ArchiveApril 2016

பொன்னான வாக்கு – 36

ஒரு ஊரில் ஒரு ஆயா ஒரு டாஸ்மாக் வாசலில் வடை சுட்டுக்கொண்டிருந்தாள். குடிகாரர்கள் இருக்கும்வரை வடை விற்பனைக்கு என்ன பிரச்னை? அவ்வப்போது கடன் சொல்லிவிட்டு வடை தின்னும் ஒரு சில கபோதிகளோடு மல்லுக்கட்ட வேண்டியிருப்பது ஒன்றுதான் பாடு. ஆனால் பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். ஒரு நாள் ஒரு காகம் அங்கு பறந்து வந்தது. தட்டு நிறைய ஆயா சுட்டு வைத்த மசால் வடைகள். கமகமவென்று வாசனை வேறு. காகத்துக்குப்...

பொன்னான வாக்கு – 35

ரெண்டு நாளாக மனசே சரியில்லை. துக்கம் தொண்டையை அடைக்கிறது. விதியைப் பார்த்தீர்களா? எத்தனைக் கொடூரமும் கயவாளித்தனமும் அதற்கு இருந்தால், நாளும் பொழுதும் மக்களுக்காகப் பாடுபடும் தலைவர்களை இப்படிப் போட்டு வாட்டி வறுக்கும்? பிரத்தியேகமான சங்கதி எதுவுமே ஒரு மனுஷனுக்கு இருக்கக்கூடாது என்றால் என்ன அர்த்தம்? அட அள்ளிக்கொடுக்க வேண்டாம். சின்னச் சின்ன சலுகைகள்? அதுவுமா தப்பு? சுக சௌகரியங்களில் சலுகை...

பொன்னான வாக்கு – 34

என்னவொரு அனல்; எப்பேர்ப்பட்ட தகிப்பு! ஒரு ஜெயலலிதாவால் உருவாக்க முடியாத பரபரப்பை, ஒரு கருணாநிதியால் ஏற்படுத்த முடியாத திடுக்கிடும் திருப்பத்தை, கடலைமிட்டாய் க்ஷேத்ரமாம் கோயில்பட்டியில் இருந்து வைகோ சாதித்திருக்கிறார். தேவர் சிலைக்கு வைகோ மாலை அணிவிக்கப் போன அந்த வீடியோவைப் பார்த்தேன். சூடும் ருசிகரமும் உணர்ச்சிமயமும் தாண்டவமாடிய கண்கொள்ளாக் காட்சி. கருப்பு சால்வையும் பச்சைத் தலைப்பாகையுமாக...

பொன்னான வாக்கு – 33

ஸ்டாலினின் தேர்தல் பிரசாரப் பேச்சொன்றைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தேன். திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத ஒரு வாக்குறுதியை அவர் மக்களுக்கு அளித்துக்கொண்டிருந்தார். ‘திமுக வேட்பாளரை நீங்கள் வெற்றி பெற வையுங்கள். சட்டசபை நடக்கும் தினங்கள் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் அவர் தொகுதியிலேயே இருப்பார். உங்கள் பிரச்னைகளுக்குச் செவி கொடுப்பார். உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார். ஜெயித்த...

பொன்னான வாக்கு – 32

சில பேருக்குச் சில ராசி உண்டு. என் தம்பி பத்தாவதோ ப்ளஸ் ஒன்னோ படிக்கும்போது ஒரு சட்டை போட்டிருப்பான். வெளிர் நீல நிறத்தில் அழுத்தமான நீலமும் சிவப்பும் அடுத்தடுத்து வரும்படியான கோடுகள் போட்ட ஒரு சட்டை. ஏதோ ஒரு பரீட்சைக்கு அந்தச் சட்டையைப் போட்டுக்கொண்டு போய் நல்ல மார்க் எடுத்துத் தேர்வாகிவிட்டதை நினைவுகூர்ந்து, அந்தச் சட்டையை ஸ்விஸ் பேங்கில் கொண்டு போய் வைக்காத குறையாகத் தேர்வுகளுக்கென்று மட்டும்...

பொன்னான வாக்கு – 31

நண்பர் ஒருவருக்கு பாரதிய ஜனதாவில் சீட்டுக் கொடுத்தார்கள். அவர் அந்தப் பக்கம் பச்சையாரஞ்சுத் துண்டு போட்டு போட்டோவுக்கு நிற்பதற்கு முன்னால் இந்தப் பக்கம் அவர் பேரில் ஒரு வாட்சப் குழுமம் ஆரம்பிக்கப்பட்டது. எப்படியாவது அவரைத் தேர்தலில் வெற்றி பெற வைத்துவிடுவதற்கு சஹிருதயர்கள் என்ன செய்யவேண்டும்? ஆலோசனைகளை அள்ளி வீச ஒரு தளம். தொழில்நுட்பம் சட்டை பாக்கெட்டுக்கு வந்துவிட்ட பிறகு கருத்துப் பரிமாற்றங்களை...

பொன்னான வாக்கு – 30

ஜெயலலிதாவின் வேட்பாளர் மாற்ற வைபவத்தை நக்கலடித்ததற்குக் கைமேல் பலன். இந்த வேகாத வெயில் காலத்தில் திமுகவினர் வேட்பாளர் மாற்றம் கோரி கல்யாண் ஜுவல்லர்ஸையே விஞ்சுமளவுக்குப் புரட்சிப் போராட்டங்களில் இறங்கிவிட்டார்கள். சரித்திரம் இதற்கு முன் இத்தனை உன்னதமான உட்கட்சி ஜனநாயகப் போராட்டங்களைக் கண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. எப்படியானாலும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசித் தினம் வரை...

பொன்னான வாக்கு – 29

1996ம் வருஷம். பொதுத்தேர்தல் களேபரத்தில் வடக்கத்தி மாநிலங்கள் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்தன. ஒரு நாலைந்து மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து தேர்தல் குறித்து எழுதுவதற்காகப் போயிருந்தேன். டெல்லியிலிருந்து பிகார். அங்கிருந்து மேற்கு வங்காளம். அப்படியே அசாம். திரும்பும்போது உத்தர பிரதேசம். அப்போது யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த கணபதி, லக்னோ வந்திருந்தார். ‘நாளைக்கு...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me