ArchiveMay 2011

ஒரு ஆய் கதை

பதவியேற்பு விழாவுக்கு ஸ்ரீமான் நரேந்திர மோடி வந்தார், பார்த்துக்கொண்டே இருங்கள் – பத்து நாளுக்குள் குஜராத் மின்சாரம் ராம ரதத்தில் ஏறி வந்து சேரும் என்று சொன்னார்கள். தமிழகத்தைப் பிடித்த ஆற்காட்டு சாபம் அத்தனை சீக்கிரம் விமோசனம் பெறுமா என்ன? இது அரசியல் பேசும் கட்டுரையல்ல. நான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று நடைபெற்ற சம்பவம்.

சமச்சீர் படுகொலை வழக்கு

இந்த வருடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் படித்திருக்க வேண்டிய – தெய்வாதீனமாகத் தப்பித்த –  சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து சில வரிகளைக் கீழே கொடுத்திருக்கிறேன். இதில் உள்ள சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப் பிழைகள், சொற்றொடர் அமைப்புச் சிக்கல்கள்  எதற்கும் நான் பொறுப்பில்லை. புத்தகம் முழுவதுமே ஒரு சிறந்த நகைச்சுவை நூலை வாசித்த உணர்வைத் தந்தது என்பதை அவசியம் குறிப்பிட விரும்புகிறேன்...

மூன்று வருடங்கள்

இன்று காலை உலவியைத் திறந்தவுடன் ட்விட்டரில் ஒரு செய்தி வந்திருந்தது. நான் அங்கு எழுதத் தொடங்கி இன்றோடு மூன்று வருடங்கள் நிறைகின்றன என்பதே அது. மகிழ ஒன்றுமில்லை என்றாலும் கிட்டத்தட்ட தினசரி நான் பயன்படுத்தியிருக்கிறேன். செய்திகள், தகவல்கள், வெண்பாம்கள், சிந்தனைகள், நகைச்சுவை, உரையாடல், விவாதம், விதண்டாவாதம், இலக்கியம், சினிமா, வெட்டிப்பேச்சு அனைத்துக்கும் அந்த இடம் எனக்கு சௌகரியமாக இருந்து...

இடம், பொருள், ஆவல்

திரும்பவும் அவரை வாழ்வில் எதிர்கொள்ள நேரிடும் என்று நான் நினைத்துப் பார்க்கவேயில்லை. என் தவறுதான். நான் எத்தனை முறை தொலைபேசி எண்ணை மாற்றினாலும், ஒவ்வொரு முறையும் மாற்றிய ஒரு சில வாரங்களில் அவரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. ‘நம்பர் மாத்திட்டிங்கன்னு சொல்லவேயில்லியே?’ என்றுதான் உரையாடலை ஆரம்பிப்பார். ஆனால் மாற்றிய எண்ணை யாரிடமிருந்து பெற்றார் என்பதைச் சொல்லமாட்டார். என் எண்ணைக்...

எனது பர்மா குறிப்புகள்

சமீபத்தில் நான் மிகவும் ரசித்துப் படித்த புத்தகம், செ. முஹம்மது யூனுஸ் என்பவரின் நினைவுக் குறிப்புகளாகத் தொகுக்கப்பட்டிருக்கும் ‘எனது பர்மா குறிப்புகள்’. பொதுவாக இம்மாதிரியான தலைப்புகள் உள்ள புத்தகங்களை நான் எடுக்கமாட்டேன். என்ன காரணம் என்று தெரியாது. என் பல புத்தகத் தேர்வுகளைத் தலைப்புகள் தீர்மானித்து வந்திருக்கின்றன. இதன் காரணம் பற்றியே ஜேஜே சில குறிப்புகளை, அதைப் பார்த்த நாள் தொடங்கிப் பலகாலம்...

சின்னக் குத்தூசி

பழம்பெரும் பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி இன்று காலமானார். ஓராண்டு காலத்துக்கு மேலாக உடல்நிலை சரியில்லாமல் பில்ராத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனக்குத் தெரிந்து இந்த ஓராண்டு மட்டுமல்ல – இதற்குப் பல வருடங்கள் முன்பிருந்தே சின்னக்குத்தூசியை ஒரு தந்தையாக பாவித்து அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து வந்தவர் நக்கீரன் கோபால். குத்தூசியின் புத்தகங்களைக்கூட நக்கீரன்தான்...

கனிமொழியைத் தூற்றாதீர்கள்!

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச் சதியாளராக சுட்டிக்காட்டப்பட்டு, கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இருவார கால நீதிமன்ற விசாரணைக்காக அவர் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். இதுநாள்வரை வேறு எந்தக் கைது நடவடிக்கைக்கும் இல்லாத அளவு, இந்தச் செய்தி வெளியானது முதல் இணையத்திலும் வெளியிலும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தையும் ஆவேசத்தையும் ஒருங்கே பார்க்கிறேன். தமிழகப் பொதுத் தேர்தல் முடிவுகள்...

பெரிய வெற்றி, பெரிய தோல்வி

தேர்தல் முடிவுகள் உண்டாக்கிய அதிர்ச்சி மற்றும் கிளர்ச்சிகள் சற்று அடங்கத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. அதிமுகவின் இவ்வெற்றியை நான் முன்பே எதிர்பார்த்தேன் என்று கட்சிக்காரர்கள் அல்லாத வேறு யார் சொன்னாலும் நம்ப முடியாது. கட்சிக்காரர்களேகூட கண்மூடித்தனமான ஆராதிப்பு மனநிலையால் உந்தப்பட்டு சொல்லியிருப்பார்களே தவிர இதில் அறிவியல்பூர்வம் என்பதற்கு இடமே இல்லை. அறிவியல்பூர்வமான கருத்துக் கணிப்பு...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me