ArchiveMarch 2020

விருட்சம் பேட்டி

விருட்சம் 112வது இதழில் (மார்ச் 2020) வெளியாகியுள்ள எனது பேட்டி இது.  அழகியசிங்கர் யதி வாசித்து முடித்ததன் விளைவு எனக் கொள்ளலாம். எழுத வேண்டுமென்று எப்போது தோன்றியது? அந்தச் சமயத்தில் உங்கள் வயதென்ன? ஆறாம் வகுப்பில் இருந்தபோது குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் சிறுவர் பாடல்களால் ஈர்க்கப்பட்டு எழுத ஆரம்பித்தேன். அவரது சந்தங்களை அடியொற்றியே எழுதினேன். அவரே அவற்றை கோகுலத்திலும் பிரசுரம்...

work from home

குறித்து இப்போது நிறையப் பேசுகிறார்கள். ஆகஸ்ட் 2011 முதல் நான் அதைத்தான் செய்கிறேன். ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால் பழகிவிட்டால் பரம சுகம் இது. இதன் லாபங்களாவன: 1. வேளை தவறாமல், சூடு ஆறாமல், சுவையாகச் சாப்பிடலாம். டப்பா கட்டும் அவலம் இல்லை. 2. நினைத்த நேரத்தில் வேலை பார்க்கலாம். நினைத்த பொழுது படுத்துத் தூங்கலாம். 3. ஆபீசர் மாதிரி பேண்ட் சட்டை அணிந்து நாளெல்லாம் விரைப்பாகவே இருக்க...

கொரோனா – அன்றாடங்களைப் புரட்டிப் போடுதல்

இதற்கு முன்பும் இத்தகைய வைரஸ்கள் சில அச்சமூட்டியிருக்கின்றன. அவற்றைக் குறித்தும் நாம் நிறையப் பேசி அஞ்சியிருக்கிறோம். ஆனால் இந்தளவு அல்ல. இவ்வளவு உக்கிரமாக அல்ல. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை, மதுச்சாலைகளுக்கு விடுமுறை, வழிபாட்டுத் தலங்கள், கூட்டம் சேரும் திருமணம் போன்ற சம்பவங்களின் நிகழிடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்ற அறிவிப்பு, தொடர் சுகாதாரப் பிரசாரங்கள், தொலைபேசி வழி எச்சரிக்கை – இம்முறை...

எண்ணும் எழுத்து – ஒரு நிகழ்ச்சி

நாளை மாலை 6 மணிக்கு கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழவிருக்கும் ‘பொன் மாலைப் பொழுது’ நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். ‘எண்ணும் எழுத்து’ என்பது பொதுவான தலைப்பு. எனக்கு சொற்பொழிவாற்ற எப்போதும் விருப்பம் இருப்பதில்லை. சும்மா சிறிது நேரம் அறிமுக வார்த்தைகளாக ஐந்து நிமிடம் பேசிவிட்டு நிகழ்ச்சியைக் கலந்துரையாடலாக மாற்றிவிடலாம் என்று எண்ணியிருக்கிறேன். நான் 90களில்...

க்ரெடிட் கார்ட் அனுபவம்

எம்.எம். அப்துல்லா எழுதிய ஒரு குறுங்கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அதில் க்ரெடிட் கார்ட் உபயோகிக்காதீர்கள் என்று சொல்லியிருந்ததையும், அதை மறுத்து இலவசக் கொத்தனார் எழுதியிருந்ததையும் கண்டேன். பொதுவாக இந்தப் பொருளாதார விஷயங்கள் எனக்குத் தொடர்பில்லாதவை. சரியாக அல்ல; தவறாகக் கூடக் கருத்து சொல்ல லாயக்கில்லாதவன் நான். நீங்கள் கவனித்திருக்கலாம். பண மதிப்பு இழப்பு நிகழ்ந்த சமயத்திலோ, ஜிஎஸ்டி வந்தபோதோ அவை...

வெங்காயம், பூண்டு

உணவில் பூண்டு, வெங்காயம் சேர்ப்பது / சேர்க்காதது குறித்துச் சில நாள்களாக நிறைய கருத்துகள் கண்ணில் படுகின்றன. எல்லாம் அட்சய பாத்திரத்தின் அருள். அந்த இரண்டும் கெட்டது என்று நினைக்கக்கூடியவர்கள் இன்று அநேகமாக யாரும் இல்லை. ஆசாரம் என்று சொல்லி பூண்டு வெங்காயத்தை ஒதுக்கி வைத்த தலைமுறை இன்றில்லை. உண்மையில் பூண்டு வெங்காயம் மட்டுமல்ல. நிலத்துக்கு அடியில் விளையும் எதையுமே உணவில் சேர்க்கக்கூடாது...

தராத புத்தகங்கள்

நூல் வெளியானதும் அதன் ஆசிரியருக்குப் பதிப்பாளர் தரப்பில் இருந்து பத்து பிரதிகள் தருவார்கள். இதற்கு ‘ஆத்தர் காப்பி’ என்று பெயர். கொஞ்சம் குண்டு புத்தகமாக இருந்தால் ஐந்து பிரதிகள் வரும். உப்புமா கம்பெனி என்றால் ஐந்து, மூன்றாக மாறவும் வாய்ப்புண்டு. நூலாசிரியர்கள் தமக்கென்று சில பிரதிகள் வைத்துக்கொண்டு மிச்சத்தை நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் தருவார்கள். (சில வருடங்கள் கழித்து, என்...

மன் கி (பிசிபேளா) பாத்

என்னுடைய நிலமெல்லாம் ரத்தத்தில் பாலஸ்தீனியர் பகுதிகளில் யூதர்கள் எப்படிப் பரவி நிறைந்தார்கள் என்று விரிவாக எழுதியிருப்பேன். ஏழைகளுக்கு வங்கிகளால் தர இயலாத அளவுக்குக் கடன் கொடுத்து, அடைக்க வேண்டிய காலம் கடக்கும்போது கடனுக்கு ஈடாக நிலங்களை எழுதி வாங்கிக்கொண்டு விடுவார்கள். இது ஒரு வழி. இரண்டாவது, ரைட் ராயலாகவே ஒரு பெரும் தொகையைச் சொல்லி, அதற்கு நிலங்களை விற்கச் சொல்லிக் கேட்பார்கள். பணம் கிடைத்தால்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version