ArchiveJuly 2009

‘வரேண்டி மவளே, வெச்சுக்கறேன் ஒன்ன…’

சகவாச தோஷத்தால் சில நாள்களாக நிறைய ஆங்கில டப்பிங் படங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இத்துறையில் முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு முதலில் சற்று அதிர்ச்சியாக இருக்கும். திரைப்படம் பார்க்கும் உணர்வு என்பது, அது தரவேண்டிய நியாயமான சந்தோஷத்தைத் தூரத் தள்ளிவிட்டு, பேயறைந்தது போல் உட்காரச் செய்துவிடும். ஆனால் பழகப் பழக, இதனை ரசிக்க முடிகிறது. இந்த வகையில் சமீபத்தில் பார்த்து முடித்தவை: இரண்டு மூன்று ஹாரி...

ஆஹா என்று சொல்லுங்கள்!

நாளை மறுநாள் 26.7.2009 தொடங்கி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை 91.9 ஆஹா பண்பலை ரேடியோவில் [Aahaa FM-91.9] கிழக்கு பதிப்பகம் வழங்கும் ‘கிழக்கு பாட்காஸ்ட்’ என்னும் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. இது சினிமா நிகழ்ச்சியல்ல. ஒவ்வொரு வாரமும் உருப்படியான ஒரு விஷயம் தொடர்பான விரிவான கலந்துரையாடல் இதில் இடம்பெறும். கிழக்கு எழுத்தாளர்கள் பலர் பங்குபெறவிருக்கிறார்கள். முதல்...

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 15

‘என் ரூமுக்குப் போயி வெயிட் பண்ணு. அஞ்சு நிமிஷத்துல வரேன்’ என்று ஹெட் மாஸ்டர் சொன்னார். இதென்னடா ரோதனை என்று பத்மநாபனுக்கு அடிவயிற்றில் ஒரு பூச்சி பறந்தது. இன்றைக்கு ரிசல்ட். நாளைக்குப் பள்ளி திறக்கிறது. ரிசல்ட் பார்த்தாகிவிட்டது. அது ஒரு சம்பிரதாயம். கும்பலில் முட்டிமோதி போர்டில் ஒட்டியிருக்கும் பேப்பரில் தன் நம்பரைத் தேடிப் பிடிக்கிற சடங்கு. பிரச்னை ஒன்றுமில்லை. பாஸாகிவிட்டிருந்தான்...

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 14

நாளையோடு விடுமுறை முடிகிறது. ஓடியது தெரியாமல் ஓடி முடிந்துவிட்ட ஒரு மாதம். முப்பது நாள்களில் தூங்கிய நேரம் போக மிச்ச நேரமெல்லாம் மனத்துக்குள் வளர்மதியை நினைத்துக்கொண்டிருந்தது தவிர வேறென்ன செய்தோம் என்று பத்மநாபன் யோசித்துப் பார்த்தான். குறிப்பாக ஏதும் நினைவுக்கு வரவில்லை. இடையில் ராஜலட்சுமி திரையரங்கில் ஒன்றிரண்டு படங்கள் பார்த்தது ஒரு முக்கிய சம்பவமாக அவனுக்கே தோன்றவில்லை. நண்பர்கள்...

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 13

விடுமுறை அறிவித்துவிட்டார்கள். சரியாக ஒரு மாதம். பத்தாம் வகுப்புக்குப் போகவிருக்கிற மாணவ மாணவிகளுக்கு இருக்கவேண்டிய பொறுப்பு, அக்கறை குறித்தெல்லாம் ஹெட் மாஸ்டர் சாங்கோபாங்கமாக விவரித்துவிட்டு, லீவு நாள்களை வீணாக்காமல் படிக்கும்படி கெட்ட அறிவுரை சொல்லி அனுப்பிவைத்தார். பத்மநாபனுக்குக் கடந்த ஒருமாத கால படிப்பு அனுபவமே அறுபது வயது வரை தாங்கும்போலிருந்தது. என்ன ஆகிவிட்டது தனக்கு? பைத்தியம் பிடித்த...

கள்ளன்

ஊருக்கெல்லாம் அவன் ஒரு கொள்ளைக்காரன், கொலைகாரன். அதிபயங்கரவாதி. அவன்மீது ஏகப்பட்ட வழக்குகள். எது ஒன்றையும் தீர்க்க முடியாமல் காவல் துறை தடுமாறிக்கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து நடக்கும் கடத்தல், கொள்ளைச் சம்பவங்களுக்கும் அவனே காரணம் என்று முடிவு கட்டுகிறது. என்ன செய்து அவனைப் பிடிப்பது? தெரியவில்லை. ஊரில் வசிக்கும் பணக்காரப் பெரிய மனிதரின் மகள் ஒருத்தி கடத்தப்படுகிறாள். கடத்தியது யார்? அவன் தானா...

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 12

வளர்மதியைக் காதலிக்கத் தொடங்கிய நாளாக, பிரதிதினம் இரண்டு கடிதங்கள் வீதம் அவளுக்கு எழுதி ஒவ்வொரு பாடப்புத்தகத்தின் அட்டைக்குள்ளும் சொருகி வைப்பதை பத்மநாபன் வழக்கமாகக் கொண்டிருந்தான். புத்தகத்துக்கு மேலே போடப்படும் பிரவுன் அட்டைகள் எப்போதும் ரகசியச் சுரங்கங்களாகவே இருக்கின்றன. காதல் கடிதங்கள். தேர்வு பிட்டுகள். கெட்டவார்த்தைப் படங்கள். பிளாட்பாரத்தில் ஐந்து காசுக்கு இரண்டு வீதம் பொறுக்கியெடுத்து...

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 11

இன்றோடு வகுப்புகள் முடிகின்றன. சரியாக ஏழாவது நாள் தேர்வுகள் தொடங்கும் என்று நோட்டீஸ் போர்டில் ஹெட் மாஸ்டர் கையெழுத்துப் போட்ட அறிவிப்பை ப்யூன் எட்டியப்பன் வந்து ஒட்டிவிட்டுச் சென்றான். ‘வளர்மதி ஏன் இந்த ஒருவாரம் இஸ்கூலுக்கு வரல?’ என்று பத்மநாபன் ராஜாத்தியிடம் கேட்டான். அவனை ஒருமாதிரி முறைத்துப் பார்த்தவள், ‘தெரியல. தெரிஞ்சிக்கவேண்டிய அவசியமும் இல்ல’ என்று சொல்லிவிட்டுப் போனாள்...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me