ArchiveJanuary 2010

சென்னை சோதிடக் கண்காட்சி

பொதுவாக வாரப்பத்திரிகைகளில் வேலை பார்த்தவர்களுக்குப் பல விஷயங்களின்மீது நம்பிக்கை போய்விடும். சோதிடம் அவற்றுள் ஒன்று. மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற பிரபல சோதிடர்கள் எவ்வாறு வாரபலன் கணிக்கிறார்கள், ஆண்டு, மாத, குரு, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்ப் பெயர்ச்சிப் பலன்களை எழுதுகிறார்கள் என்று மிக நெருக்கமாகப் பார்த்து அறிகிற வாய்ப்பு அளிக்கும் ஞானம் அது. ஆனால் ஒரு கலையாக சோதிடத்தைப்...

ரகோத்தமனைச் சந்தியுங்கள்!

கிழக்கு பதிப்பகம் இந்தப் புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டிருக்கும் ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம் நூல் மிகப்பெரிய வெற்றி கண்டிருக்கிறது. அரங்குக்குள் நுழையும் ஒவ்வொரு வாசகரும் திரும்பிச் செல்லும்போது இந்த நூலை வாங்கிச் செல்வதைக் காண முடிகிறது. பத்திரிகைகள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் வட்டத்திலும் இந்நூல் மட்டுமே இன்றைக்குப் பேசப்படும் விஷயமாகி உள்ளது. பரபரப்பு அம்சம் தாண்டி, ஒரு...

உட்கார்ந்து பேசலாம், வருக.

புத்தகக் கண்காட்சியில் என்னைச் சந்திக்க விரும்பி வருகிற நண்பர்கள் சிலர், கிழக்கில் விசாரித்தேன்; உங்கள் போன் நம்பர் கிடைக்கவில்லை, நீங்கள் கிழக்கில் இல்லை, எங்கு இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை, சந்திக்க முடியவில்லை என்று மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். இதற்கு என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. நான் ஓரிடத்தில் அமரக்கூடியவன் அல்லன். குறிப்பாகக் கண்காட்சியில். ஆனால் கால் வலித்தால் எங்கு வேண்டுமானாலும்...

சில புகைப்படங்கள்

இன்று எடுத்த படங்கள் சில கீழே. பத்திரிகைத் தொடர் அத்தியாயங்கள் எழுதவேண்டியிருப்பதால் இங்கே இப்போது எழுத முடியாத சூழல். முடிந்தால் இன்றைய அனுபவங்களை நாளைக் காலை எழுதப் பார்க்கிறேன்.       ஒரே ஒரு அவசரக் குறிப்பு: உ.வே. சாமிநாதய்யர் நூலகத்தினர் முதல் முறையாக இவ்வாண்டு கண்காட்சியில் ஒரு சிறு கடையைப் போட்டிருக்கிறார்கள். ஐயரின் என் சரித்திரமும் (விலை ரூ. 300) அவருடைய உரைநடை நூல்களின்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி