ArchiveFebruary 2021

அலகிலா விளையாட்டு – சில நினைவுகள்

இன்று காலை ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாகக் கேட்டார். நீங்கள் எழுதியவற்றுள் உங்கள் மனத்துக்கு மிகவும் நெருக்கமான ஒரு நாவல் என்றால் எதனைச் சொல்வீர்கள்? இறவான் அல்லது யதியைச் சொல்வேன் என்று அவர் எதிர்பார்த்தார். உண்மையில் இந்தக் கணம் நினைத்துப் பார்க்கும்போதும் எனக்கு மிகவும் நெருக்கமானதென்று அலகிலா விளையாட்டைத்தான் சொல்லத் தோன்றுகிறது. ஒரு துறவி ஆகிவிட வேண்டும் என்ற வேட்கையுடன்...

வக்கும் வாக்கும்

அன்பின் பாரா, நீங்கள் ஏன் ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்கக்கூடாது? நேற்று ஒரு வாசகர் மெசஞ்சரில் இதனைக் கேட்டார். நடிகர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்கும்போது எழுத்தாளர்கள் செய்யக்கூடாதா? தாராளமாகச் செய்யலாம். ஆனால் அதற்கெல்லாம் ஒரு வக்கு வேண்டும். இதுவே ஜெயமோகனைச் சொல்கிறீர்களா? நியாயம். மய்யத்தைவிட அதிகமான தொண்டர் பலம் கொண்டவர் அவர். கொரோனா கஷ்ட காலத்தில் விஷ்ணுபுரம் வாசகர்...

ஒரு கடிதம் – பொன் மகாலிங்கம்

அன்பின் பாரா, வணக்கம். குமுதம் டாட் காமில், பாக் ஒரு புதிரின் சரிதம் தொடராக வந்ததில் இருந்து உங்கள் எழுத்து எனக்கு அறிமுகம். பின்னர் டாலர் தேசம், நிலமெலாம் ரத்தம் என அது விரிந்தது. இன்றளவும் எனக்கு, அந்த இரண்டு புத்தகங்களும் உங்கள் படைப்பில் மிகப் பிடித்தமானவை. சக செய்தியாளர்களிடம், அதைப் படிக்கச் சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருப்பேன். அதையெல்லாம் தாண்டி, உங்களை எனக்கு மிகவும் அணுக்கமானவனாக உணரச்...

இந்தப் புத்தகம் ஏன் கிடைப்பதில்லை?

ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் இருக்கக்கூடிய ஆகப் பெரிய ஆசை என்று எதைக் கருதுவீர்கள்? பெயர், புகழ், பிரபலம், ஊருக்கு நூறு ரசிகர்கள், வீதிக்கொரு சிநேகிதி, விழா எடுக்க ஒரு கூட்டம், போஸ்டரில் போட்டோ, ஏமாற்றாத ராயல்டி, அவ்வப்போது ஒரு விருது – இதில் ஒன்றா? நிச்சயமாக இல்லை. தான் ஒரு எழுத்தாளர் மட்டுமே என்று உணரும் யாரானாலும் அவன் அல்லது அவள் மனத்தில் எப்போதும் ஈரப்பதம் குறையாதிருக்கும் ஒரே பெரிய இச்சை...

பின் அட்டைக் காவியங்கள்

ஓர் எழுத்தாளன் தனது வாழ்வில் எதிர்கொள்ளக்கூடிய ஆக மோசமான இரண்டு பணிகள் நாவலுக்குச் சுருக்கம் எழுதுவதும் புத்தகங்களுக்குப் பின்னட்டை வரிகள் எழுதுவதும்தான். ஆங்கிலத்தில் இதற்கெல்லாம் ஏஜென்சிகள் இருக்கின்றன. பிரபலப்படுத்தும் நிறுவனங்கள் செய்ய வேண்டிய பணிகளை அங்கே எழுத்தாளர்கள் செய்ய அவசியப்படாது. நாம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தவர்கள் அல்லவா? இது நம் பணி. நாமேதான் செய்தாக வேண்டும். ஏஜென்சிக்கு...

பாடுபொருள்

என்னிடம் உள்ள நூற்றுக் கணக்கான கெட்ட பழக்கங்களுள் ஒன்று, பிறகு பார்க்கலாம் என்று தள்ளி வைப்பது. எதையெல்லாம் அப்படித் தள்ளி வைக்கிறேனோ, பெரும்பாலும் அது பிறகு நடப்பதே இல்லை. இந்தத் தள்ளிப் போடுவதில் முதன்மையானது, யாரையாவது சந்திக்க வேண்டும் என்று நினைத்து, அதைத் தள்ளிப் போடுவது. சென்ற சென்னை புத்தகக் காட்சி நடந்துகொண்டிருந்தபோது ஒருநாள் கண்காட்சியில் இருந்து விரைவாக வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me