ArchiveApril 2010

நண்பா, வணக்கம். காலம் கலிகாலம். நீயும் நானும் சந்திக்கும்போதெல்லாம் உலக அரசியல் பேசி உருப்படாமல் போவதே வழக்கமாக இருந்துவந்திருக்கிறது. இந்த முறை உனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கிறேன். நாம் அரசியல் பேசப்போவதில்லை. அக்கப்போர்களுக்கு இம்முறை இடமில்லை. யார் யாரைக் கவிழ்த்தார்கள், எங்கே என்ன புரட்சி, ஒசாமா பின்லேடன் கிடைப்பாரா மாட்டாரா, மூன்றாம் உலக யுத்தம் வருமா வராதா, எண்ணெய் விலை இன்னும் ஏறுமா, இந்தப்...

விட்டது சனி

சனியன் பிடித்த ஐபிஎல் நேற்று ஒரு வழியாக முடிந்தது என்பதை ட்விட்டரில் கண்டுகொண்டேன். எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ் தளத்துப் பாட்டி மாலை வேளைகளில் இனி பழையபடி கோயிலுக்குப் போய் விளக்கேற்றுவார். ஹெர்குலிஸ் ச.ந. கண்ணன் இறக்கிவைத்த குடும்ப பாரத்தையும் அலுவல் வீரத்தையும் மீளச் சுமப்பான். ஜெய்சங்கர் தெரு சாயிபாபா கோயில் வாசலடிப் பக்கிரி தருமம் செய்வோரை வாழ்த்த மறந்து ஸ்கோர் கேளாதிருப்பான்...

அன்லிமிடெட் அநியாயம்

சாருவின் சாமியார் ராசி மாதிரி எனக்கு ஒரு சாப்பாட்டு ராசி இருக்கிறது போல் உள்ளது. எங்காவது புதிய உணவகங்களைக் கண்டுபிடித்துப் போய் சாப்பிட்டுப் பார்ப்பேன். நன்றாக உள்ளது என்பதற்குமேல் கொஞ்சம் கூடுதல் தரம் தெரியுமானால் நண்பர்களுக்கு சிபாரிசு செய்வேன். ரொம்பக் கவர்ந்துவிட்டால் இங்கே எழுதிவிடுவேன். நான் எழுதியதைப் படித்துவிட்டு நண்பர்கள் இடத்தைத் தேடி எங்கெங்கிருந்தோ வந்து சாப்பிட்டுப் பார்த்துவிட்டு...

தேவை, அவசர உதவி

இந்தப் பையன் நன்றாக எழுதுகிறான். சிறுகதைகளைப் படித்துப் பார்த்தேன், உருக்கமாக, நன்றாக உள்ளன. பிரசுரித்து ஊக்குவிக்க முடியுமா பார் என்று ஒரு துண்டுத் தாளில் எழுதிக் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார் அசோகமித்திரன். ஈர்க்குச்சிக்கு மூக்குக் கண்ணாடி போட்ட மாதிரி என்னெதிரே நின்றுகொண்டிருந்த முத்துராமனுக்கு அப்போது அதிகம் போனால் இருபது வயதுதான் இருக்கும். ஆதிகால மணிரத்னம் படங்களில் இடம்பெற்ற வசனங்களை...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி