ArchiveAugust 2015

note to self

பத்திரிகை செத்துப் பலகாலமாச்சு
பக்கம் போகாதே, பாழ்
புத்தகம் எழுதாதே
ராயல்டி வராது
ஃபண்டட் சீரியலில் ஒதுங்காதே
பாதியில் தூக்கிவிடுவார்கள்
சினிமா வேண்டாம்
ரிலீசாகாது
ஃபேஸ்புக் ட்விட்டரெல்லாம்
பத்து காசுக்குப் பிரயோசனமில்லை
எழுதத் தெரிந்தால் ஶ்ரீராமஜெயம் எழுது
போகிற காலத்தில் புண்ணியம்.

(கர்ம) வினைத் தொகை

ஒரு வரி. ஒரே ஒருவரிக் கோபம். கோபம் கூட இல்லை அது. விவரிக்க முடியாத ஒரு பெருந்துயரத்தின் மிக மெல்லியக் கசிவு. நேற்று முதல் என்னைச் செயல்படவிடாமல் அடித்துக்கொண்டிருக்கிறது அந்தப் பெரியவரின் சொல். அவரை எனக்குக் கடந்த ஓராண்டாகத்தான் தெரியும். அவரைக் குறித்து நான் அறிந்த முதல் தகவல் அவர் ஒரு கடன்காரர் என்பது. இன்றுவரை இதை மட்டுமே விரிவாக, இன்னும் விரிவாக, மேலும் விரிவாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்...

ஆயிரம் ரூபாய் தீவிரவாதம்

ஆயிரம் பக்கப் புத்தகங்களை நானே எழுதியிருக்கிறேன். ஆனால் ஆயிரம் ரூபாய் விலையுள்ள புத்தகத்தைப் பூமணிதான் எழுதியிருக்கிறார்.” என்று சிலகாலம் முன்னர் ஒரு ட்விட் போட்டேன். விதி வலிது அல்லது நல்லது. மாயவலையின் புதிய செம்பதிப்பு இப்போது ஆயிரம் ரூபாய் விலையில் வெளியாகியிருக்கிறது (மதி நிலையம்). கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இத்தனாம்பெரிய (கிட்டத்தட்ட 1300 பக்கங்கள்) குண்டு புஸ்தகத்தை மதி நிலையத்தார்...

வக்ரகால அதிசயம்

  கிமு 323ஆம் வருஷம் ஜூன் மாதம் பத்தோ பதினொன்றோ தேதியன்று கிரேக்கமாதேசத்தில் அலெக்சாண்டர் காலமானபோது இயேசுநாதர் பிறந்திருக்கவில்லை. ஆனால் ஆசியாக் கண்டத்தில் பல்லவபுர நகராட்சிக்கு உட்பட்ட பிராந்தியமான குரோம்பேட்டை தன் பெயரை மறைத்துக்கொண்டு அப்போதும் புவியில் இருக்கத்தான் செய்தது. அலெக்சாண்டர் காலமான காலத்தில் குரோம்பேட்டை என்பது ஒரு பெரிய வனம். ராமர் இலங்கைக்குப் போகிற வழியில் இந்த வனத்தில்...

முதலாம் சின்னதுரை

சிவசங்கரிக்கு எழுதத் தொடங்கிய இரண்டாம் மாதம், என் வீட்டில் வைத்து முதலாம் சின்னதுரைக்குக் கதை சொல்லிக்கொண்டிருந்தேன். அவர்தான் அப்போது அதற்கு வசனம் எழுதிக்கொண்டிருந்தார். படு பயங்கர உணர்ச்சிமயமான கட்டம். சித்தர், பாலாம்பிகாவுக்கு மந்திரோபதேசம் செய்துகொண்டிருக்கும்போது என்ன பேசுவார் என்று கண்ணை மூடிக்கொண்டு மனத்தில் தோன்றிய வரிகளை உணர்ச்சிமயமாகச் சொல்லிக்கொண்டே வரும்போது இந்த வரி தடுக்கியது...

வாசிக்க பலகுபவனின் கேள்வி

வணக்கம். எனது பெயர்….. பொறியில் படித்துள்ளேன், வயது 27. என்னுடைய தாத்தா மூலம் வாசிக்க ஆரம்பித்தேன். பணியில் சேர்ந்த பிண்பு புத்தகங்களின் வாசிப்பு அதிகமாகியது. பொண்ணியின் செல்வன், மோகமுள் நாவல்களை வாசித்தபின்பு ஆர்வம் அதிகரித்தது. இரண்டு ஆண்டுகளாக சென்னை மற்றும் ஈரோடு புத்தக கண்காட்சியில் சில புத்தகங்களை வாங்கி வாசித்தேன். ஈரோட்டில் தற்போது நடந்துகொண்டிருக்கும் புத்தக கண்காட்சிக்கு போகும்...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me