ArchiveFebruary 2009

நான் கடவுள்

தவறாகப் புரிந்துகொள்ளப்படும் ஆன்மிகம், சரியாகப் புரிந்துகொள்ளப்படும் தீவிரவாதத்தைக் காட்டிலும் அபாயகரமானது. பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். வியப்பும் ஏமாற்றமும் ஒருங்கே தோன்றியது. வியப்பு, அவரது செய்நேர்த்தி பற்றியது. படத்தின் ஒரு ஃப்ரேமைக் கூட அலங்கரிக்காமல் விடவில்லை. ஒரு கதாபாத்திரம் கூட வெறுமனே வந்துபோகவில்லை. ஒரு காட்சிகூட வீணாக்கப்படவில்லை. ஒரு துண்டு வசனம் கூட, அது...

புளித்த பழம்

இது தொடர்பாக எழுதவே கூடாது என்று தீர்மானமாக இருந்தேன். ஏனோ முடியவில்லை. காலை செய்தித் தாளில் கலைஞரின் செயற்குழுப் பேச்சு விவரங்கள் பார்த்தபிறகு இந்தியாவில் அல்ல, உலகிலேயே இவருக்கு நிகரான இன்னொரு அரசியல்வாதி இருக்கமுடியாது என்று தோன்றிவிட்டது. எத்தனையோ பல வருடங்களுக்கு முன்பு வாசித்த பிரபாகரனின் ஒரு பேட்டியின்போதே ஈழப்போராட்டம் தனக்குப் புளித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். ஈழம் மலர்ந்தால், அங்கே...

சுகம் பிரம்மாஸ்மி – 6

அரைகுறைப் படிப்பு, கலவையான ஆர்வங்கள், எதிலும் முழுத்தேர்ச்சி இன்மை, மிகவும் உணர்ச்சிவசப்படும் இயல்பு, கேளிக்கைகளில் மிகுவிருப்பம், வீட்டுக்கோ, நட்புகளுக்கோ, உறவுகளுக்கோ, எனக்கேகூட உபயோகமின்மை, நேர்மையின்மை, வசதிக்கு – தேவைக்கு ஏற்ப விதிமுறைகளை வளைக்கும் அல்லது ஒடிக்கும் இயல்பு, எதையாவது பெரிதாகச் செய்துவிடவேண்டுமென்கிற வெறி அல்லது வேட்கை, ஆனால் எதையும் செய்யத் துப்பில்லாத மொக்கை புத்தி...

சுகம் பிரம்மாஸ்மி – 5

நான் கடவுளை விட்டு வெகு தூரம் விலகி இருந்த நாள்கள் என்று யோசித்தால் அடையாறு செண்ட்ரல் பாலிடெக்னிக்கில் படித்த மூன்று வருடங்களைத்தான் சொல்லத் தோன்றுகிறது. படித்த என்றா சொன்னேன்? மன்னிக்கவும். இருந்த. இப்போது யோசித்துப் பார்த்தால் அன்றைய என்னுடைய அத்தனை பொறுக்கித்தனங்களுக்கும் அடிப்படைக் காரணம், படிப்பு வரவில்லையே என்கிற பயம்தான் என்று தோன்றுகிறது. பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி