ArchiveApril 2021

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 9)

இந்த அத்தியாயத்தில் சில திருப்பங்கள் இருக்கின்றன. இதுவரை சூனியன் மூலமாக சொல்லப்பட்ட கதையை இன்னொருவர் தொடரப்போவதாக சூனியன் சொல்கிறான். அவன் சொல்வதைப் பார்த்தால் கதையின் ஒரு குறிப்பிட்ட பகுதி இன்னொருவரால் சொல்லப்படும்போல் தெரிகிறது. அந்த இன்னொருவர் யார் என்பது சஸ்பென்ஸ். அந்த குறிப்பிட்ட பகுதியை அந்த இன்னொருவர் சொல்வதற்கு முன்னர் அந்த சம்மந்தப்பட்ட நபரே அதை சொன்னால் எப்படி இருக்கும்? அதுவும்...

கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 6)

மீண்டும் மாய உலகினை நோக்கி பயணிக்கிறது கபடவேடதாரி. வித்தியாசமாக சித்தரிக்கபட்டிருக்கும் நீலநிறவாசிகளின் தோற்றங்கள் மேலும் ஆர்வமாக கதையை வாசிக்க வைக்கிறது. அந்த தோற்ற சித்தரிப்பு கொடுரமாக இருப்பினும், வேறு மாதிரியான ஓர் உலகினில் பயணிப்பது அருமையாக இருக்கிறது. சூனியனை போலவே கோவிந்தசாமியை போலவே நானும் அதிர்ச்சியில் தான் இருக்கிறேன் அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை. ஒருவேளை கோவிந்தசாமியின் தோற்றமும்...

விழித்திருப்பவன்

பாரிஸ் ரெவ்யுவின் ஆர்ட் ஆஃப் ஃபிக்‌ஷன் பகுதியில் இடாலோ கால்வினோவின் நேர்காணலைப் படித்துக்கொண்டிருந்தேன். தன்னால் காலை நேரங்களில் எழுத முடிவதில்லை என்றும் பெரும்பாலும் மதியத்தில்தான் எழுதுவதாகவும் அவர் சொல்லியிருக்கிறார். வினோதமான பிரகஸ்பதி. நமக்கெல்லாம் மதியம் என்பது நள்ளிரவு. என்ன செய்ய. பழகிவிட்டது. ஆனால் இரவில் நெடுநேரம் கண் விழிப்பது தவறு என்று பொதுவாக அனைத்து மருத்துவர்களும் சொல்கிறார்கள்...

கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 5)

ஏன் தனக்கு கோவிந்தசாமியை பிடித்துப்போனது என்பதற்கு சூனியன் சொல்லிய காரணம் மிகவும் பிடித்திருந்தது. மூடனாக இருப்பது தவறல்ல. ஆனால் அவ்வாறு இருந்துக்கொண்டு அதை உணராது செய்யும் மேட்டிமைத்தனங்களை கண்டால் யாருக்கும் எரிச்சலாக இருக்குமல்லவா. இங்கு கோவிந்தசாமி அவ்வாறு இல்லை. அவனை மூடனாகவே ஆசிரியர் கதையில் சித்தரித்திருக்கிறார். அதை அவன் உணரவும் செய்கிறான். ஆனால் மாற்றிக்கொள்வதில்லை. அவ்வளவுதான். அந்த...

கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 8)

அதாவது கோவிந்தசாமி என்று பெயர் கொண்ட ஒருவர் இந்தியைப் தேசம் முழுவதற்குமான ஒரே மொழியாக அறிவித்து விட வேண்டும் என்று ஆவேசப்படுவதில் இருக்கின்ற நுட்பமான அரசியல் தான் இந்த அத்தியாயத்தில் நறுக்கென்று தைத்த ஒரு விஷயம். அதிலும் தெரியாத மொழியில் அந்த தலைவர் வசைபாடுவதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாமல் உணர்ச்சி வசப்படுவது எல்லாம் அங்கதத்தின் உச்சம். உள்ளே வரும் யார் வேண்டுமானாலும் குடியுரிமை பெற்று விடலாம்...

கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 4)

மாயாஜால உலகிலிருந்து நழுவி எதார்த்த உலகிற்கு பயணிக்க தொடங்கியிருக்கிறது. பிரமாண்டமாக பயணித்த முந்தைய அத்தியாயங்களில் இருந்து சற்று ஆசுவாசமாக இந்த அத்தியாயம் சிரிக்க வைத்து பார்க்கிறது. அதிலும் அந்த கடைசி வரி. கோவிந்தசாமிக்கு எதிர்மறையான சாகரிகா. எதிலும் அவளுக்கு இவன் பொருத்தமில்லை. இது எப்பிடி பயணிக்கும் எனும் ஆவல் எனக்குள் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. மாய உலகில் பயணிக்கும் அத்தியாயங்களில்...

கபடவேடதாரி – சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 8)

கோவிந்தசாமி பிறந்திருக்கக்கூடாது. பிறந்து விட்டான். அவன் அறிவுக்கு இயக்கங்கள் பக்கக் போயிருக்கக்கூடாது. போய் விட்டான். திருமணமாவது செய்திருக்கக்கூடாது. செய்துவிட்டான். மனைவி மீது அளப்பற்கறிய காதல் வைத்திருக்கக்கூடாது. வைத்து விட்டான். மனைவி வெறுக்குமளவு நடந்திருக்கக்கூடாது. நடந்து கொண்டான். ஒழிந்து போகிறதென விட்டு நீலநகரம் வந்திருக்கக்கூடாது. வந்து விட்டான். சூனியனை கண்டிருக்கக்கூடாது. கண்டு...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 8)

இந்த கோவிந்தசாமி இருக்கிறானே அவன் தனது நிழலை சூனியனுடன் அனுப்பிவிட்டு அவர்கள் திரும்ப வருவதற்காகக் காத்திருக்கிறான். அதற்குள் நாமும் அவர்களுடன் சென்று அந்த நகரைப்பற்றி ஒருசில விஷயங்கள் தெரிந்துவந்து விட்டோம். ஆனாலும் இன்னும் அந்நகரைப்பற்றி எதுவும் புரியாமல் சுற்றிவந்து கொண்டிருக்கும் அவனை நினைத்தால் கொஞ்சம் பாவமாக இருக்கிறது. அதிலும் அந்த வெள்ளைநிறப் பலகையில் வரும் தகவல்களெல்லாம் தன்னைப்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version