ArchiveJune 2011

எல்.பி.ரோடில் அரிக்காமேடு

அவர் கூப்பிட்டுக்கொண்டேதான் இருந்தார். இதோ அதோ என்று இழுத்தே வருடம் ஒன்றுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று சந்திக்க நேர்ந்தது. அடையாறு எல்பி சாலையில் அவர் தனியே ஒரு அரிக்காமேடு வைத்திருக்கிறார். ஒரே வித்தியாசம். இங்கு நாம் தோண்டவேண்டாம். தோண்டி எடுத்து ஆராய்ச்சி செய்து அடிக்குறிப்புகளோடு அவர் தயாராக வைத்திருக்கிறார். தொன்மத்தில் ஆர்வமும் கொஞ்சம் கற்பனையில் மிதக்கும் வழக்கமும் இருந்தால் போதும். அவரது...

பாரா-ட்டு

ஆண்டுதோறும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில், சிறந்த எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து, பாராட்டி விருதளித்து கௌரவிப்பது வழக்கம். இந்த ஆண்டு அந்தச் சிறப்பை எனக்கு அளித்திருக்கிறார்கள். ஜூலை 8, 2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு கண்காட்சி வளாகத்தில் உள்ள லிக்னைட் ஹாலில் இந்தப் பாராட்டு விழா நடைபெறவிருக்கிறது. [ஜூலை மாதம் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.]...

ஆஸ்வல்டும் அதிசய மீனும்

மீன் வளர்க்கலாம் என்று ஆஸ்வல்ட் முடிவு செய்தது. வின்னிக்குப் பொழுதுபோவது கஷ்டமாக இருக்கிறது. வீட்டில் குட்டி மீனொன்று துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
‘வா, வின்னி. நாம் மீன் வாங்கி வரலாம்’ என்று தன் செல்ல நாய்க்குட்டியை அழைத்துக்கொண்டு வளர்ப்பு மீன் கடைக்குப் போனது ஆஸ்வல்ட்.

சில சொகுசு ஏற்பாடுகள்

வாசகர்களின் வசதி அல்லது இம்சைக்காக இந்தத் தளத்தில் சில புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீங்களே சற்று அப்படி இப்படிக் கண்ணை நகர்த்தினால் தென்பட்டுவிடும் என்றாலும் எடுத்துச் சொல்லவேண்டியது என் கடமை.

10 1/2 காதலெதிர்க் கவிழுதைகள்

வ்ரைட்டர்பேயோன் தனது தளத்தில் பதினைந்து காதல் கவிதைகள் எழுதியிருக்கிறார். இந்தரக டெம்ப்ளேட் கவிதைகள் எழுதுவது மிகவும் எளிது. [அவரும் அதை அறிந்தேதான் எழுதியிருக்கிறார்.] ஒரு வேகத்தில் 115 கவிதைகள் எழுதுகிறேன் என்று அவரிடம் சொல்லியிருந்தாலும் இப்போதைய வேலைகளுக்கு இடையில் என்னாலான கவிச்சேவை இந்த பத்தரை கவிதைகள்தான். மிச்சம் எங்கே என்று கேட்கமாட்டீர்கள் என்று திடமாக நம்புகிறேன். இது புறமுதுகிடுவதல்ல...

எனக்கு என்ன பிடிக்கும்?

தொலைக்காட்சிகளில் வரும் டாக் ஷோக்கள் எனக்கு மிகுந்த அலர்ஜி உண்டாக்கக்கூடியவை. நினைவு தெரிந்து எந்த ஒரு டாக் ஷோவையும் நான் முழுக்கப் பார்த்ததில்லை. அது என்னவோ தெரியவில்லை. இந்த டாக் ஷோக்களில் வரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அநியாயத்துக்கு செயற்கையாகப் பேசுகிறார்கள். அராஜகத்துக்கு ஓர் அளவே இல்லாதபடிக்குத் தொண்டை கிழியக் கத்துகிறார்கள். புருஷன் பெண்சாதிச் சண்டைகளை மேடையில் நிகழ்த்திக்...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me