ArchiveDecember 2018

யதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]

பா.ராகவன் தினமணி டாட்காமில் எழுதிய யதி நாவலை முழுவதும் வாசித்தேன். இதற்குமுன் அவர் எழுதிய பலவற்றை வாசித்திருந்தாலும் யதி தந்தது வேறு விதமான அனுபவம். யதி, துறவொழுக்கம் அல்லது ஒழுக்க மீறலைக் கருவாகக் கொண்டது. யோகிகள், சித்தர்கள், ஞானிகள் முதல் சாதாரண சன்னியாசிகள்வரை பலபேர் நாவலில் வந்தாலும் அவர்களின் தோற்றத்துக்கு அப்பால் உள்ளதைத் தோண்டி எடுப்பதே நோக்கம் என்பது தொடக்கத்திலேயே புரிந்துவிடுகிறது. ஒரு...

மெகா சீரியல்களை யார் பார்க்கிறார்கள்?

மெகா சீரியல்கள் பற்றிய எதிர்மறைக் கருத்துகள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளிவருகின்றன. சீரியல்களைக் கிண்டல் செய்வதும், நான் சீரியல் பார்ப்பதில்லை என்று சொல்வதும் ஒருவித மேல் தட்டு மனோபாவமாகச் சமீபகாலமாக நிலைநிறுத்தப்பட்டு வருவதைக் காண்கிறேன். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை முப்பத்து ஐந்து வயதுக்கு மேற்பட்ட பெண்களில் சுமார் எழுபது சதவீதம் பேர் சீரியல்களையே உலகமாக எண்ணி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்...

யதி – வாசகர் பார்வை 18 [இரா. ஶ்ரீதரன்]

குழந்தைப் பருவம் முதல் சாமியார் என்றதும் என் நினைவில் வருபவர், எங்கள் ஊர் (புதுகை) அதிஷ்டானம் சாந்தானந்த ஸ்வாமிகள். சிரித்த முகம். யாரைக் கண்டாலும் ஆசீர்வதிக்கும் பெருங்கருணை. பிறகு வயது ஏற ஏற காஞ்சி மகா பெரியவரின் துறவொழுக்கம் கண்டு தாள் பணிந்தேன். பின்னாளில் விதவிதமாக எவ்வளவோ சன்னியாசிகள் எங்கெங்கிருந்தோ முளைத்தார்கள். ஒவ்வொருவரைப் பற்றியும் பல்வேறு விதமான செய்திகள், தகவல்கள், பரபரப்புகள்...

யதி – முன்பதிவு – சலுகை விலை அறிவிப்பு

யதி ஜனவரி சென்னை புத்தகக் காட்சியில் வெளியாகிறது. புத்தக வடிவில் சுமார் ஆயிரம் பக்கங்கள். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் ‘பினாக்கிள் புக்ஸ்’ இதனை வெளியிடுகிறது. செம்பதிப்பு | ராயல் சைஸ் | விலை ரூ. 1000 டிசம்பர் 30-ம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு சலுகை விலை. ரூ.700 மட்டும். முன் வெளியீடு தொடர்பாக பினாக்கிள் புக்ஸ் அறிவித்துள்ள விவரம் கீழே. முன்பதிவு செய்ய...

யதி – வாசகர் பார்வை 17 [சி.ஜே. ஆனந்தகுமார்]

பா. ராகவனின் யதி அவரது முந்தைய படைப்புகளில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றது. சகோதரர்களான நான்கு சன்னியாசிகளின் கதையை ஒற்றை நபரின் மீள் நினைவாகச் சொல்லும் பாவனையில் இந்திய சன்னியாச மரபினை, அதன் பிரிவுகளை, காவி உடுத்தினாலும் உள்ளத்தின் அலைக்கழிப்பில் பறக்கும் சிந்தனையின் திசைகளை, எச்சங்களின் வலைப்பின்னல்களில் சிக்கித் தவிக்கும் துறவு மனங்களை எட்டிப் பிடிக்கின்றது. இந்த விதத்தில் சன்னியாசிகளின்...

யதி – வாசகர் பார்வை 16 [Ms Fairy]

இடைநிறுத்தம், நிறுத்தம், வரையறை, கட்டுப்பாடு, வழிகாட்டுதல், அடிக்கடி, பக்தன், அழிப்பவர், புனிதமான, தீவிரமான, தேடுபவர், துறவி, one who has controlled his passions and abandoned the world  என்றெல்லாம் பொதுவாக யதி என்னும் வார்த்தை விளக்கப்பட்டாலும் இவையெல்லாம் ஆண்பாலையே குறிக்கின்றது. ஆனால் பாராவின் யதியைப் படித்தபின்பு, இந்த யதி இப்புனைவில் நடமாடும் நான்கு சகோதரர்கள், இவர்களின் அப்பா...

ஒரு நெடும்பயணம்

இன்று அதிகாலை இரண்டு மணிக்கு வாணி ராணியின் இறுதிக் காட்சிகளை எழுதி முடித்தேன். விரைவில் தொடர் நிறைவு பெறுகிறது. சீசன் மாறுதல்கள் இல்லாமல் ஒரே கதையாக ஆறு ஆண்டுகள் (23.1.2013 முதல்), 1750 எபிசோடுகள் தொடர்ச்சியாக வெளியான ஒரே தொலைக்காட்சித் தொடர் இதுதான். இதில் ஒரு எபிசோட்கூட இன்னொருவர் இடையில் புகாமல் முழுக்க நானேதான் எழுதியிருக்கிறேன். [வாணிராணியின் திரைக்கதை ஆசிரியர் குமரேசன். அவரும் முதல்...

யதி – வாசகர் பார்வை 15 [துளசி கோபால்]

அன்புள்ள அனியன் பா.ராகவனுக்கு, யதி வாசித்தேன்.  ஐந்துநாள் தொடர் வாசிப்பு. அதன் பின் மூன்று நாட்கள் ஆச்சு  அதிலிருந்து மீண்டுவர! இதுவரை உங்கள் எழுத்துகளை அங்கொன்றும், இங்கொன்றுமா வாசிச்சிருக்கேனே தவிர , ஒரு முழுத் தொடரா வாசிக்க வாய்ப்பே கிடைக்கலை. யதி வாசகர் கடிதங்கள் பார்த்துட்டுத்தான் அப்படி என்ன இருக்குன்னு உள்ளே போனேன். போனேனா….. அவ்ளோதான். அப்படியே உள்ளே இழுத்துப் போயிருச்சு...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Exit mobile version