ArchiveJune 2012

ஓ, மரியா!

ட்விட்டரில் திடீரென்று டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவின் பெயரைக் குறிப்பிட விரும்பி, மறந்துபோய்த் தொலைந்தேன். எப்போதோ படித்த அவரது பேட்டி ஒன்றுமட்டும் நினைவில் இருந்தது. அதை எடுத்து வைத்திருந்த ஞாபகமும். அதைத் தேடிப்பிடித்து மீண்டும் வாசித்தபோது, மரியாவைக் குறித்து ஒரு கட்டுரையும் எழுதியிருப்பது நினைவுக்கு வந்தது. அது இது. 2008 அல்லது 09ல் எழுதப்பட்ட கட்டுரை என்று நினைக்கிறேன். இப்போது எதற்கு...

குசலவபுரி என்கிற கோயம்பேடு

வெகு வருஷங்களுக்கு முன்னால் கல்கியில் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். ராமேஸ்வரம் போகும் வழியில் ராமர் குரோம்பேட்டைக்கு வந்து தங்கியிருக்கிறார் என்று அழிச்சாட்டியம் பண்ணும் ஒரு மாமாவைப் பற்றிய கதை. இப்போது தோன்றுகிறது. அக்கதை உண்மையில் நடந்ததாகக் கூட இருக்கலாம். கோயம்பேட்டுக்கு சீதை வந்திருக்கும்போது ஏன் குரோம்பேட்டைக்கு ராமர் வந்திருக்க முடியாது?

காலத்தின் கோலக்கொலைக் குற்றபக்கெட்

நவீன ஓவியக்கலையானது கிபி 18ம் நூற்றாண்டுக்குச் சிலபல ஆண்டுகள் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ தோன்றியிருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சுமார் இருநூறு ஆண்டுகளில் அதன் வளர்ச்சியாகப்பட்டது விலைவாசியைப் போல் தறிகெட்டு மேலேறிவிட்டதை ஓவியரல்லாதோர் அதிர்ச்சியுடன் கவனித்து வந்திருக்கிறார்கள். எல்லா பிரச்னைகளுக்கும் மூலக்காரணம் இந்த ஐரோப்பியர்கள்தான். நாடு பிடித்தோமா, நிறைய...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி