ArchiveJanuary 2009

புத்தகங்கள் விற்பனை செய்யக்கூடாது…

(இந்தியாவில்) தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றிய புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சி அரங்குகளில் விற்பனை செய்யக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு ஒன்று காவல்துறையிடமிருந்து புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்துக்கு (பபாஸி) வந்துள்ளது. பபாஸி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சென்னை புத்தகக் கண்காட்சியில், கிழக்கு பதிப்பகம் அரங்கில் கீழ்க்கண்ட புத்தகங்கள் இப்போதைக்கு விற்பனைக்குக் கிடைக்கா:...

சென்னை புத்தகக் காட்சி 09 – நாள் 1

முப்பத்தி இரண்டாவது சென்னை புத்தகக் கண்காட்சி மழைப் பிரச்னையில்லாமல் நல்லபடியாக இன்று தொடங்கியது. அப்துல் கலாம் வரவில்லை. ஏதோ சரும நோய். வைரஸ் தாக்குதல். மருத்துவமனையில் இருக்கிறார். இரண்டு நாள்கள் முன்னதாகத் தேதியிட்ட அவருடைய வாழ்த்துச் செய்தி மட்டும் வந்திருந்தது. பதிப்பாளர் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன் அதை மேடையில் படித்தார். வழக்கம்போல் விழாத்தலைவராக நல்லி குப்புசாமி செட்டியார்...

அப்துல் கலாமுக்கு பதில் ஹரன் பிரசன்னா?

“இன்று தொடக்க நாள். தொடங்கி வைக்க அப்துல் கலாம் வருவாரா மாட்டாரா என்று தெரியவில்லை. என்னை அழைத்தாலும் போகமுடியுமா எனத் தெரியவில்லை. நிறைய அரங்கவேலைகள் இருக்கின்றன. பார்க்கலாம். சென்ற முறை முதல்வர் கருணாநிதி வருவதாக இருந்தது. மழை காரணமாக அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. இன்னொரு நாள் வந்தார். இந்த முறையும் மழை, அப்துல் கலாமிற்கு உடல்நலக் குறைவு வேறு. என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். சென்ற...

சுட்டு சாப்பிடு, சூப்பர் டேஸ்டு

அந்த இளைஞரை நான் வெகு காலமாக கவனித்து வந்தேன். திறமை முழுவதையும் ஏன் இப்படி நூறு சதவீதம் வீணாக்கிக்கொண்டிருக்கிறார் என்று எப்போதும் தோன்றும். ஒரு கட்டத்தில் அவர் போலி குழுமத்தில் ஒருவர் என்று யாரோ சொன்னார்கள். சே என்று வெறுத்துப்போய் கொஞ்சகாலம் அவரது வலைப்பதிவைப் படிக்காமல் இருந்தேன். [ஆனால் போலி டோண்டு வலைப்பதிவை மட்டும் தவறவிடமாட்டேன்.] பாலபாரதி என்னைச் சந்திக்க வரும்போதெல்லாம் தவறாமல்...

மழை

சென்ற வருடம் போலவே இந்த வருடமும் புத்தகக் கண்காட்சியை மழை வரவேற்கிறது. நேற்று வரை ஒன்றுமில்லை. ஆனால் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம், மதியத்துக்குப் பிறகு பொழியத் தொடங்கியிருக்கிறது. நாளைக்குள் நின்றுவிட்டால் நல்லது. நாளை பேய் மழை பெய்யும் என்று பூப்போட்ட சட்டை அணிந்துகொண்டு வானிலை ஆய்வு மைய அதிகாரி ரமணன் இன்று தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினாலொழிய பொழியாமல் விடப்போவதில்லை...

குரல் கொடுங்கள்!

99411-37700 575758 முதலாவது தொலைபேசி அழைப்புக்கு. அடுத்தது எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு. மேற்படி மொபைல் எண்ணில் நீங்கள் தொடர்பு கொண்டு பேசலாம். எங்களுடைய New Horizon Mediaவின் புத்தகங்கள் பற்றி, உங்கள் எதிர்பார்ப்புகள், பாராட்டுகள், கோபங்கள், கண்டனங்கள், ஆர்வங்கள், அக்கறைகள் அனைத்தையும் இந்த எண்ணில் தொடர்புகொண்டு சொல்லலாம். எங்களுடைய வெளியீடுகள் தொடர்பாக நீங்கள் என்ன கேட்க / பேச விரும்பினாலும் சரி...

அம்பைக்கு இயல் விருது

2008ம் ஆண்டுக்கான இயல் விருது தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளர் என்று அறியப்படும் அம்பைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது,  கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது.  சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் போன்றவர்களைத்...

ஓர் அறிவிப்பு

நண்பர்களுக்கு வணக்கம். சென்னை புத்தகக் கண்காட்சி குறித்த பதிவுகள் அடுத்து வரும் தினங்களில் இங்கு அதிகம் இடம்பெறும். அநேகமாக அவை மட்டுமேகூட இடம்பெறலாம். பதிவாக வெளியிட வேண்டிய அளவு அவசியமற்ற சுருக்கமான தகவல்களை ட்விட்டரில் அப்டேட் செய்ய உத்தேசித்திருக்கிறேன். அதுவும் உடனுக்குடன் இந்தத் தளத்திலேயே வாசிக்கக் கிடைக்கும்படி செய்திருக்கிறேன். இந்தக் காரணங்களால்…

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version