ArchiveJuly 2011

பாராவின் பங்கெடுத்து வை

மிகப் பல வருடங்களுக்குப் பிறகு இன்று திருநீர்மலைக்குக் குடும்பத்துடன் சென்று வந்தேன். குரோம்பேட்டையில் இருந்த காலத்தில் அது பக்கத்து க்ஷேத்திரம். எனக்கு முன்னால் திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வாரெல்லாம் அங்கே போய் பாடியிருக்கிறார்கள். திருமங்கையாழ்வார் திருநீர்மலைக்குப் போனபோது ரங்கநாதப் பெருமாளை ஏறிச் சென்று சேவிக்கக்கூட அவரால் முடியவில்லை. பெரிய மழைக்காலம் போலிருக்கிறது. ஊர் முழுக்க தண்ணீர்...

குளத்துக்குள் குரங்கு பெடல் – பார்ட் டூ

செல்டெக்ஸ் உடனான எனது துவந்த யுத்தம் ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கிறது இப்போது. காசு கொடுத்துத் திரைக்கதை எழுதும் மென்பொருள் வாங்க வழியில்லாத / விரும்பாத எழுத்தாளர்கள் இனி சிக்கலேதுமின்றி செல்டெக்ஸைப் பயன்படுத்த இயலும்.
செல்டெக்ஸ் குறித்த என்னுடைய முந்தைய கட்டுரையை வாசித்துவிட்டு இதைப் படித்தால் புரிவதில் பிரச்னை இருக்காது என்று நினைக்கிறேன்.

சொல்லால் அடித்த சுந்தரி

01. என்றார் அவர் 02. என்பது ஆகும் 03. களுக்கென்று சிரித்தாள் 04. கண்கள் பனித்தன 05. என்பதாய் இருக்கிறது 06. குழந்தைக்கும் தெரியும் 07. பளீரிட்டன 08. மட்டும் நிஜம் 09. என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் 10. திருதிருவென முழித்தார் 11. ஜில்லிட வைத்தது 12. மீட் பண்ணுவோம் 13. என்ன செய்வதென்றே புரியவில்லை 14. வார்த்தைகளே இல்லை 15. அவரின் அப்பா 16. என்ன கொடுமை இது? 17. ச்சீய் 18. அம்மாவின் நியாபகம் 19...

எழுபத்திரண்டு சீன், முற்றும்.

கடந்த நாலு தினங்களாக நான் ஊரில் இல்லை. திடீரென்று கிளம்ப நேர்ந்ததால் யாரிடமும் சொல்லிக்கொள்ள அவகாசம் இல்லை. போன இடத்தில் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்ய நேர்ந்ததால் யாருடனும் பேசவும் இல்லை. இது ஒரு பெரிய விஷயமா என்று வியக்குமளவு, வந்து மெயில் பார்த்தபோது ஏராளமான விசாரிப்புகள். ஊரில் இல்லையா, உடம்பு சரியில்லையா, வேறு பிரச்னையா – இன்னபிற. அனந்த பத்மநாபனிடம் பணம்தான் இருக்கிறது. எனக்கு எத்தனை நல்ல...

எம்பிபிஎஸ் கலைஞர்கள்

எனக்குச் சில இங்கிலீஷ் மருந்து டாக்டர்களைத் தெரியும். அவர்கள் நாடி பிடித்துப் பார்க்க மாட்டார்கள். ஊசி குத்த மாட்டார்கள். நாக்கை நீட்டச் சொல்லி டார்ச் அடிக்கமாட்டார்கள். ஆப்பரேஷன், அனஸ்தீஷியா என்று அச்சுறுத்துகிறவர்களும் இல்லை. பிரதி ஞாயிறுகூட விடுமுறை அறிவிக்காமல், வீடு பெண்டாட்டி வகையறாக்களை சாமிக்கு நேர்ந்துவிட்டதுபோல் கவனிக்காமல் விட்டுவிட்டு, எப்போதும் கிளினிக்கில் நோயாளிகளுடன் துவந்த...

காக்கை வளர்ப்பு

அந்தக் காகம் எப்போதிருந்து சிநேகமானது என்று சரியாக நினைவில்லை. எனக்கு மிகவும் பிடித்தவர்களாக இருந்து, இறந்துபோன என் தாத்தா அல்லது மாமனார் இருவரில் ஒருவராக அது இருக்கலாம் என்று என்றோ ஒருநாள் தோன்றியது. மறு பிறவியில் நம்பிக்கையில்லாதவன்தான். ஆனாலும் சமயத்தில் இப்படியும் தோன்றுவது, என்னைக் கேட்டுக்கொண்டல்ல.

ரொம்ப முக்கியம்.

[tabs slidertype=”left tabs”] [tabcontainer] [tabtext]அறிமுகம்[/tabtext] [tabtext]அதிகாரம் 1[/tabtext] [tabtext]அதிகாரம் 2[/tabtext] [tabtext]அதிகாரம் 3[/tabtext] [tabtext]அதிகாரம் 4[/tabtext] [/tabcontainer] [tabcontent] [tab]நேற்று ராத்திரி மெக்சிகன் பிஸ்ஸா சாப்பிட்டேன். ரொம்ப ருசியாக இருந்தது. இன்னும் இதற்கு சரியான சைட் டிஷ் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே என் கருத்து. மிளகுத் தூள்...

விழா மாலைப் போதில்…

ஆல்பர்ட் தியேட்டரின் கொள்ளளவு 1300 பேர் என்று சொன்னார்கள். அரங்கு நிறைந்து பலபேர் நின்றுகொண்டும் இருந்தார்கள். சரியாக ஏழு மணி என்று அறிவித்திருந்தும் நிகழ்ச்சி தொடங்கக் கிட்டத்தட்ட எட்டு மணியானதற்கும் யாரும் முகம் சுளிக்கவில்லை. மேடையில் இரண்டு முழுநீள வரிசைகளை ஆக்கிரமித்துப் பிரபலங்கள் உட்கார்ந்திருந்ததும், ஒருத்தர் விடாமல் அத்தனை பேரும் மைக்கைப் பிடித்து வாழ்த்துச் சொன்னதும்கூட யாருக்கும்...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me