ArchiveDecember 2011

சயந்தனின் ஆறா வடு வெளியீட்டு விழா

தமிழினி வெளியீடாக, சயந்தனின் ஆறாவடு நாவல் சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளிவருகிறது. கன்னிமரா நூலக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் இதன் வெளியீட்டு விழா 3.1.2012 செவ்வாய்க்கிழமை மாலை 4.30க்கு நடைபெறுகிறது.
ராஜேந்திர சோழன் தலைமையில் விருபா குமரேசன் நூலை வெளியிட, சோமிதரன் முதல் பிரதி பெற்று உரையாற்றுகிறார்.
புத்தாண்டைப் புத்தக நிகழ்ச்சியுடன் தொடங்குவதே மங்களகரமானது.

இந்த வருடம் என்ன செய்தேன்?

ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் சில திட்டங்கள் வகுப்பேன். கூடியவரை அதன்படியே நடக்க முயற்சி செய்வேன். பெரும்பாலும் சொதப்பியதில்லை. ஏனெனில் சாய்ஸில் விடுவதற்கென்றே எப்போதும் சிலவற்றைச் சேர்த்து திட்டமிடுவது என் வழக்கம். ஆனால் இந்த 2011 மட்டும் எனக்கு வேறு மாதிரி அமைந்தது. திட்டமிட்ட எதையும் செய்யாமல், திட்டமிடாத எத்தனையோ காரியங்களை இந்த ஆண்டு செய்திருக்கிறேன். யோசித்துப் பார்த்தால், முற்றிலும்...

குற்றியலுலகம்

ட்விட்டராகப்பட்டது, கிபி 2006ம் வருடம் மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டு, 2008ம் வருடம் மே மாதம் 25ம் நாள் முதலாக என்னால் பயன்படுத்தப்பட்டு வருகிற ஒரு சமூக இணையத்தளம். என்ன வேண்டுமானாலும் எழுதலாம்; ஆனால் 140 கேரக்டர்களுக்குள் முடியவேண்டுமென்கிற இதன் கொள்ளளவு சார்ந்த சவால் என்னை இதன்பால் ஈர்த்தது. ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை இந்தப் பக்கம் நான் போகாமலிருந்த தினமென்று ஒன்றில்லை.

பானைக்குள் பூதம்

ஒரு கதை எழுதியிருக்கிறேன் என்று என் மகள் (வயது 7) ஒரு தாளை நீட்டினாள்.  ஏற்கெனவே சொல்லப்பட்ட கதைதான். ஆயினும் மொழி அவளுடையது.
கீழே அவள் எழுதிய வர்ஷன். வாக்கிய அமைப்பு, ஒற்றுகள் எதையும் மாற்றவில்லை. டைப் செய்தது மட்டுமே என் பணி.

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி