ArchiveDecember 2010

அநீ

நிகழ்தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களுள் ஒருவர், அரவிந்தன் நீலகண்டன். நமது அதிர்ஷ்டம், அவர் இணையத்தில் எழுதுவது. துரதிருஷ்டம், அவரை ஒரு ஹிந்துத்துவவாதியாக மட்டுமே பார்த்து, என்ன எழுதினாலும் திட்டித் தீர்க்க ஒரு பெருங்குழு இருப்பது. பல சமயம் எனக்கு, இவர்களெல்லாம் படித்துவிட்டுத்தான் திட்டுகிறார்களா என்று சந்தேகமே வரும். ஏனெனில், போகிற போக்கில் பொத்தாம்பொதுவாக அரவிந்தன் எதுவும் எழுதுவதில்லை. தான்...

முதல் இரவு, முதல் குழந்தை மற்றும்…

விருதகிரியைவிடக் கொடுமையான ஒரு விஷயம் உலகில் உண்டு. புத்தம்புதிதாக ஒருத்தரைக் கண்டுபிடித்து, ஒரு சப்ஜெக்ட் தீர்மானித்து, அவரை ஓர் உருப்படியான புத்தகம் எழுத வைப்பது. ஒவ்வொரு வருடமும் குறைந்தது பதினைந்து முதல் இருபது பேரிடமாவது நான் இந்த விளையாட்டை விளையாடுகிறேன். என்னைத் தோற்கடிப்பதில் அளப்பரிய ஆர்வம் கொண்ட நல்லன்பர்கள், சொல்லி சொல்லி அழவைத்து பதில் விளையாட்டு விளையாடுவார்கள். நானும்...

மயிர் நீத்த காதை

இப்போதெல்லாம் என்னை ஓர் இடைவெளிக்குப் பிறகு பார்க்கிற அத்தனை பேரும் கேட்கிற முதல் கேள்வி பெரும்பாலும் என் சிகையலங்காரம் பற்றியதாக இருக்கிறது. என்ன இது என்னும் வியப்புடன் தொடங்கி, டை போடக்கூடாதா என்னும் அக்கறையுடன் விரிந்து, ரொம்ப வயசாயிட்ட மாதிரி தெரியுது என்று தீர்ப்பு சொல்லி முடித்துவிட்டுத்தான் அடுத்த விஷயத்துக்கே வருகிறார்கள். முதலில் ஒவ்வொருவருக்கும் பொறுமையாக விளக்கிக்கொண்டிருந்தேன். ஒரு...

கொடியில் ஏந்திய குழந்தை

இந்த வருடம் என்னை செமத்தியாக பெண்டு நிமிர்த்திய புத்தகம், ஆர். முத்துக்குமாரின் திராவிட இயக்க வரலாறு. பொதுவாக எத்தனை பெரிய புத்தகமாக இருந்தாலும் எடிட்டிங்கில் என்னிடம் இரண்டு மூன்று நாள்களுக்குமேல் நிற்காது. இந்தப் புத்தகம் கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்கு என்னை இழுத்துக்கொண்டுவிட, வழக்கமான காரியங்கள் பலவற்றை இதனால் நிறுத்திவைக்க வேண்டியதானது. [இதற்கு முன்னால் அதிகநாள் எடிட் செய்த புத்தகம் அநீயின்...

கொண்டாட ஒரு தருணம்

நல்லி செட்டியாருக்கு என்று அறிவிக்கப்பட்டாலும் தமிழர்கள் ஜீரணித்துவிடுவார்கள் என்றாலும், நாஞ்சில் நாடனுக்கு இவ்வாண்டு சாகித்ய அகடமி விருது என்னும் அறிவிப்பு உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது. நாஞ்சிலுக்கு அன்பான வாழ்த்துகள். தலைகீழ் விகிதங்கள் தொடங்கி நாஞ்சில் நாடனின் ஒரு படைப்பையும் நான் விட்டதில்லை. நமக்கே நமக்கென்று அந்தரங்கமாகச் சில விஷயங்கள் எப்போதும் இருக்குமல்லவா...

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்

ஜனவரி 4, 2011 அன்று தொடங்கவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியின் அரங்க வடிவமைப்பு வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. F 13,14,15 ஆகியவை கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடை எண்கள். கீழே வரைபடம் உள்ளது. வேறு சில முக்கியமான பதிப்பு நிறுவனங்களின் கடைகள் உள்ள இடங்களும் அதில் சுட்டப்பட்டிருக்கின்றன. வாசகர்களை சென்னை புத்தகக் கண்காட்சிக்குக் கிழக்கு சார்பில் அன்புடன் வரவேற்கிறேன்.

முகங்களின் பிறப்பிடம்

ஒரு புத்தகத்தை மக்கள் கையில் எடுப்பதற்குக் காரணமாக இருப்பவர்கள் அதன் வடிவமைப்பாளர்கள். எழுதியவர் யார், வாங்க வேண்டுமா வேண்டாமா, நன்றாயிருக்கிறதா இல்லையா, தேவையா தண்டமா போன்றவையெல்லாம் பிறகு வருகிற விஷயங்கள். முதலில் கையில் எடுக்க வேண்டும். அல்லது, என்னை எடு, எடு என்று அது சுண்டி இழுக்க வேண்டும். புரட்டு, புரட்டு என்று ஆர்வத்தைத் தூண்டவேண்டும். விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. சில புகழ் பெற்ற...

உருவி எடுத்த கதை

இசகுபிசகாக புத்தி கெட்டிருந்த ஒரு சமயத்தில் ஒரு பிரம்மாண்டமான நாவலுக்காகக் கொஞ்சம் மெனக்கெட்டேன். 1909ம் ஆண்டு தொடங்கி 2000வது ஆண்டு வரை நீள்கிற மாதிரி கதை. அந்தக் கதையின் ஹீரோ, கதைப்படி ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பிறக்கவேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் வேறு வேறு வயதுகளில்தான் பிறப்பான். உதாரணமாக, அவனது முதல் பிறவியில், பிறக்கும்போதே அவனுக்குப் பதினெட்டு வயது. அடுத்தப் பிறவியைத் தனது ஐந்தாவது...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி