ArchiveMay 2016

பொன்னான வாக்கு – 40

வெயிலுக்கு பயந்து பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயேதான் இருக்கிறேன். இருந்தாலும் விதியின் சதியால் திடீர் திடீரென்று எங்காவது கிளம்பவேண்டியதாகிவிடுகிறது. போன மாதமெல்லாம் பறக்கும்படை வாகனங்கள் ஆக்கிரமித்திருந்த சாலைகளை இப்போது பெரும்பாலும் பிரசார ஆட்டோக்கள் பிடித்துவிட்டன. பிரமாதமான ஊர்வலங்களெல்லாம் இல்லை. ஒரே ஆட்டோ. உள்ளே ஒரு டேப் ரெக்கார்டர். முயல் காது மாதிரி முன்னால் பறக்கும் கட்சிக்கொடிகள்...

பொன்னான வாக்கு – 39

கடந்த ரெண்டு மூணு தினங்களாக தினமலர் வெளியிட்டு வரும் கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பார்த்து யார் கிளுகிளுப்பு அடைகிறார்கள், யாருக்கு வெயிற்கால டயரியா சங்கடம் உற்பத்தியாகியிருக்கிறது என்பது ஒரு புறம் இருக்கட்டும். இந்த முடிவுகளின் ஓர் அம்சம் உண்மையிலேயே மிகுந்த வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. தமிழகத்தின் ஆகச்சிறந்த மூன்றாவது அணியாக ‘நோட்டா’ உருவெடுத்துவிடுமோ என்பதுதான் அது.

பொன்னான வாக்கு – 38

1987ம் வருஷம் நான் படித்துக்கொண்டிருந்த கல்லூரியில் மாணவர் மன்றத்துக்குத் தேர்தல் நடத்தினார்கள். கனத்த கலாட்டா. சரவெடி அட்டூழியங்கள். பாட்டில் வீச்சுகள். பிட் நோட்டீஸ் மழை. அடிதடி. கட்சிக்காரர்களின் மறைமுக ஊக்குவிப்புகள். பிரின்சிபாலின் எச்சரிக்கை முழக்கங்கள். அந்தத் தேர்தலில் ராமமூர்த்தி என்றொரு பையன் செயலாளர் பதவிக்கோ, துணைத்தலைவர் பதவிக்கோ நின்றான். அவன் ஓர் உத்தம புத்திரன். பொதுவில்...

பொன்னான வாக்கு – 37

இன்றைக்குப் படு பயங்கர சீரியசான ஒரு சமாசாரத்தைப் பற்றி எழுதப் போகிறேன். யாராவது தப்பித்தவறி சிரித்து வைக்காதீர்கள். இது சிரிக்கிற சங்கதியல்ல. உன்னதமான ஆன்மிக மேட்டர். நீங்கள் தியானம் செய்திருக்கிறீர்களா? தவம்? இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. என்னவாவது ஒரு சமாசாரத்தை மனத்தில் நிலைநிறுத்தி, அதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதற்குப் பேர்தான் தியானம். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். கடந்த...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version