ArchiveAugust 2020

யதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N

அன்புள்ள ராகவன் சார், இது நான் உங்களுக்கு எழுதும் முதல் மெயில். சாருவுடன் பலமுறை பேசியிருக்கிறேன். அவரிலிருந்து தான் நான் வாசிக்கவே தொடங்கினேன். இந்திய ஞான மரபு, சித்தர்கள் குறித்து ஓரளவு வாசித்துக்கொண்டிருந்தேன். நிறைய அபுனைவுகள், எனக்கு அவற்றைப் புரிந்துகொள்ளும் பக்குவமோ பொறுமையோ இல்லை என்பதை வரிக்கு வரி நிரூபித்துக் கொண்டிருந்த வேளையில், எதேச்சையாக உங்கள் ‘யதி’ சலுகை விலையில்...

எழுத்துரு பிரச்னைகள்

இந்தக் குறிப்பு எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் மட்டுமானது. மற்றவர்கள் கடந்துவிடலாம். தமிழ்நாட்டில் எத்தனை பதிப்பகங்கள் உண்டோ, அத்தனை எழுத்துருக்களும் உண்டு. ஒவ்வொரு பதிப்பகமும் ஒவ்வொரு விதமான எழுத்துரு / என்கோடிங்கில் இவ்வளவு காலம் புத்தகங்களை அச்சிட்டு வந்திருக்கின்றன. இதில் மென்பொருள் என்றே சொல்ல முடியாத வன்னெழுத்துருக்களும் சேர்த்தி. (key உள்ள எழுத்துரு ஒன்றை நானே...

மகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை” என்னும் பாரதியின் வரிகள் சத்தமில்லாமல் நனவாகிக்கொண்டே வருகின்றது என்றால் அது மிகையில்லை. சரித்திரம் படிப்பது சிறந்தது. சரித்திரம் படைப்பது சாலச்சிறந்தது என்பதற்கிணங்க சரித்திரம் படைக்கும் ஆவல் எனக்குள் நெருஞ்சி முள்ளாய் நெருட, முதற்கட்டமாய் சரித்திரம் படிக்க முடிவு செய்த...

இறவான்: ஒரு மதிப்புரை – கோடி

இதை எப்படி சொல்லுவது, எதைக்கொண்டு புரிய வைப்பது வார்த்தைகளால் புரிய வைக்க இது சாதாரண கதை இல்லை. அப்படியே புரிய வைக்க முயற்சித்தாலும் உலகத்தில் உள்ள அனைத்து போதை பொருட்களையும் கலந்த கலவையை உண்டவனின் வார்த்தை எப்படி புரியும்படியாக இருக்கும். ஆம், நான் இப்போது இமயத்தின் உச்சியில் அமர்ந்து இருக்கும் பறவையைப்போல போதையின் உச்சியில் “ஆப்ரஹாம் ஹராரி”யின் இசையுடன் உலாவி கொண்டு இருக்கிறேன். இது...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version