ArchiveNovember 2014

அட்டைப்படங்கள்

எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது ஐந்து புத்தகங்கள் வெளிவருவது பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தேன். இங்கே அந்த அட்டைப்படங்கள். இவை தவிரவும் ஒன்றிரண்டு நூல்களின் மறுபதிப்புகளும் வெளிவரக்கூடும் என்று நினைக்கிறேன். உறுதியானதும் தெரிவிக்கிறேன்.

இங்க்கி பிங்க்கி பாங்க்கி

திட்டமிட்டபடி என் சிறுகதைகளின் முழுத் தொகுப்பை இந்த ஆண்டு கொண்டுவர முடியவில்லை. அது எதிர்பார்க்கும் கடும் ஊழியத்தைக் கொடுக்கத் தற்சமயம் என்னால் இயலவில்லை என்பதே காரணம். அடுத்த வருடம் பார்க்கலாம், ஆண்டவன் சித்தம். எதிர்வரும் ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சி சமயம் கீழ்க்கண்ட என் நூல்கள் வெளியாகின்றன. 1) சந்து வெளி நாகரிகம் – ட்விட்டர் குறுவரிகள் தொகுப்பு 2) இங்க்கி பிங்க்கி பாங்க்கி –...

செத்தான்யா!

வழக்கமாக என்னைப் பார்க்க வரும் நண்பர், நண்பரொருவர் இன்று மாலை மிகுந்த ஆவேசமுடன் வந்தார். அவர் வந்த நேரம் நான் முந்தானை முடிச்சு சீரியல் பார்த்துக்கொண்டிருந்தேன். பிரேமாவின் சதித் திட்டங்கள் ஆயிரம் எபிசோடுகளைத் தாண்டியும் தொடர்ந்துகொண்டிருக்கும் அற்புதத்தை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. ‘வாங்க. இன்னிக்கி அமர்க்களமான எபிசோட். உக்காருங்க’ என்றேன். ‘சீ! என்ன மனுஷன் நீ. ருத்ரய்யா...

நாசமாய்ப் போகும் கலை

புத்தக வெளியீட்டு விழா வைக்காவிட்டால் எழுத்தாளனே இல்லை என்றார் நண்பரொருவர் என்னும் நண்பர் ஒருவர். தூக்கிவாரிப் போட்டது எனக்கு. என் பேர் தாங்கிய ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் சந்து பொந்துகளில் உலவிக்கொண்டிருக்கின்றன ஐயா! என்று சொல்லிப் பார்த்தேன். ம்ஹும். அதெல்லாம் கணக்கிலேயே சேராது என்று அடித்துச் சொல்லிவிட்டார். ‘ஒரு புத்தகம் வருகிறதென்றால் மூன்று மாதங்களுக்கு முன்னால் அதைப் பற்றிப்...

நக்கிப் பார்த்த கதை

நான் சாப்பிட்டுக்கொண்டிருந்த மேசையின் எதிர் இரு நாற்காலிகளுக்கு அந்த ஜோடி வந்து அமர்ந்தது. சர்வரானவன் பணிவுடன் நெருங்கி என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டான். (நான் தமிழர் உணவான தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.) ஜோடியில் ஆணாக இருந்தவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, ‘நீ இரு மஹேஷ், நான் சொல்றேன்’ என்று அவனைத் தடுத்துவிட்டு பெண்ணாக இருந்தவள் சொல்லத் தொடங்கினாள். பனீர் புலாவ் ஒரு ப்ளேட். ஜீரா ரைஸ்...

காகிதப் படகில் சாகசப் பயணம்

கருணாகரனை முதல்முதலில் பார்த்தபோது இந்த ஆசாமி கொஞ்சம் முசுடு என்று தோன்றியது. ஹலோ என்றால் ஹலோ என்பார். ஏதாவது கேட்டால் எத்தனை சொற்களில் கேட்கிறோமோ, அதில் சரி பாதி சொற்களில் பதில் சொல்வார். குமுதம் அலுவலகத்தில் என் கேபினுக்குப் பக்கத்து கேபினில் அவர் இருந்தார். ஒரு நாளில் நூறு முறையாவது நான் அந்தக் கண்ணாடிச் சுவரைத் திரும்பிப் பார்ப்பேன். ஒருமுறையும் அவர் நிமிர்ந்தோ, திரும்பியோ பார்த்ததில்லை...

DND

சார் எங்க இருக்கிங்க? அர்ஜெண்ட்டா உங்கள பாக்கணும். ஒரு தொலைபேசி உரையாடலின் முதல் வரி இப்படியாகத் தொடங்கினால் எதிர்முனையாளர் ஏதேனும் ஒரு செய்தித் தொலைக்காட்சியில் இருந்து அழைக்கிறார் என்று பொருள். இன்னிக்கு செவன் தர்ட்டி நியூஸுக்கு ஒரு பைட் வேணும் சார் என்பது இரண்டாவது வரி. எந்தத் தாலிபனாவது எங்காவது துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பான். இல்லாவிட்டால் இராக்கில் எவனாவது மசூதியிலோ பாலத்திலோ...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me