ArchiveOctober 2010

ரஜினி ரசிகன்:சில குறிப்புகள்

[சற்று முன்னதாகவே இங்கு வெளியிட்டிருக்க வேண்டும். தாமதத்துக்குக் காரணம் மடினிப் பழுது.] அயோத்தி தீர்ப்பு. காமன்வெல்த் குளறுபடிகள். தஞ்சை கோயிலின் ஆயிரமாவது பர்த் டே. தடியூன்றும் வயதிலும் இளவரசராகவே இருக்கும் சார்லஸ் வந்தது. கொடநாட்டு தேவதை குடியிருப்புக் கேந்திரங்களுக்கு இறங்கிவந்து போராடத் தொடங்கியது. மதராசில் மழை. ஈக்வடாரில் புரட்சி. பர்வேஸ் முஷரஃபின் புதுக்கட்சி – எதையாவது தங்கத்...

இருபதாவது நாள்

கடந்த ஆறேழு ஆண்டுகளில் முதல் முறையாகத் தொடர்ச்சியாக பதினைந்து நாள்களுக்குமேல் என் மடினியை இழந்து நான் மட்டும் தனியாக இருக்கும்படி நேர்ந்தது. என்னவோ எல்சிடி பிரச்னை; கண்ணைப்பார் சிரி என்று கண்ணடித்துக்கொண்டே இருந்தது. சரி, சளி ஜலதோஷம் மாதிரி என்னவோ வந்திருக்கும் என்று சர்வீசுக்குக் கொடுத்தேன். பிரகஸ்பதி, நாளை காலை ஆதிபராசக்தி மீது ஆணையாகக் கொண்டுவந்து கொடுத்துவிடுகிறேன் சார் என்று வாக்குறுதி...

ஆவணி அவஸ்தைகள்

பாவப்பட்ட ஆனி, ஆடி மாதங்கள் முடிந்து, தாவணிகளுக்கு ப்ரமோஷன் கொடுக்கும் ஆவணிக்காலம் பிறந்தது முதல், நாளொரு கல்யாணம், பொழுதொரு ரிசப்ஷன். கல்யாண வயசில் எனக்கு இத்தனைபேர் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதே இப்போதுதான் தெரியவருகிறது. கடந்த பத்துப் பதினைந்து நாள்களுக்கு மேலாக அதிதீவிரத் திருமணத் தாக்குதல்களால் என் அன்றாட நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதற்குமுன் இப்படி தினமொரு...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி