ArchiveAugust 2010

நீரில் மிதக்கும் தேசம்

நிகழும் விக்ருதி வருஷம் ஆவணி மாதம் சுக்லபட்சம் நாளது தேதி வரைக்கும் இந்தப் பூவுலகில் நிகழ்ந்த மாபெரும் இயற்கைப் பேரழிவுகளில் ஒரு நாலஞ்சாவது நமக்கு உடனே உடனே நினைவுக்கு வரக்கூடியவை. ஒண்ணுமே தோன்றாவிட்டாலும் பல்ராம் நாயுடுவை நினைவுகூர்ந்து, அந்த சுனாமியைச் சட்டுபுட்டெனச் சொல்லிவிடுவோம். கொஞ்சம் யோசித்து குஜராத் பூகம்பம் என்போம். பரந்த அல்லது பறந்த அனுபவஸ்தர்கள் அமெரிக்க மண்ணிலே, சப்பானிய யென்னிலே...

கழுதைகள் இழுக்கும் வண்டி

சில மாதங்களுக்கு முன்னர் பாஸ்போர்ட் வாங்குவதற்காக நான் என்னுடைய அடையாள ஆவணங்களை எடுத்துச் சரிபார்க்க வேண்டிவந்தது. அதாவது அரசாங்க முத்திரையுடன் என்னிடம் உள்ள ஆவணங்கள். முதலாவது என்னுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ். நல்ல மார்க். சிறந்த எதிர்காலம். நன்கு படித்துக்கொண்டிருந்த பையன் என்பதற்கான அத்தாட்சி. என் பெயர், பள்ளியின் பெயர் விவரங்களுடன் கோபுர முத்திரை போட்ட சான்றிதழ். அதை ரிசல்ட் வந்த...

தனியா-வர்த்தனம் 3

அதே கிராண்ட் டிரங்க். அதே முதல் வகுப்பு ஏசி. இரண்டு நாள் டெல்லியின் பேய் மழையை அனுபவித்துவிட்டு [பள்ளங்களிலெல்லாம் மாருதி கார்கள் மிதக்கின்றன – உபயதாரர்: காமன்வெல்த் போட்டிகள் – மந்திரிமார்கள் செல்லும் ராஜபாதைகளைத் தவிர மற்ற பிராந்தியமெல்லாம் அடித்த மழையில் அடையாளம் தெரியாத அளவுக்கு நாறிக்கிடக்கின்றன. ஒரே நாளில் 11 செண்டிமீட்டர்.] நான் போன ஜோலியையும் முடித்துக்கொண்டு திரும்பும்போது ஒரு நல்ல...

தனியா-வர்த்தனம் 2

விடிந்ததும் பல் தேய்த்து, காப்பி சாப்பிட்டுவிட்டுத் தூங்கிவிட முடிவு செய்திருந்தேன். மாவோயிஸ்டுகளும் ரயில் கொள்ளையரும் காலைப் பொழுதை அநேகமாக எதற்கும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்றொரு எண்ணம். அவ்வண்ணமே படுக்கையை விரித்து, இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்தும் விட்டேன். ஒரு சில நிமிடங்களில் அந்த தடதட சத்தம் ஆரம்பித்துவிட்டது. புத்திக்குள் பல்ப் எரிந்தது. மகனே இது வடவர் தேசம். இங்கே ரிசர்வ்ட்...

தனியா-வர்த்தனம் 1

கொஞ்சம் படிக்கவும் எழுதவும் வேண்டியிருந்தது. சரி, போகிற தூரத்தில் பொழைப்பாற்றலாமே என்று ரயிலில் டிக்கெட் போடச் சொல்லியிருந்தேன். விலை விகிதத்தில் விமானத்துடன் பெரிய வித்தியாசமில்லாத முதல் வகுப்புப் பெட்டி. இரண்டு இரவுகள், ஒரு பகல். ஸ்டேஷன் ஸ்டேஷனாக விதவிதமான இந்தி கேட்கலாம், வடவர் சப்பாத்தி சாப்பிட்டு ஹரே பஹ்ஹ்ய்யா என்று அடி வயிற்றிலிருந்து கூப்பிட்டுப் பார்க்கலாம், பத்தினியும் பத்திரியும்...

சிறுவர் எழுத்துப் பயிலரங்கம்

வரும் வெள்ளி-சனி [ஆக. 20,21] இரு தினங்களில் சிறுவர்களுக்காக எழுதுவது – பதிப்பிப்பது தொடர்பான பயிலரங்கம் ஒன்று புது தில்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக நாளை புறப்படுகிறேன். சிறுவர்களுக்காக எழுதப்படும் புத்தகங்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதைவிட, எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று இப்பயிலரங்கம் கற்றுத்தரும் என்கிறார்கள். காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்களை உருவாக்குதல் பற்றிய...

இன்னொரு கந்தசாமியின் கதை

வீதியின் இருபுறமும் குழிகள் தோண்டி, சவுக்குக் கட்டைகள் நட்டார்கள். எங்கிருந்தோ பிடுங்கிவரப்பட்ட தென்னை ஓலைகள் சரசரவென்று பின்னப்பட்டுக் கூரை ஏறின. உபயதாரர் பெயர் எழுதப்பட்ட குழல் விளக்குகள், பொதுவில் உருவப்பட்ட மின்சாரத்தில் மினுங்கி எரியத் தொடங்கின. லவுட் ஸ்பீக்கரில் எல்.ஆர். ஈஸ்வரி உயிர் பெற்றதும் என் வீட்டு வாசலில் ஆடி மாதம் பிறந்தது. நம் நாட்டில் கேள்வி கேட்க முடியாத விஷயங்களுள் இதுவுமொன்று...

வேஷம்

என் குழந்தையின் பள்ளிக்கூடத்தில் இன்று மாறுவேடப் போட்டி. பெற்றோருக்குக் கண்டிப்பாக அனுமதி இல்லை. வேஷம் போட்டு வாசலில் கொண்டு  விட்டுவிட வேண்டியது. முடிந்ததும் வந்து அழைத்துச் சென்றுவிட வேண்டும். பொதுவாக பள்ளி மாறுவேடப் போட்டிகளுக்கு ஒரு டச்சப் உதவியாளராகவாவது பெற்றோர் இருவரில் ஒருவர் அனுமதிக்கப்படுவதுதான் வழக்கம். இங்கே ஏதோ புதிய புரட்சி முயற்சி செய்து பார்க்கிறார்கள் போலிருக்கிறது. காலை...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me