ArchiveSeptember 2020

வண்டி வருது

வண்டி வருது என்பது திரை / சிறுதிரைத் துறைகளில் அடிக்கடிப் புழங்கும் இரு சொற்கள். யாரையோ எங்கோ அழைத்துச் செல்ல கார் அனுப்பப்பட்டிருக்கிறது; வந்துகொண்டிருக்கிறது; சில நிமிடங்களில் வந்துவிடும் என்பது இதன் பொருள். ஆனால், இதைச் சொல்லத் தொடங்கி குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகாமல் எந்த வண்டியும் என்றும் எங்கும் வந்ததில்லை. என் தனிப்பட்ட அனுபவம், ‘வண்டி வருது’ என்று நான் சொல்லத் தொடங்கினால்...

மாமல்லனின் ‘என் குரல்’

மாமல்லனைப் பற்றி நான் ஏதாவது எழுதினால் உடனே மெசஞ்சரில் வந்து அந்தாள் ஒரு கிறுக்கன், முரடன் என்று குறைந்தது பத்துப் பேராவது சொல்வார்கள். இவ்வளவு நாகரிகமாகக்கூட இல்லாமல் நீங்கள் ஒரு சைக்கோ என்றே அவரிடம் சொன்னேன், இந்தப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போதே. மனத்தில் தோன்றுவதைச் சற்றும் வடிகட்டாமல் எழுத்தில் கொண்டு வருவது எளிதல்ல. இது வெறும் கவன ஈர்ப்புக்காகவோ, தாதாத்தனம் காட்டுவதற்காகவோ...

தாடி ரகசியம்

எனக்கு தாடி வைத்துக்கொள்ளப் பிடிக்கும். தாகூர், ஓஷோ, டால்ஸ்டாய் போன்ற பலரை தாடியைக் கொண்டே முதலில் நெருங்கினேன். படைப்பு அறிமுகமெல்லாம் பிறகுதான். ஆனால் என்ன காரணத்தாலோ, என்னால் நான் விரும்பிய வண்ணம் தாடி வளர்க்க முடிந்ததில்லை. கருகருவென தாடி வளர்ந்த காலத்தில் வீட்டில் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைக்கும் போல இருந்த காலத்தில் எனக்கு வேலை கிடைத்துப் போகத் தொடங்கவேண்டியதானது. கல்கியில்...

முதுகு வலி, கழுத்து வலி

இரண்டு எழுத்தாளர்கள் பேசிக்கொள்ளும்போது முதுகு வலியைக் குறித்துப் பெரும்பாலும் பேசாதிருப்பதில்லை என்று நினைக்கிறேன். இரு தினங்களுக்கு முன்னர் செல்வேந்திரன் பேசினார். அவரும் முதுகு வலி மற்றும் கழுத்து வலி குறித்து ஒரு ஆவர்த்தனம் வாசித்துவிட்டுத்தான் அடுத்த விஷயத்துக்கே வந்தார். மணிக் கணக்கில்லாமல் உட்கார்ந்து எழுதுவோருக்கு இவ்விரு பிராந்தியங்களும் வலிக்கத்தான் செய்யும். வலியைக் குறைத்துக்கொள்ள சில...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி