ArchiveMay 2011

பெரிய வெற்றி, பெரிய தோல்வி

தேர்தல் முடிவுகள் உண்டாக்கிய அதிர்ச்சி மற்றும் கிளர்ச்சிகள் சற்று அடங்கத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. அதிமுகவின் இவ்வெற்றியை நான் முன்பே எதிர்பார்த்தேன் என்று கட்சிக்காரர்கள் அல்லாத வேறு யார் சொன்னாலும் நம்ப முடியாது. கட்சிக்காரர்களேகூட கண்மூடித்தனமான ஆராதிப்பு மனநிலையால் உந்தப்பட்டு சொல்லியிருப்பார்களே தவிர இதில் அறிவியல்பூர்வம் என்பதற்கு இடமே இல்லை. அறிவியல்பூர்வமான கருத்துக் கணிப்பு...

இ.பாவின் வலைப்பதிவு

‘….வாருங்கள். சாப்பிடப் போவோம்’ என்று சொல்லிக்கொண்டே முன் சென்றார் முதல் அமைச்சர் என்.டி.ஆர்.
“இதுதான் காலம்சென்ற என் மனைவி. இவளை வணங்கிவிட்டுத்தான் என் காலைப் பணிகளைத் தொடங்குவேன்”என்று சொல்லிக் கொண்டே அவ்வண்ணப் படத்தெதிரே மெய்ம்மறந்து சில விநாடிகள் நின்றார் அவர்.
‘A pity!!. எனக்குப் பார்வை இல்லை’ என்றார் ஹக்ஸர்.
‘அகக்கண்ணால் பாருங்கள், தெரியும்’ என்றார் என்.டி.ஆர் உரக்க சிரித்துக் கொண்டே.

அழகர்சாமியின் குதிரை

சினிமாவுக்கு கௌரவம் சேர்க்கும் எழுத்து அடிக்கடி கண்ணில் படும். எழுத்துக்கு கௌரவம் சேர்க்கும் சினிமா அபூர்வம். சுசீந்திரன் இயக்கத்தில் அழகர்சாமியின் குதிரை, பாஸ்கர் சக்தியின் எழுத்துக்கு கிரீடம் சூட்டியிருக்கும் படம். சினிமாவுக்கென செய்யப்படும் சமரசங்கள் அதிகமின்றி, அதே சமயம் வெகுஜன மக்களின் ரசனையை விட்டும் நகராமல் மிகவும் கச்சிதமாக வந்திருக்கிறது இந்தப் படம். சுசீந்திரனுக்கு மனமார்ந்த பாராட்டு...

புவியில் ஒருவர்

புவியிலோரிடம், 1998-99 ஆண்டில் நான் எழுதிய நாவல். 2000ம் ஆண்டு இது வெளியானது. இதற்குமேல் இந்த நாவலைப் பற்றிச் சொல்லப் பிரமாதமாக ஒன்றுமில்லை. வெளிவந்த வேகத்தில் விற்றுத் தீர்ந்தது என்று சொல்ல ஆசைதான். ஆனால் வெளிவந்த வேகத்தில் காணாமல் போனது என்றுதான் சொல்லமுடியும். என் கணிப்பில் சுமார் 75 முதல் 100 பேர் இதை வாங்கியிருக்கலாம், படித்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.  இட ஒதுக்கீடு பிரச்னையை முன்வைத்து...

வெயிலோடு விளையாடு

சென்னையில் வெயில் வாட்டத் தொடங்கிவிட்டது. இம்மாதமும் அடுத்த மாதமும் எப்படிப் போகப்போகிறது என்றே தெரியவில்லை. இப்போதே ஆங்காங்கே வெயில் சார்ந்த வியாதிகள் தலையெடுக்க ஆரம்பித்திருக்கின்றன. இம்முறை சென்னைவாசிகள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன். நலம் வெளியீடுகளின் ஆசிரியர் ஆர். பார்த்தசாரதி, தமிழ் பேப்பரில் கத்திரிக் குறிப்புகள் எழுதியிருக்கிறார். இதெல்லாம்...

கஸ்தூரி ரங்கன்

தினமணியின் முன்னாள் ஆசிரியரும் கணையாழியின் நிறுவனருமான கி. கஸ்தூரிரங்கன் இன்று காலை காலமானார். சிலபேருடைய மறைவு வார்த்தையளவில் பேரிழப்பு. கஸ்தூரி ரங்கனின் மறைவு நான் உள்பட பலருக்கு வாழ்க்கையளவில் பேரிழப்பு.
விரிவாக எழுதுமளவுக்குத் தற்போது மனநிலை சுமூகமாக இல்லை. அவருக்கு அஞ்சலிகள்.

மானம் போகும் பாதை

உலகிலேயே மிகவும் கஷ்டமான காரியம் எது? என்னைக் கேட்டால் காய்கறி வாங்குவதுதான் என்று சொல்வேன். இது அத்தனை துல்லியமான பதில் இல்லை. இன்னும் சரியாகச் சொல்லுவதென்றால் மனைவி குறை கண்டுபிடிக்காதபடிக்குக் காய்கறி வாங்குவது. திருமணமாகி ஒரு முழு வனவாசகாலம் கடந்துவிட்ட பிறகும் இந்தக் கலையில் நான் ஒரு பெரிய இந்திய சைபர் என்பது என் மனைவியின் தீர்மானம். அநேகமாக இதைப் படித்துக்கொண்டிருக்கும் அத்தனை உத்தமோத்தமக்...

ஒசாமா, அமெரிக்கா, மற்றுமொரு தோழர்

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டிருக்கிறார். பத்து வருட காலம் அமெரிக்கப் படைகள் காடு மலையெல்லாம் தேடித் திரிந்ததற்குப் பலன். பாகிஸ்தான் உளவுத் துறையின் உதவியில்லாமல் இது சாத்தியமாகியிருக்காது என்பது குழந்தைக்கும் தெரியும். எத்தனை பில்லியன் அல்லது ட்ரில்லியன் டாலர் பேரம் என்பதெல்லாம் காலக்ரமத்தில் விக்கிலீக்ஸில் வெளிவரலாம்.

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி