ArchiveAugust 2011

இரண்டாம் பாகம் முற்றும்

நண்பர்களுக்கு வணக்கம். செய்தியாக நான் சொல்லவேண்டியதை வதந்தியாகச் சிலர் முந்திக்கொண்டு வெளிப்படுத்திவிடத் துடிப்பதை ஒருபுறம் ரசித்தபடி இதனை எழுதத் தொடங்குகிறேன். மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. அவை இயல்பானவை, இயற்கையானவை. ஆம். கிழக்கில் நாளை முதல் நான் இல்லை. பரஸ்பர நட்புணர்வு, புரிந்துணர்வு எதற்கும் பங்கமின்றி, இன்று விலகினேன்.

ஓர் அறிவிப்பு

சில தவிர்க்க முடியாத காரணங்களால் / வேலைகளால் இணையத்திலிருந்து சில தினங்கள் விடுமுறை எடுத்துக்கொள்கிறேன். இந்தத் தளம், ட்விட்டர், ஃபேஸ்புக் என நான் இயங்கும் அல்லது என் இருப்பைச் சொல்லும் இடங்கள் அனைத்துக்கும் இது பொருந்தும். அதிகபட்சம் ஒரு மண்டல காலம். குறைந்தபட்சம் இருபது நாள்கள்.
பிறகு சந்திப்போம்.

பங்கரை

சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஒரு காட்சி எனக்கு ரொம்பப் பிடிக்கும். கதாநாயகி ஜெனிலியா, முதல் முறையாக ஜெயம் ரவியின் வீட்டுக்கு வந்திருக்கிறார். ஒருவாரம் தங்கட்டும், பழகட்டும், உங்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தால் எனக்கு இவளைக் கல்யாணம் பண்ணிவையுங்கள் என்று கதாநாயகனாகப்பட்டவர் தனது தந்தையிடம் ஒரு நூதனமான டீலிங் போட்டிருக்கிறார். அந்த நல்ல குடும்பமானது, ஜெனிலியாவை, புதிதாக மாட்டிய முதல் வருஷ மாணவி...

டெலிகேஷன் ஆஃப் அத்தாரிடி

மனுஷகுமாரனாக பூமியில் உதித்த நாள் தொட்டு, இன்றுவரை ஒரு சமயமும் அலுத்துக்கொள்ளாமல், நூறு சதம் விருப்பத்துடன் நான் செய்யும் ஒரே செயல், என் மகளைக் குளிப்பாட்டுவதுதான். என்னைக் குளிப்பாட்டிக்கொள்வதில்கூட எனக்கு அத்தனை அக்கறை இருந்ததில்லை. பல சமயம் தண்ணீருக்குப் பங்கமில்லாமல் முழு நாளும் சோம்பிக் கிடந்திருக்கிறேன். இதைப்பற்றிய மேலிடத்து விமரிசனங்களை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. ஆனால் மகள்...

விசாரணைக்கு வா!

இந்தக் கதையைக் கேளுங்கள். இது ஒரு சோகக்கதை. நிச்சயமாகத் தொண்ணூறு மில்லி கண்ணீர் உத்தரவாதம். உங்களுக்கா எனக்கா என்பதுதான் பிரச்னை.

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி