ArchiveJune 2010

செம்மொழி மாநாடு 2010

ஆரவாரமான எதிர்ப்புகள், ஆயிரம் குற்றங்குறைகள், ஏற்பாட்டுக் குளறுபடிகள், கூட்டம், நெரிசல், தள்ளுமுள்ளு, குழப்படி இன்னபிற. இவ்வரிசையில் பட்டியலிட இன்னும் பல நூறு இருந்தாலும் செம்மொழி மாநாடு சிறப்பாகவே நடந்து முடிந்திருக்கிறது. கணக்கற்ற கோடிகள் செலவில் எதற்காக இப்படியொரு மாநாடு என்று ஆரம்பித்து, இதனால் சாதித்தது என்ன என்பது வரை ஒரு புத்தகமே வெளியிடக்கூடிய அளவுக்குக் கேள்விகள் இருந்தாலும், உலகம்...

மாமியும் சுண்டலும்

நவராத்திரி. கிடைத்த சான்ஸை விடாதே என்று உள்ளுணர்வு குரல் கொடுக்க, பச்சை கலர் பட்டுப்புடைவை அணிந்த குண்டு மாமி, பக்கத்து வீட்டு கொலு பொம்மைகளுக்கு எதிரே உட்கார்ந்து கர்ண கொடூரமாகப் பாட ஆரம்பிக்கிறார். ஆலாபனை, பல்லவி, அனு பல்லவி, சரணம், சிட்ட ஸ்வரம், கெட்ட ஸ்வரம் எல்லாம் போட்டு, தவறியும் சுதி சேராமல் அவர் பாடிக்கொண்டே போக, ஒரு மரியாதைக்குப் பாடுங்கள் என்று சொல்லிவிட்ட அந்தப் பாவப்பட்ட பக்கத்து...

எடிட்டர் டாவிதார்

பிம்பங்கள் உடைவதைப்போல் வலி மிகுந்த சுவாரசியம் வாழ்வில் வேறில்லை. இன்றைய என் காலை பெங்குயின் எடிட்டர் டேவிட் டாவிதார் மீதான பாலியல் வழக்குச் செய்தியுடன் விடிந்தது. டாவிதார், என் மானசீகத்தில் என்னைக் கடந்த ஆறேழு ஆண்டுகளாக வழி நடத்திக்கொண்டிருந்தவர். அவர் பெங்குயின் இந்தியாவிலிருந்து மாற்றலாகி, பெங்குயின் கனடாவுக்குச் சென்று, அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகி எக்செல் ஷீட்டுகளுடன் வாழத்தொடங்கிய பிறகும்...

நல்ல பதிவு, நன்றி பத்ரி

விளையாட்டாக ஆரம்பித்ததுதான். இத்தனை தீவிரமாக வலையுலகம் இதனைப் பரப்பும் என்று நினைக்கவில்லை. விபரீதம் ஏதும் விளையாதிருப்பதற்காக இந்தக் குறிப்பை இங்கே எழுதிவைக்கிறேன். சில காலம் முன்னர் பத்ரி தன் வலைப்பதிவில் மிகவும் உக்கிரமாக அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த நீள நீளமான கட்டுரைகளை எதற்கோ நேர்ந்துகொண்டாற்போல தினமொன்றாக எழுதித் தள்ளிக்கொண்டே இருந்தார். சற்றும் தொடர்பில்லாமல் இடையிடையே உலக அரசியல்...

மூன்று காப்பியங்கள்

தமிழின் தொன்மைக்குச் சான்றாக விளங்கும் இலக்கியங்களுள் ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியவை மிக முக்கியமானவை. இந்த ஐந்து காப்பியங்களுள் வளையாபதியும் குண்டலகேசியும் இன்று நமக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. இரண்டிலும் மிகச்சில பாடல்கள் மட்டுமே நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. கிடைக்கிற பாடல்களை வைத்து இந்தக் காப்பியங்கள் எதை, யாரைப் பற்றிப்...

கிழக்கு உலக சினிமா

வரும் ஞாயிற்றுக்கிழமை [6.6.2010] மாலை 5.30 மணிக்கு கிழக்கு மொட்டை மாடியில் Paradise Now – பாலஸ்தீனியத் திரைப்படம் திரையிடப்படுகிறது. அனைவரும் வருக. இயக்கம் : Hany Abu-Assad எழுத்து  : Hany Abu-Assad – Bero Beyer ஒளிப்பதிவு : Antoine Heberle 2005ம் ஆண்டு வெளியான இந்தப் படம் கோல்டன் க்ளோப் விருது பெற்றது. உணர்ச்சிகரமான, அற்புதமான திரைக்கதையைக் கொண்டது. உள் அரசியல்களால் ஆஸ்கர் விருது...

பதிப்பு – திருச்சி – கருத்தரங்கம்

ஜூன் 3, தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்தநாளை, கௌரா இலக்கிய மன்றமும் முத்தமிழ்க் கலைப் பண்பாட்டு மையமும் உலக தமிழ்ப் பதிப்பாளர் தினமாகக் கொண்டாட முடிவெடுத்துள்ளன. இதனையொட்டி, ஜூன் 5 சனிக்கிழமை அன்று திருச்சியில் தமிழ்ப் பதிப்பாளர் தினக் கருத்தரங்கு ஒன்றை நடத்துகிறார்கள். இடம்: திருச்சி கலையரங்கம், மேல் தளம் நேரம்: மாலை 5 மணி தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றுபவர்: த. சவுண்டையா, திருச்சி மாவட்ட...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி