சாக்கடை அடைப்புகள். தார் காணா வீதியின் மேடு பள்ளங்கள். குவியும் குப்பைகள். நாய்த் தொல்லை. பன்றித் தொல்லை. கொசுத் தொல்லை. பிளாட்பார ஆக்கிரமிப்புகள். மட்டரகமான குடிநீர் வினியோகம். மோசமான மழைநீர் வடிகால். அன்றாட வாழ்வின் அசகாயப் பிரச்னைகள் கடந்தவாரம் முழுதும் ஆட்டோ ஏறி வீதிவலம் வந்தன. உண்மையில் இந்த உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் கூம்பு மைக் ஆட்டோக்களில் உட்கார்ந்தபடிக்கு மேற்படி பிரச்னைகளை...
ஜடாமுடிக்கு வழியில்லை!
பொதுவாக எனக்கு நகை அணிவது என்பது பிடிக்காது. பெண்கள் அணிவது, அவர்கள் பிறப்புரிமை. அது பற்றி இங்கே பேச்சில்லை. நகை அணியும் ஆண்களைப் பற்றியது இது. மோதிரம், செயின், கம்மல், வளையல் எனப் பெண்களின் பிதுரார்ஜித உரிமைகளில் நான்கினை ஆண்கள் தமக்குமான ஆபரணங்களாக அபகரித்துக்கொண்டது பற்றி நிரம்ப வருத்தப்பட்டிருக்கிறேன். பால்ய வயதுகளில் நகையணியும் ஆண்களைப் பார்க்க நேர்ந்தால் குறைந்தபட்சம் நாலடியாவது தள்ளி...