ArchiveAugust 2017

நட்ஸ்

நேற்று நான் பயணம் செய்த இண்டிகோ விமானத்தில் எனக்கு எதிர் சீட்டில் இருந்த மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பம் எனக்குப் பழைய பாராகவனை நினைவூட்டியது.

சீரடிக்குச் சென்ற பூச்சாண்டி

நண்பர்களோடு இரண்டு நாள் சீரடி சென்று திரும்பினேன். இந்த இரண்டு நாள்களும் எழுத்து வேலை, தொலைபேசி அழைப்புகள் இரண்டும் இல்லை. படப்பிடிப்புகளுக்கும் பத்திரிகைகளுக்கும் தேவையானதை முன்கூட்டியே எழுதிக் கொடுத்துவிட்டுப் போனதால் இது சாத்தியமானது. பயணமோ, தரிசனமோ சிரமமாக இல்லை. உணவுதான் சற்றுப் படுத்திவிட்டது. எனது வழக்கமான ஒரு வேளை உணவு என்பதைக் கடைப்பிடிக்க முடியவில்லை. மதியம் கிடைத்ததை உண்டு, இரவு பாதாம்...

ருசியியல் – 34

என் சிறு வயதுகளில் நான் மிக அதிகம் வெறுத்த பண்டமாக வடைகறி ஏன் இருந்தது என்பதைச் சொல்வதற்கு முன்னால் ராமசாமி ஐயங்கார் எனக்குச் செய்த துரோகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். இந்த ராமசாமி ஐயங்காரை உங்களுக்குத் தெரியாது. இருபதாம் நூற்றாண்டின் எண்பதாவது வருடங்கள் வரைக்கும் சென்னை சைதாப்பேட்டையில் இவர் ஒரு முக்கியப் புள்ளி. தொளதொளத்த ஜிப்பாவும் எப்போதும் தாளமிடும் விரல்களும் பட்டணம் பொடி வாசனையுமாகப்...

ருசியியல் – 33

என்ன பேசிக்கொண்டிருந்தோம்? ஆம், அந்தக் கையேந்தி விருந்து. ரசனை மிக்க அந்தத் தயாரிப்பாளர் அன்றைய விருந்தின் மெனுவை மிகச் சிறப்பாகத் திட்டமிட்டிருந்தார். எல்லா கையேந்தி பார்ட்டிகளிலும் எப்போதும் இடம் பிடிக்கும் ஐட்டங்களாக அல்லாமல் புது விதமாக அவர் யோசித்திருக்கிறார் என்பது புரிந்தது. அன்று அங்கே சூப் இல்லை. மாறாக இரண்டு இஞ்ச் உயரமுள்ள கண்ணாடிக் குப்பிகளில் பச்சை, ஆரஞ்சு, வெளிர் மஞ்சள் நிறங்களில்...

ஒரு பிளேட் பிரும்மம்

ராமச்சந்திரனுக்கு என்னவோ ஆகிவிட்டதென்று சல்பேட்டா கோவிந்தன் பதைத்து வந்து சொன்னான். தொட்டித் தண்ணீரில், அளவு குறிக்கப்பட்ட கண்ணாடிக் குழாய்களை முக்கி, சளக், புளக் என்று ரகளை பண்ணிக்கொண்டிருந்த ஃப்ளூயிட் மெக்கானிக்ஸ் விற்பன்னர்கள் கோஷ்டி, பரிசோதனையை விடுத்து, சல்பேட்டாவைச் சூழ்ந்தது.
சல்பேட்டா, சொல்லின் செல்வன். முதல் வரியில் விஷயத்தைச் சொன்னான்.
“ராமச்சந்திரனுக்கு போல்ட் கழண்டுவிட்டது.”

காந்தி சிலைக் கதைகள்

காந்தி சிலைக் கதைகள் மின் நூல் இன்று வெளியாகியிருக்கிறது. புத்தகம் இங்கே. குமுதம் ஜங்ஷனில் ஆசிரியராக இருந்தபோது அதில் எழுதிய கதைகள் இவை. பிறகு கிழக்கில் புத்தகமாக வெளிவந்தது. இப்போது கிண்டில் மின் நூலாக. தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த என்னுடைய கதைகள் இவை. இந்தக் கதைகள் அனைத்திலும் காந்தி இருக்கிறார். ஆனால் நேரடியாக அல்ல. படு தீவிர காந்தி மறுப்பாளருக்குள்ளும் அவரது கூறுகள் ஒன்றிரண்டாவது...

பூக்களால் கொலை செய்கிறேன்

வயது என்னை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. எதிர்காலம், இரு சாத்தியங்களாயிருந்தது அப்போது. ஒன்று, நானொரு தேர்ந்த பொறுக்கியாகி விடலாம். அல்லது கவிஞனாக. கர்த்தருக்கு நன்றி. டெய்ஸி வளர்மதி என் பாதையில் காதலியாக எதிர்ப்பட்டதும் நான் கவிஞனாகிப் போனேன். நண்பர்கள் வியந்தார்கள். குறிபார்த்துப் பேராசிரியர்களின் வாகனங்களின் மேல் கல்லெறிவதும், ஸ்டிரைக்குகள் சமயம் கல்லூரி நிர்வாகத்தைக் கடுமையாகக் கண்டித்து...

ஒரு வருட பேலியோ – கிடைத்தது என்ன?

நண்பர்களுக்கு வணக்கம். இந்தக் குறிப்பை நான் இன்னும் சில தினங்கள் முன்னதாக எழுதியிருக்க வேண்டும். சில சொந்தப் பிரச்னைகளால் முடியாமல் போய்விட்டது. கடந்த ஆண்டு [2016] ஜூலை 23ம் தேதி வெஜ் பேலியோ கடைப்பிடிக்க ஆரம்பித்தேன். டாக்டர் ப்ரூனோ எனக்கு அடிப்படைகளை விளக்க, திரு. சங்கர்ஜி எனக்கு ஆரம்ப டயட் கொடுத்தார். மூன்று மாதங்களில் வாரியருக்கு இடம் பெயர்ந்தேன். அப்போது முதல் திரு சவடன் என்னைக் கவனிக்கத்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி