ArchiveSeptember 2008

Technically Yours

சமீபத்தில் ஒருநாள் ஏதோ ஒரு வேகம் வந்து, என் லேப்டாப்பில் போட்டோ ஷாப் மென்பொருளை இன்ஸ்டால் செய்து, உடனடியாக என் அலுவலகத் தோழி வைதேகியை அழைத்து அதன் அடிப்படைகளைச் சொல்லித்தரச் சொல்லி ஒரு சில மணிநேரங்கள் கற்றுக்கொண்டு, கச்சாமுச்சாவென்று ஒருவாரத்தில் ஏகப்பட்ட போட்டோ ஷாப் உருவங்களை உருவாக்கிப் பார்த்தேன். பத்ரி, இட்லிவடை, மருதன் போன்ற நண்பர்கள் என் ஆர்வத்துக்கு மனமுவந்து தமது வலைப்பதிவுகளையே...

a-s-d-f-g-f ;-l-k-j-h-j

இன்றைக்கு கோடம்பாக்கம் [பழைய] ராம் தியேட்டர் அருகே போய்க்கொண்டிருந்தபோது அவளைப் பார்த்தேன். என்னுடைய பதினைந்தாவது வயதில் முதல் முதலில் பார்த்தபோது தென்பட்டதுபோல் அத்தனை பேரழகியாக இல்லை. இந்தக் கட்டுரை அவளைப் பற்றியதில்லை. அவளைப் போலவே தன் அடையாளம் துறந்துவிட்ட எங்கள் ஊர் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் பற்றியது. அங்கேதான் அவள் எனக்கு அறிமுகமானாள். எங்காவது இன்றைக்கு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்...

நன்றி, திரு. ஹெமிங்வே!

எப்போது எடுத்துவைத்த குறிப்பு என்று நினைவில்லை. ‘மின்னபொலீஸ் டிரிப்யூன்’ என்ற இதழின் செய்தியாளர் ஆர்நால்ட் சாமுவேல்சனுக்கு எர்னஸ்ட் ஹெமிங்வே அளித்த ஒரு நேர்காணலின் சில பகுதிகள் இவை. முன்னெப்போதாவது இணையத்தில் இதனை வெளியிட்டிருக்கிறேனா என்றும் நினைவில்லை. எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடிய சில குறிப்புகள். இனி ஹெமிங்வே: எழுதுவதைப் பற்றி நான் முக்கியமாகத் தெரிந்துகொண்டது, ஒரே நேரத்தில்...

பாரதியாருக்கு பக்கோடா வாங்கித் தந்தவர்

என் அம்மா வழி தாத்தாவின் பெயர் ராமசாமி. அவரது பெற்றோர், முன்னோர், சொந்த ஊர், சகோதர சகோதரிகள் குறித்த எந்த விவரமும் எனக்குத் தெரியாது. நானறிந்த தாத்தா, சைதாப்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் உள்ள நாற்பதாம் எண் வீட்டின் வாசலில் மாலை ஆறு மணிக்குப் பிறகு எப்போதும் மரத்தாலான ஒரு பெரிய ஈசி சேரைப் போட்டு அதில் சாய்ந்து அமர்ந்து ரேடியோ கேட்டுக்கொண்டிருப்பார். எப்போதாவது விடுமுறை தினங்களில் தாத்தா...

தேவனுக்காக ஒரு மாலை

தேவன் பிறந்த நாள் விழா – அவரது ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா நேற்று மாலை ஆழ்வார்பேட்டை சிவகாமி பெத்தாச்சி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. தேவனின் ரசிகர்கள் – வாசகர்கள் சுமார் நூறு பேர் வந்திருந்தார்கள். தேவன் அறக்கட்டளை சார்பில் சாருகேசி வரவேற்புரை நிகழ்த்தினார். அசோகமித்திரன் நூல்களை [கல்யாணி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், சி.ஐ.டி. சந்துரு, லக்ஷ்மி கடாட்சம்] வெளியிட்டுப்...

அன்புடன் அழைக்கிறேன், அனைவரும் வருக!

இன்று [08.09.2008] அமரர் தேவனின் 95வது பிறந்த நாள். நினைவுகூர்ந்து கொண்டாடும் வகையில் கிழக்கு பதிப்பகம் இன்று தேவனின் ஐந்து நூல்களை செம்பதிப்பாக வெளியிடுகிறது. * மிஸ்டர் வேதாந்தம் * சி.ஐ.டி. சந்துரு * ஜஸ்டிஸ் ஜகந்நாதன் * கல்யாணி * லக்ஷ்மி கடாட்சம் [ஏற்கெனவே தேவனின் துப்பறியும் சாம்பு, ராஜத்தின் மனோரதம், கோமதியின் காதலன், ஸ்ரீமான் சுதர்சனம், மாலதி ஆகியவை வெளிவந்துள்ளன.] இவற்றின் வெளியீட்டு விழா...

எனக்கு இங்கே வயது எட்டு

சமீபத்தில் ஒருநாள் என் பழைய குப்பைகளைக் குடைந்துகொண்டிருந்தபோது ஆதி ராயர் காப்பி க்ளப்புக்கு நான் எழுதி அனுப்பிய சில குறுங்கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதிகள் அகப்பட்டன. பரபரவென்று யோசித்துப் பார்த்தால் நான் இணையத்துக்கு வந்து எட்டு ஆண்டுகள் முடிகின்றன. இடையே சில வருடங்கள் எழுதாமல் இருந்திருக்கிறேன். பல மாதங்கள் படிக்காமலேயேகூட இருந்திருக்கிறேன். நிறைய நண்பர்கள், ஏராளமான அனுபவங்கள், சந்தோஷங்கள்...

Google Chrome – A quick review

  கூகுளிடம் எனக்கு மிகவும் பிடித்த அம்சம், அதன் எளிமை. அலங்காரங்களற்ற தன்மை. தவிரவும் வேகம். இன்றைய புதுவரவான கூகுள் க்ரோம் இணைய உலவியிலும் அதுவே பிரதானமாக இருக்கக் காண்கிறேன். நேற்றிரவே நான் தரவிறக்கம் செய்திருக்கவேண்டும்.  ‘குரோம்’பேட்டைவாசிகளுக்கு முன்னுரிமை தரலாம் என்று கூகுளாவது நினைத்திருக்கவேண்டும். பன்னிரண்டு மணிவரை காத்திருந்துவிட்டு போரடித்து, படுத்துவிட்டேன். இன்றைக்கு, இப்போதுதான்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி