ArchiveFebruary 2018

பூனை சொன்ன கதை – நாடோடி சீனு

அன்பின் பா.ரா, வணக்கம். இந்தக் கடிதம் எதற்கென இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும். நிச்சயமாக இதனை ஒரு வாசகர் கடிதம் என்றோ இல்லை வாசகர் விமர்சனக்கடிதம் என்றோ கூட எடுத்துக்கொள்ளலாம். அதற்கான மொத்த உரிமையும் உங்களுக்கு இருக்கிறது. இன்றைக்குத்தான் பூனைக்கதை படித்து முடித்தேன். படித்து முடித்தபின் எழும் நினைவுகளை ஒவ்வொன்றாகச் சேகரித்து அதனை வார்த்தைகளாக்கிக் கொண்டிருக்கிறேன். இத்தருணத்தில்...

உண்ணாவிரதம் – சில விளக்கங்கள்

அன்புள்ள சதீஷ் குமார், உங்களுடைய மறுப்புக்குச் சற்று விரிவாகவே பதில் சொல்ல விரும்புகிறேன். அநியாயத்துக்கு நீங்கள் காந்தி, வள்ளலார், ரிஷிகளையெல்லாம் உதவிக்கு அழைத்துவிட்டதால் எனக்கு வேறு வழியில்லாமல் போகிறது. துரதிருஷ்டவசமாக காந்தியையும் வள்ளலாரையும் ஓரளவு படித்துத் தொலைத்தவனானதால் இச்சங்கடம். அதற்குமுன் ஒரு சங்கதி. ஜீயர் சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவிக்கவில்லை என்ற தொனியில் நீங்கள்...

உண்ணாவிரதம் – ஒரு மறுப்பு

ஃபேஸ்புக்கில் நான் எழுதிய உண்ணாவிரதம் இருக்க சில வழிமுறைகள் கட்டுரைக்கு சதீஷ்குமார் ஶ்ரீனிவாசன் பின்வரும் மறுப்பை அங்கு பதிவு செய்திருந்தார். இதற்கு என் பதில் தனியே வெளியாகியுள்ளது. Sathishkumar Srinivasan  பா.ரா அவர்களுக்கு… உடல் இளைக்க என்ன செய்ய வேண்டும் என்று எழுத நினைத்து, அதை ஜீயரின் உண்ணாவிரதத்தை குறித்து எழுதியது தவறு.. உண்ணாவிரதம் இருக்க உடல் தகுதி வேண்டும் என சொல்வதும், அதற்கு...

உண்ணாவிரதம் – சில குறிப்புகள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இரண்டாவது முறையாக உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிட்டார் என்று கேள்விப்பட்டேன். பாவமாக இருக்கிறது. ஐம்பது, ஐம்பத்தைந்து வயது தாண்டியவர்கள் திடீரென்று இம்மாதிரியான நடவடிக்கைகளில் இறங்குவது சரியல்ல. எதிர்ப்பைத் தெரிவிக்க, மிரட்டல் விடுக்க வேறு பல வழிகள் உள்ளன. உண்ணாவிரதம் மிகவும் சிரமமானது. அப்படியே அதை இருந்துதான் தீரவேண்டுமானால் சாகும்வரை என்று குறிப்பிடுவதை விட்டுவிட்டு...

வைணவ நாகஸ்வரக் கலை மரபு – ஆவண முயற்சி

சைவ நாகஸ்வர மரபை ஆவணப்படுத்திய லலிதா ராமின் பரிவாதினி அமைப்பு இப்போது வைணவ நாகஸ்வரக் கலை மரபை ஆவணப் படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது மிக முக்கியமானதொரு பணி.  நாகஸ்வர இசையின்றிக் கோயில்கள் கிடையாது. குறிப்பாக வைணவ ஆலயங்களின் ஒவ்வொரு வழிபாட்டு நடைமுறைக்கும் பிரத்தியேக இசை இணை உண்டு. உற்சவங்களில் இது உச்சம் பெறும். கோயில்களுக்குப் போகிறவர்களில் எத்தனைப் பேர் அங்கு ஒலிக்கும் நாகஸ்வர இசையை...

17ம் நூற்றாண்டு ஃப்ரெஞ்சு சுப்புடுவின் தொடைதட்டல்

14ம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள் மின் நூலுக்கு சி. சரவண கார்த்திகேயன் எழுதிய முன்னுரை: எங்கள் வீடு குமுதம் வாங்கும் வீடு. அது என் அம்மாவின் தேர்வு. பெண்களும் இலக்கியமும் சமமாய்க் கிளுகிளுப்பூட்டிக் கொண்டிருந்த என் பதின்மங்களின் மத்தியில் குமுதம் இதழ் கச்சிதமாய் எனக்கான தீனியாய் அமைந்திருந்தது. அது புத்தாயிரத்தின் தொடக்கம். குமுதம் வார‌ இதழ் நான்கைந்து எழுத்தாளர்களின் பெயர்களைத் திரும்பத்...

அஞ்சலி: தகடூர் கோபி

கோபியுடன் எனக்கு நேர்ப்பழக்கம் கிடையாது. ஏதோ ஒரு தமிழ் இணைய மாநாட்டில் ஒரு முறை சந்தித்திருக்கிறேன். அவ்வளவுதான். ஆனால் யுனிகோட் புழக்கத்துக்கு வருவதற்கு முந்தைய திஸ்கி காலத்தில் [கிபி 2000] இரா. முருகன் நடத்தி வந்த ராயர் காப்பி க்ளப் மூலம் அவரை எனக்குத் தெரியும். கணினியில் தமிழில் எழுதுவது – வாசிப்பது சார்ந்த சிக்கல்கள் அதிகம் இருந்த அக்காலத்தில் கோபி சலிக்காமல் மின்னஞ்சல்கள் மூலம்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி