ArchiveOctober 2014

சாந்தி முகூர்த்தம்

சில தினங்களுக்கு முன்பு ஆப்பிள் வெளியிட்ட புதிய இயங்குதளமான Yosemiteக்கும் நேற்றிரவு வெளியான iOS 8.1க்கும் என் பிரதியில் நல்லபடியாக சாந்தி முகூர்த்தம் நடத்தி வைத்தேன். ஓர் இயங்குத் தளம் இத்தனை வியப்பளிக்குமா, வசீகரிக்குமா என்று இன்னமும் நம்ப முடியவில்லை. இதற்குமேல் தொழில்நுட்பத்தில் என்ன இருந்துவிடப் போகிறது என்று சென்றமுறை தோன்றியது போலவேதான் இப்போதும் தோன்றியது. இப்போது என் கருவிகளின்...

புதிய பதிப்பு

  மேற்கண்ட எனது சில புத்தகங்கள் மதி நிலையம் வாயிலாகத் தற்போது மறு பிரசுரம் கண்டுள்ளன. இவ்வருட இறுதிக்குள் இன்னும் சில புத்தகங்கள் இவ்வாறாக வரும் என்று நினைக்கிறேன். பிரதி வேண்டுவோர் mathinilayambook@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். ஆன்லைனில் வாங்கும் வசதி உண்டா என்று சம்பிரதாயமாக ஒரு கேள்வி உடனே வருவது இந்நாள்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. என்.எச்.எம்...

தொகுப்புக்கு உதவி தேவை

ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சியில் என்னுடைய சிறுகதைகளின் தொகுப்பொன்றைக் கொண்டுவரலாம் என்று நினைத்தேன். நான் சிறுகதை எழுதி நாளாகிவிட்டது. ஆனால் இப்போதும் அவ்வப்போது யாராவது பழைய கதைகளைக் குறிப்பிட்டோ, புத்தகம் கேட்டோ எழுதுகிறார்கள். இன்று ஒளிப்பாம்புகள் எங்கே கிடைக்கும் என்று ஒரு நண்பர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார்.

காலமும் காந்தியும் கதைகளும்

[காந்தி சிலைக் கதைகள் தொகுப்புக்கு நான் முன்னர் எழுதிய முன்னுரையை இன்று காந்தி டுடே இணையத் தளத்தில் கண்டெடுத்தேன். பிழை திருத்தம் மட்டும் செய்து இங்கு மறு பிரசுரம் செய்கிறேன். சுநீல் கிருஷ்ணனுக்கு நன்றி.] காந்தியை எனக்குப் பிடிக்கும். அவரை விமரிசிப்பதும், பிடிக்காது என்று சொல்லுவதும் ஒரு நாகரிகம் ஆகியிருக்கும் காலத்தில் இந்த ஒரு வரி கருத்து இலேசான புன்னகை வரவழைக்கலாம். உண்மையில், அத்தகையவர்களைப்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version