ArchiveFebruary 2009

சாட்சிக்காரன் குறிப்புகள்

கனவே போலத்தான் இருந்தது. ஒருமுறை கண் இமைத்துத் திறக்கும் நேரத்தில் அவளை நான் கண்டுகொண்டேன். ஞாபகத்தில் பிசகேதும் இல்லை.  ஓட்டல் ஸ்ரீ அருகம்புல் விநாயகா – பிராக்கெட்டில் சுத்த சைவம் – முதலாளி தையூர் வரதராஜு முதலியாரின் இரண்டாவது பெண் பொற்கொடிதான் அவள். பதினெட்டு வயதில் பார்த்தது. பத்து வருஷத்துக்கு உண்டான தோற்றம் சார்ந்த மாற்றங்கள் இருப்பினும் அடிப்படை வார்ப்பு மாறிவிடுமா என்ன...

மகளிரும் சிறுவரும்

அவசரத்தில் கவனிக்கவில்லை. ஏறிய பேருந்தின் முன்புறமே போர்டு இருந்திருக்கும். மகளிரும் சிறுவரும். ஏறும்போதாவது யாரும் எச்சரித்திருக்கலாம். யோவ் பெரிசு, இந்த வயசுல இன்னா தில்லா லேடிஸ் ஸ்பெஷல்ல ஏறுறே என்று எந்த விடலையாவது உரத்த குரலில் கிண்டல் செய்திருக்கலாம். மாநகர இளைஞர்களெல்லாம் திருந்திவிட்டார்கள் போலிருக்கிறது. கண்டக்டர் பேருந்தின் முன்புறம் இருந்ததால் அவரும் பார்க்கவில்லை. அட, உள்ளே...

அபூர்வ சகோதரிகள்

கலி முற்றிய காலத்தில், மனுஷத்தனம் மரித்துவிட்ட சென்னைப் பட்டணத்தில், ஒரு கூட்டுக் குடும்பத்தில் என்னை உத்தியோகம் பார்க்க விதித்து அனுப்பி வைத்தான் எம்பெருமான். பத்தாங்கிளாஸ் படித்தவள் என்பது தெரிந்தால் பெருக்கித் துடைக்கச் சொல்ல அனேகமாக யார் மனமும் இடம் கொடுக்காது என்பது என் அனுபவ ஆசான் போதித்த பாடமாகையால், பணியாற்றப் போகுமிடங்களில் நான் என் கல்வித் தகுதி குறித்து ஒருபோதும்...

உலகை வென்ற இசை

பாடல்கள் பிரமாதம். பின்னணி இசை பிரமாதம். தமிழ் ரசிகர்கள் இதற்குமுன் இப்படியொரு இசையைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. நன்றாக இருக்கிறது என்பது இரண்டாவது. இளைஞனே, உன்னுடைய இசை மிகவும் புதிதாக இருக்கிறது. நீ பேசப்படுவாய். சரி, ஆடியோ ரெடியாகிவிட்டது. அட்டை டிசைன் தான் மிச்சம். சொல். ரசிகர்களுக்கு நீ என்ன பெயரில் அறிமுகமாகப் போகிறாய்? மணி ரத்னம் காத்திருந்தார். ரோஜா அவருக்கு ஒரு முக்கியமான படம்...

அமேசானில் பாரா

சமீபத்தில் இலண்டனில் இருந்து ஒரு வாசகர் என்னுடைய புத்தகங்களை வெளிநாடுகளில் வாங்குவதற்கு என்ன வழி என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். மக்கு மாதிரி அவருக்கு www.nhm.in உரலை அனுப்பி ஆன்லைனில் வாங்குவது எப்படி என்றெல்லாம் அரைகுறைப் பாடம் சொல்லி முழ நீளத்துக்கு பதில் எழுதினேன். மீண்டும் வந்த அவரது பதிலில் இருந்தது ஒரே வரி. அதில் பார்த்துத்தான் கேட்கிறேன், சொத்து முழுவதையும் இழக்காமல் எப்படி...

நடிகர் விக்கிரமாதித்யன்

ஏவி.எம் கார்டனில் நான் கடவுள் கலைஞர்கள் குவிந்திருந்தார்கள். பத்திரிகையாளர் சந்திப்பு ஏதோ நடந்திருக்கும் போலிருக்கிறது. மேக்கப் இல்லாத பூஜாவும் வந்திருந்தார். படத்தில் நடித்த உடல் ஊனமுற்ற சிறுவர்களையும் பெரியவர்களையும் ஆங்காங்கே சிலர் தூக்கிக்கொண்டு நடந்துகொண்டிருந்தார்கள். அத்தனைபேர் முகத்திலும் மகிழ்ச்சி, பரவசம். படத்தில் நடித்ததற்கான ஊதியம் தாண்டி குழுவினர் வேறு ஏதோ செய்திருக்கிறார்கள் என்று...

முக்கிய அறிவிப்பு : சில மாற்றங்கள்

* இந்தத் தளம் சமீப காலமாக அடிக்கடி சந்தித்துவரும் சில தொழில்நுட்பப் பிரச்னைகள் காரணமாகச் சில மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. * இனி www.writerpara.net என்கிற இத்தளத்தின் உரல் www.writerpara.com/paper/ என்று இருக்கும். * சில காலம் வரை www.writerpara.net என்கிற உரலும் வேலை செய்யும். அதாவது, புதிய இணையத்தள முகவரிக்கு இது உங்களை அழைத்துச் செல்லும். * இதனை முன்னிட்டு இத்தளத்தில் எழுதப்படுகிற...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me