ArchiveApril 2012

How to Name it?

இன்றைய தினம்,  என் வாழ்வின் பெருமகிழ்ச்சியான நாள்களுள் ஒன்று.  பல வருடக் கனவான எலக்டிரானிக் கீ போர்ட் ஒன்றை [Casio CTK 2200] இன்று வாங்கினேன். பேசிக்குக்குப் பக்கத்து வீட்டு மாடல்தான். ஆனாலுமென்ன. நான் கடையனிலும் கடையன். எனக்கு இது போதும்.

The Real Salute

The Real Salute என்னும் குறும்படத்தின் லிங்க்கை அதன் இயக்குநர் ஷக்தி எனக்கு அனுப்பியிருந்தார். ஒரு குறும்படத்தின் நோக்கமும் வெளிப்பாடும் எப்படி அமையவேண்டும் என்பதை மிகச் சரியாகக் காட்டுகிற படமாக இது இருக்கிறது. வெறும் மூன்றரை நிமிடப் படம்தான். ஆனால் ஓடி முடித்ததும் உருவாகிற உணர்வெழுச்சி வெகுநேரம் மனத்தைவிட்டு நீங்காதிருக்கிறது. தேச பக்தி என்பதும் கொடியின்மீதான மரியாதை என்பதும் காலிகளாலும் போலி...

உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக

வாசக நண்பர்களுக்குத் தமிழ் புத்தாண்டு தின அட்வான்ஸ் வாழ்த்துகள். நாளை மதியம் 1.30 மணிக்கு ஜெயா டிவியில் சிறப்புத் திரைப்படமாக நான் வசனம் எழுதிய தம்பி வெட்டோத்தி சுந்தரம் ஒளிபரப்பாகிறது. Ofcourse, உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக. கரண், அஞ்சலி, பாலா சிங், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றோர் நடித்திருக்கிறார்கள். பாடல்கள் வைரமுத்து, இசை வித்யாசாகர். இயக்கம் வி.சி. வடிவுடையான். இப்படம் வெளியானபோது...

ரைட்டர்தமிழ்பாராபேப்பர்டாட்நெட்காம்

சில தொழில்நுட்பக் காரணங்களால் இன்று இத்தளம் செயல்படுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. தளம் இயங்காது போயிருந்தால்கூடப் பரவாயில்லை. தமிழ்பேப்பர் தளத்துக்குப் போக முயற்சி செய்தவர்களுக்கு உரல் இங்கே ஃபார்வட் ஆகியிருக்கிறது. இயங்காத இத்தளத்துக்கு அந்தத் தளத்தின் உரல் எப்படி அழைத்துச் செல்கிறது, ஏன் அழைத்துச் செல்கிறது என்று கேட்டு காலை முதல் ஏகப்பட்ட விசாரிப்புகள். ரைட்டர்பாராடாட்காம்...

மீள்வணக்கம்

நண்பர்களுக்கு வணக்கம். கொஞ்சகாலமாக இந்தப் பக்கம் வர இயலாமல் போனதற்கு என் பணியின் தன்மை காரணம். நேரத்தைத் துரத்தவேண்டிய நிர்ப்பந்தம். இணையத்திலிருந்துதான் விலகியிருந்தேனே தவிர, எழுத்திலிருந்தல்ல. இனி அவ்வப்போது வர இயலும் என்று நினைக்கிறேன். அதே வேலைப்பளுதான்; ஆயினும் இனி சற்றே ஒழுங்கு கடைப்பிடிக்க முடியுமென்று நினைக்கிறேன். பழகிவிட்டால் சிரமமானவை எல்லாம்கூட  சிரமமென்பது மறந்துவிடுகிறது.

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me