ArchiveJanuary 2009

சுகம் பிரம்மாஸ்மி – 4

என்ன காரணம் என்று இப்போது சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் படித்ததிலிருந்து, சன்னியாசி ஆகிவிடவேண்டும் என்கிற எண்ணம் மிகத் தீவிரமாக ஏற்பட்டுவிட்டது. படிப்பில் எனக்கு நாட்டமில்லாமல் இருந்தது, என்னைவிட என்னுடைய தம்பிகள் கெட்டிக்காரர்களாக வளர்ந்துகொண்டிருந்தது, வாத்தியார் பிள்ளை மக்கு என்கிற பழமொழிக்குப் பொருத்தமானவனாக நான் என்னை வடிவமைத்துக்கொண்டது, சிறு பொறுக்கித்தனங்களில்...

ஒரு பிரச்னை, ஓர் அறிவிப்பு

கடந்த இரு தினங்களாக இந்தத் தளம் செயல்படுவதில் சில சிக்கல்கள் இருந்துவருகின்றன. தளம் தடை செய்யப்பட்டிருப்பதாக ஓர் அறிவிப்பு காட்டப்பட்டிருக்கும். சரியான காரணம் எனக்குத் தெரியவில்லை. யாராவது நல்ல நண்பர்கள் விளையாடியிருக்கலாம். Hack செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். நேற்று ஒருமுறை தளம் காணாமல் போக, கணேஷ் சந்திரா மீட்டுக் கொண்டு வந்தார். சில மணிநேரங்கள் சரியாக இருந்தது. இன்று மீண்டும் காலை முதல்...

எழுதாத நாள்கள்

வாசகர்கள் மன்னிக்க வேண்டும். சுகம் பிரம்மாஸ்மி ஆரம்பித்த வேளை சரியில்லை. சிவல்புரி சிங்காரத்திடம் கேட்டுவிட்டுத் தொடங்கியிருக்கலாம். உட்கார்ந்து எழுதவே முடியவில்லை. தவிர்க்கவே முடியாத ரிப்போர்ட்டர் தொடர் தவிர வேறு எதுவுமே இந்நாள்களில் எழுதுவதில்லை. கால், கால்வாசிதான் குணமாகியிருக்கிறது. இப்போது எழுந்து நிற்க முடிகிறது. ஒரு சில நிமிடங்கள். ஆனால் நடக்க முடியவில்லை. இந்த வயதில் நடைவண்டி வாங்கிப்...

சுகம் பிரம்மாஸ்மி – 3

நான் கடவுளைப் பார்த்தேன், உனக்கு அவனைக் காட்டுகிறேன். ராமகிருஷ்ண பரமஹம்சரின் இந்த confidence என்னை மிகவும் உலுக்கியது. நம்பமுடியாமல் திரும்பத் திரும்ப இந்த வரிகளைப் பல சமயம் வாசித்துக்கொண்டே இருந்தேன். இந்த வரிகளின் எளிமை, நேரடித் தன்மை, ஆறே சொற்களில் முந்தைய அனைத்து சொற்பிதங்களையும் பெருக்கித் தள்ளிவிடும் லாகவம், மேலான சிநேகபாவம் – எது என்று சொல்வதற்கில்லை. விவேகானந்தர் மூலம்தான் நான்...

சுகம் பிரம்மாஸ்மி – 2

அப்பா எனக்கு உபநயனம் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த நாள்களில் இனாயத்துல்லாவுக்கு அவன் வீட்டில் சுன்னத் கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள். சரியாக ஒரு மாதம். அவன் வீட்டில் விசேஷம் வந்துவிட்டது. எங்கள் வீட்டில் ஒரு மூன்று வருடங்கள் தள்ளிப்போட்டு, குரோம்பேட்டைக்குக் குடிவந்த பிறகுதான் அதைச் செய்தார்கள். இனாயத்துல்லா திகிலும் பரவசமுமாகத் தனக்கு நடக்கப்போகிற விஷயம் பற்றி என்னிடம்...

சுகம் பிரம்மாஸ்மி – 1

இது ஒரு வெகுநாள் திட்டம். எழுத நேரம் கூடாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாகவே சிந்தித்துக்கொண்டிருந்தேன். அவ்வப்போது பத்ரியிடம் மட்டும் பேசுவதுண்டு. எனக்கு மிகவும் நெருக்கமானவர்களாக நான் நினைப்பவர்களுள் முதன்மையான ஒருவரைப் பற்றி எழுதிப் பார்க்கவேண்டும். திரைகள், தடைகள் எதையும் அனுமதிக்காமல் மிகவும் நிர்வாணமாகச் சிந்தித்து, தோன்றியது தோன்றியபடி. இதில் என்...

சோதிடர்களின் கூட்டுச் சதி

கலைத்துறையில் புதிய தடங்கள் பதிப்பீர்கள். சொல்வாக்கும் செல்வாக்கும் மேலோங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் கூடும். எதிரிகள் சில்லறைத் தொல்லை தருவார்கள். ஆனாலும் சமாளித்துவிடுவீர்கள். சிறு உடல் உபாதைகள் வந்து போகும். பயணம் செய்யும்போது எச்சரிக்கை அவசியம். விபத்துகள் நேரிடலாம். மேற்கண்ட சோதிடப் பலன்கள், புத்தாண்டை ஒட்டி பண்டிதர் காழியூர் நாராயணன், யதார்த்த ஜோதிடர் செல்வி...

சென்னை புத்தகக் காட்சி 09 – நாள் 2

ம்ஹும். மக்களுக்கு இன்னும் விஷயமே தெரியவில்லை போலிருக்கிறது. இரண்டாம் நாளுக்குரிய வழக்கமான கூட்டத்தில் பேர்பாதிக்கும் குறைவு. நேற்றைய பதிவில் நான் குறையாகச் சொல்லியிருந்த இரண்டு விஷயங்கள் மீது இன்றைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. டாய்லெட்டில் நாற்றமில்லை, கண்காட்சி அரங்க வளாகத்தின் நுழைவாயில் அருகே ஒரு குடிதண்ணீர் கேன். நிச்சயமாக பபாசி அமைப்பாளர்கள் வலைப்பதிவு வாசித்திருக்க வாய்ப்பில்லை...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி