குமுதத்தில் வெளிவந்தவை என்று சொல்லிவிட்டேன். கிரிக்கெட் கட்டுரை கல்கியில் வெளியானது...

நாலு ரன், ரெண்டு விக்கெட்

மிகப் பல வருடங்களுக்குப் பிறகு நேற்று மாலை மெரினா கடற்கரையில் அலுவலக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் சந்தர்ப்பம். இடது முழங்கை – வலது கால் முட்டியில் சிராய்ப்பு, இடது கணுக்கால் – வலது கால் முட்டிக்கு ஒன்றரை இஞ்ச்சுக்குக் கீழே சுளுக்கு என்று விழுப்புண்களுடனும், நான்கு ரன்கள் மற்றும் இரண்டு விக்கெட்டுகளுடனும் வெற்றிகரமாக வீடு திரும்பினேன். அலுப்பில் அப்போது உறங்கிவிட்டாலும் காலை...

சுப்ரமணியபுரம் – நிறைவேறிய கனவு!

[கிழக்கு பதிப்பகத்தின் சீனியர் துணையாசிரியர்களுள் ஒருவனும் என் நண்பனுமான ச.ந. கண்ணன், தன்னை நல்லவிதமாகவோ, கெட்டவிதமாகவோ பாதிக்கும் படங்களைக் குறித்துத் தனது நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சலில் ஒரு கட்டுரை எழுதி அனுப்புவான். நேற்று சுப்பிரமணியபுரம் பார்த்துவிட்டு அவன் அனுப்பிய மடல் இது. கருத்தளவில் எனக்கும் இதில் உடன்பாடென்பதால் தனியே நான் ஒன்று எழுதவிருந்ததைத் தவிர்த்துவிட்டு, அவனது கட்டுரையை...

சுப்ரமணியபுரம்

படுகொலை என்பதுதான் களம். அது தனி நபரா, சக மனிதர் ஒருவர் மீதொருவர் வைக்கும் நம்பிக்கையா என்பதல்ல முக்கியம்.  கொல், கொன்றுவிடு. தீர்ந்தது விஷயம். உலகிலேயே ஜனநாயகம் தழைப்பதற்காக, அதனையே கற்பழித்து அடித்துக்கொன்று புதைத்துக் கோயில் கட்டி ஆறு கால பூஜையும் செய்யும் ஒரே தேசம் நம்முடையது. நடந்து முடிந்த காங்கிரஸ் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புத் திருவிழா நிறைய அதிர்ச்சியையும் நிறைய அலுப்பையும்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி