ArchiveNovember 2010

அயோக்கிய சிகாமணி

பொதுவாக எனக்குக் கோபம் வராது. என்னை உசுப்பேற்றுவது மிகவும் கடினமான காரியம் என்று தெரிந்தவர்கள் சொல்லுவார்கள். என்னையறியாமல் இன்று மிகக் கடுமையான கோபத்துக்கு ஆட்பட நேர்ந்தது. விஷயம் இது: தெரிந்தவர் ஒருவர் வீட்டில் பிரச்னை. சில காலமாகவே. அவருக்கு வியாபாரத்தில் மந்தநிலை. எனவே பொருளாதாரச் சிக்கல். அடிக்கடி கணவன் மனைவிக்குள் பிணக்கு வரும். கோபித்துக்கொண்டு இருவரில் யாரும் அம்மா வீட்டுக்குப் போக...

நானேதானாயிடுக

என்னைவிட அழகாக இருக்கும் இப்படத்தை வரைந்தவர், என் நண்பர் சித்ரன் (என்கிற ரகு). இதன் சரித்திர முக்கியத்துவம் கருதி இங்கே சேமித்துவைக்கிறேன்.

இந்த வருடம் என்ன செய்தேன்?

பல வருடங்களாக எழுதிக்கொண்டிருந்த காஷ்மீர், அயோத்தி தொடர்பான அலகாபாத் உயர்ந்தீமன்றத் தீர்ப்புக்குப் பிறகு எழுதிய ஆர்.எஸ்.எஸ் – இரு நூல்களும் வருகிற ஜனவரி மாதம் வெளியாகின்றன. இந்த இரு புத்தகங்களைப் பற்றியுமே தனித்தனிக் குறிப்புகள் எழுத நினைத்திருந்தேன். நேரமின்மையால் தள்ளிப் போகிறது. விரைவில் எழுதிவிடப் பார்க்கிறேன். இது, நூல்கள் வெளிவருவதை உறுதி செய்யும் அறிவிப்பு மட்டுமே. இவை தவிர, நான்...

மலர்களே மலர்களே

தீபாவளி மலர்களை ஒரு காலத்தில் வெறித்தனமாக நேசித்திருக்கிறேன். புதுத்துணியோ பட்சணங்களோ, பாப்பையாக்களின் பட்டிமன்றங்களோ, புதுரிலீஸ் படங்களோ அல்ல. கல்கி, அமுதசுரபி, கலைமகள், ஓம் சக்தி, குண்டூசி, விஜயபாரதம் தீபாவளி மலர்களுக்காகவே தீபாவளியை விரும்பக்கூடியவனாக இருந்தேன். ஒவ்வொரு மலரையும் எடுத்து வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாகத் தடவித் தடவி கடைசிப்பக்கம் வரை முதலில் ஒரு புரட்டு. அதிலேயே சுமார் இரண்டொரு...

நூத்தியாறுப்புள்ளிநாலு

விடிந்து மணி ஏழானால் போதும். என் வீட்டு ரேடியோ தவறாமல் நூத்தியாறுப்புள்ளினாலு பாடத் தொடங்கிவிடுகிறது. மிர்ச்சி காலத்து சுசித்ரா இங்கே இப்போது மானிங் மீட்டர் போடுகிறார். பிட்டுச் செய்தி, நேயர் கருத்து, நெரிசல் தகவல், சினிமாப்பாட்டு என்று எல்லோரும் எப்போதும் கலக்கிற கலவையே எனினும் சுசித்ராவிடம் என்னவோ ஒன்று கூடுதலாக இருக்கிறது. என் மனைவி மானிங் மீட்டர் ரசிகை. தவறியும் இன்னொரு பண்பலைக்கு அவள்...

உற்றார்

பூமியாகப்பட்டது, தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வந்தபோது, மீனாட்சி மாமியின் எண்பது வயதுக் கணவருக்குப் பக்கவாதம் வந்தது. அதே பூமி சூரியனையும் சுற்றி வந்தபோது மீனாட்சி மாமிக்கு ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து உடம்புக்கு முடியாமல் போய் ஆசுபத்திரியில் சேர்க்கப்பட்டார். காலனி முழுக்க அதுதான் பேச்சு. ஐயோ பாவம் மாமி. படுக்கையை விட்டு எழமுடியாத கணவரை நினைத்தபடியே ஆஸ்பத்திரியில் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருப்பார்...

தவற விடுவது தவறு

தொடங்கி ஒரு மாதத்துக்குள் தீபாவளி வந்துவிட்டதால் தமிழ் பேப்பருக்கு இது தலை தீபாவளி. நாளை தமிழ் பேப்பர் தீபாவளிச் சிறப்பிதழாக வெளிவருகிறது. * தன்மீது வைக்கப்படும் கடுமையான விமரிசனங்களுக்கும் பொறுமையாக பதில் சொல்கிறார் ஜெயமோகன் – விரிவான பேட்டி. * ஆழி பெரிது என்று ஒரு தொடர் ஆரம்பிக்கிறார் அரவிந்தன் நீலகண்டன். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தலைமுறையின் உலகுக்கு வாசகர்களை விரல் பிடித்து...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me