ArchiveJuly 2017

காணாதிருத்தல்

புத்தக அடுக்கின் நடுவே ஏதோ ஒன்று உருவப்பட்டு காணாமல் போயிருக்கிறது நானே எடுத்திருப்பேன் அல்லது யாராவது. ஒற்றைப் பல்லிழந்த கிழவியின் புன்னகைபோல் ஈயென்று இளிக்கிறது புத்தக அடுக்கு காணாமலான புத்தகம் எதுவாக இருக்கும் யோசனையில் கழிகிறது பொழுது அவசரத்துக்கு எடுப்பதையெல்லாம் வாரமொருமுறை அடுக்கிவிடுவேன் அவ்வப்போது புரட்டுவதை அப்போதைக்கப்போதே வைத்துவிடுவேன் எனக்குத் தெரியாமல் என் அறைக்கு வருவோர் இல்லை...

ருசியியல் – 30

கால் கிலோ அவரைக் காயை எடுத்துக்கொள்ளவும். நாரை உரித்துவிட்டு அப்படியே மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் உப்பு, மிளகாய்ப்பொடி போட்டுக் கலந்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணெய் விட்டுக் காயவைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் அவரை மாவை உள்ளங்கையில் வைத்து தட்டித்தட்டி அதில் போட்டுப் பொரித்தெடுக்கவும். சுவையான அவரை வடை தயார். மேற்படி...

10

ஓவியா அழுதிருக்கிறாள் கோவிந்து வந்திருக்கிறார் எப்போதுமில்லா வழக்கமாக எங்களூர் ஏடிஎம்மில் பணம் இருந்திருக்கிறது தக்காளி விலை ஏறி ராயப்பேட்டை புத்தகக் காட்சியில் விற்பனை சரிந்திருக்கிறது விஜய் சேதுபதிக்கு இன்னொரு நல்லபடம் பாதாம் நூறென்றால் கிராமா நம்பரா நேற்றும் குழுமத்தில் கேட்டிருக்கிறார் யாரோ ஒருவர் குறும்பட இயக்குநர் கைதாகி சமூகப் பொதுவெளியில் பிரபலமாகியிருக்கிறார் ஆந்திரத்தில் கஞ்சா கடத்தல்...

ஒரே ஒரு அறிவுரை

எலும்புகளை ஒரு சட்டியில் போட்டு வைத்திருந்தார்கள். அவை சூடாக இருந்தன. எட்டு மணி நேரத்துக்கு முன்பு வரை அப்பாவாக இருந்து, பிறகு பிரேதமாகி, இப்போது ஒரு சிறு மண் சட்டிக்குள் அவர் எலும்புத் துண்டுகளாக இருந்தார். சாம்பல் குவியலில் இருந்து பொறுக்கியெடுத்தவர் கைகள் சுட்டிருக்கும். காரியம் முடியவே ஆறு மணிக்குமேல் ஆகிவிட்டபடியால் உடனடியாக இடத்தைக் காலி பண்ணவேண்டியிருந்தது. சுடுகாட்டு ஊழியர்களுக்கும் வீடு...

ருசியியல் – 29

முன்னொரு காலத்தில் நிரம்ப சினிமாக் கிறுக்குப் பிடித்து அலைந்துகொண்டிருந்தேன். தேசத்தில் எங்கு திரைப்பட விழா நடந்தாலும் போய்விடுவேன். பொழுது விடிந்ததும் கர்ம சிரத்தையாகக் குளித்து முழுகி, வயிற்றுக்கு என்னவாவது போட்டுக்கொண்டு தியேட்டருக்குள் போய் உட்கார்ந்துவிட்டால், தொடர்ச்சியாக நாலைந்து படங்கள் பார்த்து முடித்த பிறகுதான் சுய உணர்வு மீளும். அதற்குள் மாலை அல்லது இரவாகியிருக்கும். பசிக்க...

கூறாமல் சன்னியாசம்

ஓடிப்போய்விடலாம் என்று நான் முடிவு செய்து, புறப்பட்ட தினத்தைத் தேவர்கள் ஆசீர்வதித்திருக்க வேண்டும். அன்று நல்ல மழை. சென்னை நகரம் அதற்கு முன் பார்த்திராத இயற்கைத் தாண்டவம் அது. கடற்கரையில் அபாயச் சின்னம் ஏற்றி, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, வீட்டுத் தரைகளில் ஈரக் கோணிகள் நிரம்பியதும் புறப்பட்டேன். ‘இந்த மழையில் எங்க கிளம்பறே கிருஷ்ணா? போய்த்தான் ஆகணும்னா குடை எடுத்துண்டு போ’ என்று...

குற்றமும் மற்றதும்

குற்றவாளிகளைக் குறித்துப் பொதுவாக நம்மில் யாரும் சிந்திப்பதில்லை. ஒரு கிரிமினலை செய்தித்தாள் மூலம் அறிய நேர்ந்தால் ஒன்று, வெறுப்படைவோம். அல்லது, விறுவிறுப்பான செய்தியாக மட்டுமே உள்வாங்கி, படித்த மறுகணம் மறந்துவிடுவோம். குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து ரயில் பயணங்களிலும் அலுவலக இடைவேளைகளிலும் எப்போதாவது விவாதம் நடக்கும். குற்றம் செய்தது யாராவது அந்தஸ்துள்ள பெரிய மனிதர் எனக் கண்டால் ஒருவேளை...

பொறுக்கிகள்

அந்தப் பயலுக்குப் பதினாறு அல்லது பதினேழு வயது இருக்குமா? இந்த வயதில் காதலிக்காமல் வேறு எப்போது செய்யப் போகிறான் அதையெல்லாம்? பார்ப்பதற்கு நல்ல கருப்பாக, துறுதுறுவென்று இருந்தான். கண்ணில் அப்படியொரு துடிப்புமிக்க கள்ளத்தனம். சுற்றுமுற்றும் பார்த்தபடியே காம்பவுண்டு சுவருக்கு உட்புறம் இருந்த பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தான். உடன் படிக்கிற பெண்ணாக இருக்கலாம். என்னவாவது வகுப்புக்குப் போகிற வழியில்...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me