ArchiveSeptember 2011

எனக்கு வேணாம் சார்!

நெடுந்தூரப் பேருந்துப் பயணம் ஒன்றில்தான் முதல்முதலில் அவர் எனக்கு அறிமுகமானார். ரொம்பக் கோபத்தில் இருந்தார். அரசுப் பேருந்துகளின் இருக்கைகள் ஏன் இன்னும் இருபதாம் நூற்றாண்டிலேயே இருக்கின்றன? பயணிகளின் முதுகுகள் மற்றும் முழங்கால்கள் குறித்து முதல்வருக்குப் போதிய அக்கறை இல்லை. தி ஹிந்துவுக்கு யாராவது வாசகர் கடிதம் எழுதிவிட்டு மெரினா கடற்கரையில் ஒரு கண்டன மாநாடு நடத்தினால் அவர் வந்து கலந்துகொண்டு...

ஹரே கிருஷ்ணா!

இந்த வருடம் எங்கள் வீட்டு கொலுவில் சேரும் புதிய பொம்மைகளுள் எனக்குப் பிடிதது, கிருஷ்ண பாகவதர் கச்சேரிக் காட்சிகள்.
திருவிளையாடல் படத்தில் சிவாஜியே அனைத்து இசைக்கலைஞர்களாகவும் உட்கார்ந்து வாசிக்கிற ஸ்டைல்தான். ஒரு முழு கிருஷ்ணர் செட். அனைத்து கிருஷ்ணர்களும் ஏகாந்தமாகப் பாடி, வாசித்துக் களிக்கிறார்கள்.
என்ன அழகு இந்த பொம்மைகளில்!

ஸ்வீட் எடு, கொண்டாடு!

சென்ற வாரத்தில் ஒருநாள், சென்னை நகரின் நட்ட நடு செண்டரிலிருந்து கிழக்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள சாந்தோம் தேவாலயத்தை ஒட்டிய ஒரு சந்து வரை ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. நீதி ஏதும் கேட்கிற உத்தேசமில்லை என்றாலும் நீண்ட நெடும் பயணம்தான். என் மூஞ்சூறு வாகனத்தில் உரிய இடத்தைச் சென்றடைய எப்படியும் ஒன்று முதல் ஒன்றரை மணிநேரம் ஆகலாம் என்று கணக்கிட்டு இருந்தேன். ஆனால் என்ன ஆச்சரியம். முதல்வர்...

பேசு கண்ணா பேசு

பேசிக்கொண்டே வேலை செய்கிறவர்களைப் பார்க்கிற போதெல்லாம் என்னையறியாமல் ஒரு பதற்றம் ஒட்டிக்கொள்ளும். எதிராளியின் வேலையோ, அதன் நேர்த்தி அல்லது பிழையோ எவ்விதத்திலும் என்னை பாதிக்கப்போவதில்லை என்றாலும் அந்தப் பதற்றத்தைத் தவிர்க்க முடிந்ததில்லை. நான் எழுதுபவன். வேலை செய்துகொண்டிருக்கும்போது, உலகம் அழிய இன்னும் ஒரு வினாடிதான் இருக்கிறது என்று எம்பெருமான் நேரில் வந்து தகவல் தெரிவித்தாலும் அது என் காதில்...

கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு

சாப்பிடுகிற விஷயத்திலும், அதைப் பற்றி எழுதுகிற விஷயத்திலும் எனக்கு எத்தனைக் கொலைவெறி ஆர்வம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். பத்திரிகைகளில் நான் இதுநாள் வரை எழுதிய அத்தனை தொடர்களிலும் பார்க்க, எனக்கு மிகவும் பிடித்தமானது உணவின் வரலாறுதான். ரசித்து ரசித்துத் தகவல் திரட்டி, ருசித்து ருசித்து எழுதிய தொடர் அது. இன்றும் கடிதம் எழுதும், போன் செய்து பேசும் பெரும்பாலான வாசகர்கள் ‘உ’வைக் குறிப்பிடாமல்...

எழில்மிகு சிங்காரம்

சென்னையை சிங்காரச் சென்னை என்று சொல்லக்கூடாது; எழில்மிகு சென்னை என்றுதான் சொல்லவேண்டும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.  இன்னும் கொஞ்சம் நல்ல தமிழ் என்ற வகையில் இதை வரவேற்பதில் யாருக்கும் பிரச்னை இருக்க முடியாது. ஆனால் இந்த சிங்காரம், எழில் போன்றவர்கள் சென்னையில் எங்கே வசிக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கலாம்.

ஆயிரம் அப்பள நிலவுகள்

கீதையிலே பகவான் சொல்கிறான், எது ருசியானதோ, அது உடம்புக்கு ஆகாது. எது எண்ணெயில் பொறிக்கப்பட்டதோ, அது கொழுப்பைக் கூட்டி, இடையளவை ஏடாகூடமாக்கும். நேற்று கடைக்காரனிடம் இருந்த அப்பளம் இன்று உன் வீட்டு வாணலியில் பொறிபடும். நாளை அது உன் வயிற்றில் ஜீரணமாகி, நாளை மறுநாள் டாக்டர் பாக்கெட்டுக்குப் பணமாக மாறிச் செல்லும். நீ உன் பெண்டாட்டியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு, வயிற்றைக் கட்ட வழி தெரியாது விழிப்பது உலக...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version